ரூ.2,149 விலையில் புதிய ஸ்டீல்பேர்டு விண்டேஜ் 5.0 ஹெல்மெட் அறிமுகம்!

தினசரி அலுவலகப் பயணம், நகர்ப்புற சாலைகளில் பயணம் செய்வோருக்கு ஏற்ற வகையில், புதிய ஹெல்மெட்டை ஸ்டீல்பேர்டு நிறுவனம் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பழமையான மோட்டார்சைக்கிள் வடிவமைப்பை விரும்புவோருக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ஹெல்மெட்டிற்கு விண்டேஜ் 5.0 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Steelbird Helmet

திறந்த முக வடிவமைப்பைக் கொண்ட இந்த ஹெல்மெட், பாரம்பரிய தோற்றத்துடன் நவீன பாதுகாப்பு அம்சங்களையும் ஒருங்கிணைக்கிறது. ஸ்டீல்பேர்டு விண்டேஜ் 5.0 என்ற பெயரில் வந்துள்ள இந்த ஹெல்மெட்டிற்கு ரூ.2,149 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் ஐஎஸ்ஐ மற்றும் டாட் ஆகிய இரண்டு பாதுகாப்புச் சான்றிதழ்களையும் பெற்ற ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினசரி இருசக்கர வாகனப் பயணிகளையும், பழமையான வடிவமைப்புகளை விரும்பும் வாடிக்கையாளர்களையும் இலக்காகக் கொண்டு இந்த தயாரிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. முழுமையாக முகத்தை மூடும் வகையிலான ஹெல்மெட்டிற்கு மாற்றாக, திறந்த முக வடிவமைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய கால மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்கள் பயன்படுத்திய ஹெல்மெட்களை நினைவுபடுத்தும் தோற்றத்தைப் பெறுகிறது. அதேசமயம் நவீன காலத் தேவைகளுக்கு ஏற்ற வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

Also Read

பாதுகாப்பைப் பொறுத்தவரையில், இந்த ஹெல்மெட்டின் வெளிப்புறக் கூட்டமைப்பு அதிக தாக்கத்தைத் தாங்கக்கூடிய தெர்மோபிளாஸ்டிக் பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உட்புறப் பகுதியில் அதிக தாக்கத்தைத் தாங்கும் ஏபிஎஸ் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய கட்டமைப்பு ஹெல்மெட்டின் பாதுகாப்புத் தன்மைக்கு முக்கியப் பங்களிக்கிறது. மேலும் ஐஎஸ்ஐ மற்றும் டாட் சான்றிதழ்களையும் இந்த தயாரிப்பு பெற்றுள்ளது.

இதில் ஹெல்மெட்டின் மேற்புற முன்பகுதியைத் தேவைக்கேற்ப மேலே அல்லது கீழே நகர்த்திக் கொள்ளலாம். மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள வைசர் கீறல் விழாத தன்மையைக் கொண்டுள்ளது. கூடுதலாக சூரிய வெளிச்சம் மற்றும் அதிகப்படியான ஒளியால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க ஸ்மோக் வைசரும் வழங்கப்படுகிறது.

வந்த வேகத்தில் மீண்டும் விடைபெற்றது பஜாஜ் பல்சர் 180 பைக்... ரசிகர்கள் ஏமாற்றம்!

நீண்ட நேரம் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்யும்போது ஏற்படும் அசகவுரியத்தைக் குறைக்கும் வகையில் இதன் உட்புறத்தில் மென்மையான மெத்தை அமைப்பு இடம்பெற்றுள்ளன. இதனுடன் காற்றோட்டத்தை மேம்படுத்தும் வகையிலான அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நகர்ப்புறப் போக்குவரத்து நெரிசலில் பயணிக்கும்போதும், நீண்ட தூரப் பயணங்களின்போதும் ஓட்டுனருக்கு தேவையான வசதியை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட்டை அணிவதையும் கழற்றுவதையும் எளிதாக்கும் வகையில் விரைவாகச் செயல்படும் சின் ஸ்ட்ராப் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தலையின் அளவிற்கேற்ப பொருத்தத்தைச் சரிசெய்துகொள்ள உதவும் அட்ஜஸ்டபிள் சைடு ஸ்ட்ராப்பும் இடம்பெற்றுள்ளது. ஹெல்மெட் சரியான முறையில் தலையில் பொருந்துவதற்கும், தினசரி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அளவுகளைப் பொறுத்தவரையில், இந்த புதிய ஹெல்மெட் நான்கு வெவ்வேறு அளவுகளில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறிய அளவான எஸ் மாடல் 560 மில்லி மீட்டர் அளவிலும், எம் மாடல் 580 மில்லி மீட்டர் அளவிலும் கிடைக்கிறது. இதுதவிர எல் மாடல் 600 மில்லி மீட்டர் அளவிலும், எக்ஸ்எல் மாடல் 620 மில்லி மீட்டர் அளவிலும் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் பழமையான வடிவமைப்பைக் கொண்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஸ்கூட்டர்களை விரும்புவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரெட்ரோ தோற்றம் கொண்ட மோட்டார்சைக்கிள்களைப் பயன்படுத்துவோர், அதற்குப் பொருத்தமான அணிகலன்களையும் தேர்வு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் ஸ்டீல்பேர்டு விண்டேஜ் 5.0 ஹெல்மெட், தோற்றத்தையும் பயன்பாட்டையும் இணைக்கும் தயாரிப்பாகச் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

ஸ்டீல்பேர்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் கபூர் கூறுகையில், பாதுகாப்பு, புதிய தொழில்நுட்பம் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தயாரிப்புகளை வழங்குவதில் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். ரெட்ரோ வடிவமைப்பை விரும்பும் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த புதிய ஹெல்மெட் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Article Published On: Thursday, November 19, 2026, 17:27 [IST]
English summary
Steelbird vintage 5 0 open face helmet price isi dot features
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out