நிசான் சன்னி... நமது பிரத்யேக டெஸ்ட் டிரைவ்!

Sunny Test drive
குறுகிய காலத்தில் மார்க்கெட்டில் அம்சமான மிட்சைஸ் கார் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதுவரை 3,000 வாடிக்கையாளர்களை பெற்றுள்ள நிசான் சன்னியை பெங்களூரில் டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

டிரைவ் ஸ்பார்க் ஆட்டோமொபைல் தளத்துக்காக சன்னியின் எக்ஸ்வி டாப் வேரியண்ட்டை நிசான் நிறுவனம் அனுப்பியிருந்தது. மதியம் 12 மணிக்கு கார் கையில் கிடைத்துவிட்டது என்றாலும், அலுவலக பணிகளை ஓரளவு முடித்துக்கொண்டு டெஸ்ட் டிரைவுக்கு புறப்பட திட்டமிட்டோம்.

மைக்ரா ஹேட்ச்பேக் காரின் பிளாட்பார்மில்தான் சன்னி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் வடிவமைப்பு துளிகூட மைக்ராவை நினைவுபடுத்தவில்லை. பார்த்தவுடனேயே 'பெரிய கார்' என்று கூறிவிட முடிகிறது.

முன்பக்கம் மிகவும் கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சன்னியின் முன்பக்க அழகை எடு்ப்பாக தூக்கிக் கொடுப்பதே அதன் அட்டகாசமான கிரில்களும், ஹெட்லைட்டும்தான். ஹெட்லைட் மான் விழி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

பின்புறத்திலிருந்து மிதமான வேகத்தில் ஏறும் கூரை முன்பக்கத்தில் மெல்ல மெல்ல இறங்கி சன்னியின் பக்கவாட்டு அழகை பக்கா என்று கூற வைக்கிறது.

பின்புறம் தோற்றம் சற்று தூக்கலாகவும், வளைவு நெளிவுகளுடன் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. சரியென்று, பூட் ரூமை(டிக்கி) திறந்து பார்த்த போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது சன்னி. ஆம், இவ்வளவு விசாலமான டிக்கியை இதன் ரகத்தை சேர்ந்த வேறு கார்களில் இதுவரை பார்த்த ஞாபகமில்லை.

அதிக பொருட்களை வைப்பதற்கு ஏதுவாக உள்ளது பூட் ரூம். மொத்தத்தில் வெளிப்புறத் தோற்றம் படு கவர்ச்சியாகவே உள்ளது என்று கூறலாம். 7 ஸ்போக் கொண்ட அலாய் வீல்களும் சன்னியை... சொக்க வைக்கும் கவர்ச்சி கன்னி என்று கூற வைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, December 5, 2011, 10:15 [IST]
English summary
The Nissan Sunny has been a pleasant surprise to the over 3,000 buyers in India and Drivespark had the opportunity to get surprised when the latest sedan from Nissan was driven in to our office in Bangalore. Nissan sent us the Sunny's top end variant XV and we can say the test drive was quite eventful. We all know the Sunny has been built on the same platform as the Micra hatchback. But the design of the Sunny does not give us a hint that it is a Micra in the form of a sedan.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+