நிசான் சன்னி... மியூசிக் பிளேயர், ஏசி, இன்னும் பிற வசதிகள்!

டெஸ்ட் டிரைவ் செய்த சன்னி எக்ஸ்வி டாப் வேரியண்ட் என்பதால் பல தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. காரில் ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்ப வசதி உள்ளதால் பாக்கெட்டில் சாவியை வைத்துக்கொண்டே காரை ஸ்டார்ட் செய்ய முடிகிறது. கீ சொருகுவதற்கான துளை இல்லை. மேலும், கீ லெஸ் என்ட்ரி வசதியும் உள்ளது.
உட்புறத்தை பொறுத்தவரையில் சென்ட்ரல் கன்சோல் டேஷ்போர்டுடன் அழகாக இணைக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ் போர்ட்டுடன் மியூசிக் சிஸ்டம் இருக்கிறது. ஆனால், மற்ற கார்களில் வருவதுபோன்று யுஎஸ்பி போர்ட் இல்லாதது பெரும் குறையாக தெரிகிறது.
ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் மற்றும் எப்எம் ரேடியோ ஸ்டேஷன் ட்யூனிங் கன்ட்ரோல் ஸ்விட்சுகள் இருக்கிறது.
இதேபோன்று, டிரைவர் இருக்கை வலது பக்க கதவில் ஆட்டோமேட்டிக் டோர் கன்ட்ரோல் பட்டன்கள் உள்ளன. இருப்பினும், பயணிகள் ஒவ்வொருவரும் கண்ணாடியை திறக்க வசதியாக கதவில் தனித்தனி கன்ட்ரோல் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
,
இதேபோன்று, ஓஆர்விஎம் என்று கூறப்படும் ஆட்டோமேட்டிக் ரியர் வியூ மிரர்களும் சன்னியில் உள்ளன. முன் இருக்கைகள் முன்னும் பின்னும் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி மற்றும் புஷ்பேக் வசதிகளை கொண்டிருக்கின்றன.
முன்பக்க இருக்கைகளின் ஹெட்ரெஸ்ட்கள் அட்ஜெஸ்ட் செய்யும் வசதியை கொண்டுள்ளன. பின் இருக்கைகளும் வசதியாக உள்ளன. 6 அடி உயரம் கொண்டவர் உட்கார்ந்தால் கூட வசதியாக இருக்கிறது.
கேபினை குளிர வைப்பதற்கு போதுமான அளவு உள்ள ஏசியை கொண்டுள்ளது சன்னி. பின்புற இருக்கைகளுக்கு தனியாக ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஹெட்ரூமும், லெக்ரூமும் வசதியாக இருக்கும் அதேவேளையில் பின் இருக்கையில் மூன்றாம் நபர் உட்கார்ந்தால் நெருக்கடி தெரிகிறது. ஆனால், பின் இருக்கையின் நடுவில் கப் ஹோல்டருடன் ஆர்ம் ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








