ஓசூர் ஆலையில் 1 கோடி டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் உற்பத்தி... இமாலய எண்ணிக்கையை தொட்டு சாதனை!

இந்திய ஸ்கூட்டர் சந்தையில் குடும்பங்களின் நம்பிக்கையைப் பெற்ற மாடல்களில் டிவிஎஸ் ஜூபிடர் முக்கியமான இடத்தில் உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு அறிமுகமான இந்த ஸ்கூட்டர், தற்போது உற்பத்தியில் ஒரு கோடி யூனிட்டுகள் என்ற இமாலய எண்ணிக்கையை எட்டியுள்ளது. குறிப்பாக, சமீபத்திய ஆண்டுகளில் இந்த ஸ்கூட்டரின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்து வருகிறது.

அறிமுகம் செய்யப்பட்டு 13 ஆண்டுகள் இந்த ஒரு கோடி யூனிட்டுகள் உற்பத்தி என்ற இலக்கை எட்டி புதிய மைல்கல்லை கடந்துள்ளது. ஆனால், முதல் 50 லட்சம் யூனிட்டுகளை உற்பத்தி செய்ய 9 ஆண்டுகள் எடுத்த நிலையில், அடுத்த 50 லட்சம் யூனிட்டுகள் உற்பத்தியை வெறும் 4 ஆண்டுகளில் எட்டி உள்ளது. இந்த வேகமான வளர்ச்சிக்குப் பின்னால் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு தொடர்ந்து மாற்றங்களை மேற்கொண்ட அணுகுமுறை முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

TVS Jupiter

அதிக இடவசதி, வசதியான பயணம், சிறந்த மைலேஜ் மற்றும் அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்களை முன்னிறுத்தியது. குடும்பத்தில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஸ்கூட்டர் என்ற அடையாளத்தையும் உருவாக்கியது. குறிப்பாக, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஏற்ற வடிவமைப்பும், நகர்ப்புற பயணங்களுக்கு ஏற்ற நடைமுறையான அம்சங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவின.

ஆரம்பத்தில் 110 சிசி பிரிவில் மட்டுமே இருந்த ஜூபிடர், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப தனது தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தியது. கடந்த 2021ம் ஆண்டு ஜூபிடர் 125சிசி மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அதிக திறன் கொண்ட ஸ்கூட்டரை விரும்பும் வாடிக்கையாளர்களையும் கவர்ந்து இழுத்தது. இரண்டு மாடல்களும் வெவ்வேறு விலை மற்றும் பயன்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்தன.

Also Read

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரில் அதிக கவனம் பெற்ற அம்சங்களில் ஒன்று இருக்கைக்கு அடியில் வழங்கப்படும் இரட்டை ஹெல்மெட் சேமிப்பு வசதியாக குறிப்பிடலாம். அத்துடன், முன்பக்கத்திலேயே பெட்ரோல் நிரப்பும் வசதி இருப்பதால், ஒவ்வொரு முறையும் இருக்கையை திறக்க வேண்டிய அவசியம் இல்லை. அன்றாட அலுவலக பயணம், கடைகளுக்குச் செல்வது போன்ற பயன்பாடுகளில் இந்த வசதிகள் நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.

மேலும், ஐ-கோ அசிஸ்ட் தொழில்நுட்பம், மெட்டல் மேக்ஸ் பாடி அமைப்பு, பாடி பேலன்ஸ் தொழில்நுட்பம் மற்றும் டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸானெக்ட் இணைப்பு வசதி போன்றவை படிப்படியாக சேர்க்கப்பட்டன. வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப ஜூபிடர் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டது.

Also Read

கடந்த 2024ம் ஆண்டு ஜூபிடர் 110 புதிய வடிவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. வடிவமைப்பு, வசதி, மைலேஜ் மற்றும் அன்றாட பயன்பாட்டில் எளிமை ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனால் ஏற்கெனவே ஜூபிடர் பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதுடன், புதிய வாடிக்கையாளர்களையும் ஈர்க்கும் வாய்ப்பும் டிவிஎஸ் நிறுவனத்துக்கு கிடைத்தது.

டிவிஎஸ் ஜூபிடர் 110 மற்றும் ஜூபிடர் 125 என இரண்டு மாடல்கள் இருப்பது விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறைந்த விலையில் குடும்ப பயன்பாட்டுக்கான ஸ்கூட்டரைத் தேடுபவர்கள் முதல் அதிக திறன் மற்றும் கூடுதல் வசதிகளை விரும்புபவர்கள் வரை பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு தேர்வு வழங்குகிறது. இதுவே ஜூபிடர் விற்பனை தொடர்ந்து அதிகரிக்க உதவியிருக்கிறது.

ஓசூரில் உள்ள தொழிற்சாலையில் ஜூபிடர் ஸ்கூட்டரின் ஒரு கோடி யூனிட்டை உற்பத்தி செய்து இந்த புதிய மைல்கல்லை கொண்டாடியுள்ளது. இந்தியாவில் இந்த இலக்கை எட்டிய ஸ்கூட்டர் பிராண்டாக ஜூபிடர் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. போட்டி நிறைந்த ஸ்கூட்டர் சந்தையில், வாடிக்கையாளர்களின் தேவைகளை தொடர்ந்து புரிந்துகொண்டு செயல்பட்டால் நீண்ட கால வெற்றியை அடைய முடியும் என்பதற்கு ஜூபிடரின் வளர்ச்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Article Published On: Wednesday, November 25, 2026, 12:02 [IST]
English summary
Tvs jupiter one crore production units 13 years growth reasons
மேலும்... #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out