வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி 2027ல் துவங்குகிறது... தூத்துக்குடி ஆலையில் புதிய அசெம்பிளி லைன்!

இந்தியாவில் மின்சார கார் தயாரிப்பில் களமிறங்கியுள்ள வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம், அடுத்ததாக இருசக்கர மின்சார வாகனச் சந்தையிலும் தனது தடத்தைப் பதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக தூத்துக்குடி உள்ள தனது வாகன உற்பத்தி ஆலையை விரிவுபடுத்தி, மின்சார ஸ்கூட்டர்களைத் தயாரிப்பதற்கான உற்பத்திப் பிரிவு அமைக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வின்ஃபாஸ்ட் நிறுவனமும் எலெக்ட்ரிக் ஸ்ரகூட்டர்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனால் சந்தையில் புதிய போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே பல முன்னணி நிறுவனங்கள் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், வெளிநாட்டு நிறுவனமான வின்ஃபாஸ்ட் இந்தியாவிலேயே உற்பத்தி செய்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளது.

Vinfast Rasad EV

தமிழகத்தில் ஏற்கெனவே மின்சார கார்களைத் தயாரித்து வரும் வின்ஃபாஸ்ட், தனது உற்பத்தி நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இருசக்கர வாகனங்களுக்கென தனியான உற்பத்தி பிரிவை அமைத்துள்ளது. தூத்துக்குடி ஆலையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கான ஸ்கூட்டர்களின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை இறுதி செய்வதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

முதல்கட்டமாக இந்திய சந்தையில் இரண்டு மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த வின்ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளது. வரும் 2027ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள் இந்த வாகனங்கள் விற்பனைக்கு வரப்பட உள்ளதாக அந்நிறுவனத்தின் இந்திய இருசக்கர வாகனப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகள், பயன்பாட்டு முறை மற்றும் சந்தை எதிர்பார்ப்புகளை ஆய்வு செய்து, அதற்கேற்ப தயாரிப்புகளைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.

Also Read

மின்சார ஸ்கூட்டர்களில் பேட்டரியை சார்ஜ் செய்வதுடன், பேட்டரி மாற்றும் தொழில்நுட்பத்தையும் (Battery Swapping) வின்ஃபாஸ்ட் பரிசீலித்து வருகிறது. நகர்ப்புறப் பயணிகளுக்கு விரைவான பேட்டரி மாற்றம் உதவியாக இருக்கும் என்பதால், இந்த வசதி எதிர்காலத் திட்டங்களில் இடம்பெற வாய்ப்புள்ளது.

வாகனங்களை அறிமுகப்படுத்துவதுடன், அவற்றை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் விற்பனை மற்றும் சேவை நெட்வொர்க்கையும் வின்ஃபாஸ்ட் உருவாக்கி வருகிறது. இந்தியாவின் பல நகரங்களில் புதிய டீலர்களை இணைப்பது குறித்து நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருசக்கர வாகனப் பிரிவிலும் விற்பனை மையங்கள் மற்றும் சேவை வசதிகள் வலுப்படுத்தப்படுவது அதன் வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கும்.

Also Read

இருசக்கர வாகனச் சந்தையில் நுழைவதுடன், இந்தியாவில் தனது கார் வரிசையையும் விரிவுபடுத்த வின்ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளது. ஆண்டுதோறும் குறைந்தது இரண்டு புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் நோக்கில் நிறுவனம் செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மின்சார கார் மற்றும் ஸ்கூட்டர் என இரு பிரிவுகளிலும் வாடிக்கையாளர்களை கவர்வதற்கும், பல்வேறு பட்ஜெட், தேவைக்கு தக்க மாடல்களை கொண்டு வரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள வின்ஃபாஸ்ட் ஆலையின் விரிவாக்கம், தமிழகத்தின் மின்சார வாகன உற்பத்தித் துறைக்கு மேலும் வலுசேர்க்கும். புதிய தயாரிப்பு பிரிவுகள் உருவாக்கப்படுவதால், உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள், வினியோகச் சங்கிலி மற்றும் தொழில்நுட்பத் திறன் கொண்ட பணியாளர்களுக்கான வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் சந்தையில் ஏற்கெனவே பல நிறுவனங்கள் வலுவான போட்டியை உருவாக்கியுள்ள நிலையில், வின்ஃபாஸ்ட் தனது புதிய தயாரிப்புகள், உற்பத்தி வசதி மற்றும் விற்பனை வலையமைப்பு மூலம் எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களைக் கவரும் என்பது 2027ஆம் ஆண்டு தெரியவரும். குறிப்பாக தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் வின்ஃபாஸ்ட் ஸ்கூட்டர்கள், உள்நாட்டு சந்தையில் புதிய போட்டியாளராக உருவெடுக்க வாய்ப்புள்ளது.

Article Published On: Monday, November 23, 2026, 13:55 [IST]
English summary
Vinfast electric scooter new production line thoothukudi plant tamilnadu launch 2027
மேலும்... #VinFast
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out