சூளகிரியில் ரூ.779 கோடியில் அல்ட்ராவயலெட் BIGGA ஆலை கட்டுமானம் தொடங்கியது

இந்திய மின்சார இருசக்கர வாகனச் சந்தையில் தனது வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், பிரம்மாண்ட எலெக்ட்ரிக் இருசக்கர வாகன ஆலையை அல்ட்ராவயலெட் நிறுவனம் அமைக்க உள்ளது. ஓசூர் அருகே சூளகிரியில் உள்ள சிப்காட் பகுதியில் இந்த ஆலை அமைக்கப்பட உள்ளது. ரூ.779 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த புதிய தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணிகளை அல்ட்ராவயலெட் தொடங்கியுள்ளது. BIGGA ஃபேக்டரி என பெயரிடப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட தொழிற்சாலை, அந்நிறுவனத்தின் எதிர்கால உற்பத்தி விரிவாக்கத்திற்கு முக்கிய அடித்தளமாக அமைய உள்ளது.

இந்த புதிய தொழிற்சாலை முழுமையாகச் செயல்படத் தொடங்கியதும், ஆண்டுக்கு 2.5 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்களைத் தயாரிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் உற்பத்தித் திறனை பின்னர் ஆண்டுக்கு 5 லட்சம் வாகனங்களாக அதிகரிக்கும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இதனால், மிகப்பெரிய வேலைவாய்ப்புக்கான சூழலும் உருவாக உள்ளது.

Bigga Factory

இந்த ஆலையில் முதலில் நிறுவனத்தின் புதிய மின்சார ஸ்கூட்டரான Ultraviolette Tesseract தயாரிக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்போர்ட்ஸ், க்ராஸ்ஓவர், க்ரூஸர் மற்றும் ஸ்ட்ரீட் வகைகளைச் சேர்ந்த மின்சார மோட்டார்சைக்கிள்களையும் இங்கு உற்பத்தி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு வாடிக்கையாளர்களை இலக்காகக் கொள்ள முடியும்.

ஓசூர் அருகே உள்ள இந்த புதிய தொழிற்சாலை அமைக்கப்படுவதன் மூலம் ஆரம்ப கட்டத்தில் சுமார் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரடி வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி, உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள், சப்ளையர்கள், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை சார்ந்த சேவைகளுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும். இதனால் ஓசூர் சுற்றுவட்டாரத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.

Also Read

இந்த ஆலையில் நவீன உற்பத்தி தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. மனிதர்களுடன் இணைந்து செயல்படும் ரோபோக்கள், தானியங்கி உற்பத்தி வசதிகள், கேமராக்கள் மூலம் தரம் கண்காணிக்கும் அமைப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும், தொழிற்சாலை வளாகத்திலேயே வாகனங்களைச் சோதனை செய்வதற்கான டெஸ்ட் டிராக் வசதியும் அமைக்கப்பட உள்ளது.

ஓசூரில் புதிய ஆலை அமைக்கப்பட்டாலும், பெங்களூரில் உள்ள அல்ட்ராவயலெட் நிறுவனத்தின் தற்போதைய தொழிற்சாலை தொடர்ந்து செயல்படும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள், தற்போதைய உற்பத்தி நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் பெங்களூரு தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும். பெங்களூரு மற்றும் ஓசூர் இடையேயான தொழில்துறை தொடர்புகளும் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு உதவியாக இருக்கும்.

Also Read

இந்தியாவில் விற்பனையை அதிகரிப்பதுடன், வெளிநாட்டு சந்தைகளிலும் தனது மின்சார மோட்டார்சைக்கிள்களை விரிவுபடுத்த அல்ட்ராவயலெட் திட்டமிட்டு வருகிறது. புதிய தொழிற்சாலையின் அதிக உற்பத்தித் திறன், எதிர்காலத்தில் ஏற்றுமதிக்கான வாகனங்களைத் தயாரிக்கவும் உதவும். குறிப்பாக ஐரோப்பிய சந்தைகளில் நிறுவனத்தின் தயாரிப்புகளை அதிக வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகளை இந்த ஆலையானது வாய்ப்புகளை வழங்கும்.

ரூ.779 கோடி முதலீட்டில் சூளகிரியில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய தொழிற்சாலை, தமிழகத்தின் மின்சார வாகன உற்பத்தித் துறைக்கு முக்கியமான முதலீடாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் உதிரிபாக உற்பத்தியாளர்கள் உள்ள ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதியில், இருக்கும் நிலையில், அல்ட்ராவயலெட் நிறுவனத்தின் புதிய ஆலை தொழில்துறை வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் மின்சார இருசக்கர வாகன உற்பத்தியில் இந்திய அளவில் முக்கிய இடத்தைப் பிடிக்க இந்த தொழிற்சாலை நிறுவனத்திற்கு உதவுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Article Published On: Friday, November 27, 2026, 11:43 [IST]
English summary
Ultraviolette breaks ground 779 crore bigga factory hosur electric vehicles
மேலும்... #ultraviolette
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out