இந்த ஆண்டில் பரபரப்பை ஏற்படுத்திய டாப்-10 கார்கள்-பகுதி-2

Hyundai Eon

4.ஹூண்டாய் இயான்:

ரூ.2.69 லட்சம் விலையில் புத்தம் புதிய மாடலை கொண்ட இயானை களமிறக்கி மார்க்கெட்டில் ஹூண்டாய் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாருதியின் ஆல்ட்டோவுக்கு போட்டியை கொடுக்கும் விதத்திலும், சலித்துப்போன வாடிக்கையாளர்களுக்கு புத்தம் புதிய வடிவமைப்பு கொண்ட காரை குறைந்த விலையில் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இயானை ஹூண்டாய் கொண்டு வந்தது.

புளூயிடிக் ஸ்கல்ப்சர் வடிவமைப்பில் வந்த இயான் கேம் சேஞ்சர் என்று ஹூண்டாய் கருதிய அளவுக்கு விற்பனையிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்று வருகிறது.

புத்தம் புதிய இயானில் 57 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 814 சிசி கொண்ட 0.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், லிட்டருக்கு 21.1 கிமீ மைலேஜ் தரும் என்று ஏஆர்ஏஐ சான்று கூறுகிறது.

மேலும், ஏர்பேக், ஏபிஎஸ் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மாடல்களிலும் இயான் கிடைக்கிறது.

5.டொயோட்டோ லிவா:

இந்த ஆண்டு டொயோட்டோவுக்கு முக்கியமான ஆண்டாகவே அமைந்துள்ளது. தரத்திற்கு பெயர்போன டொயோட்டோ நிறுவனம் இந்தியாவின் கார் மார்க்கெட்டின் தேவைக்கு தக்கவாறு சிறிய கார் மாடல் இல்லாமல் விற்பனையில் முக்கிய இடத்தை இழந்து வந்தது.

அந்த குறையை போக்கும் வகையில் அந்த நிறுவனம் கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்திய லிவா வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பிரிமியம் ஹேட்ச்பேக் ரகத்தில் வந்துள்ள லிவாவில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் லிவாவை 1.4 லிட்டர் டீசல் எஞ்சினுடன் அறிமுகப்படுத்திவிட்டது டொயோட்டோ.

டொயோட்டோ கார்களுக்கே உரித்தான அழுத்தமான வடிவமைப்பு மற்றும் அழகிய உட்புற வடிவமைப்புடனும் வந்துள்ள லிவா ஏபிஎஸ், இபிடி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடனும் கிடைக்கிறது.

6.டாடா விஸ்டா:

அதிக மைலேஜ் கொடுக்கும் வகையிலும், அதிக வசதிகளுடனும் டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்திய மேம்படுத்தப்பட்ட இன்டிகா விஸ்டா வாடிக்கையாளர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

மான்ஸா செடான் காரின் முகப்பை அப்படியே தூக்கி பொருத்தி டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்த டாடா விஸ்டா ஹேட்ச்பேக் அதிக மைலேஜ் கொடுக்கும் கார்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. 90 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 71 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் சிஆர்டிஐ எஞ்சினுடன் இண்டிகா விஸ்டா கிடைக்கிறது.

இதில், பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.7 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 22.3 கிமீ மைலேஜையும் கொடுப்பதாக ஏஆர்ஏஐ சான்று கூறுகிறது.

தவிர, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள், 6 ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை விஸ்டா வழங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 29, 2011, 11:00 [IST]
English summary
2011 is a rough riding year for the Car companies. The second half of the 2011 period car sales declining trend. But many new launches gave boost the car sales. Here are given top 10 car details of the 2011.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+