இந்த ஆண்டில் பரபரப்பை ஏற்படுத்திய டாப்-10 கார்கள்-பகுதி-1

Maruti Swift
கடந்த ஆண்டு கார் மார்க்கெட் 30 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டதால் இந்த ஆண்டும் அதே அளவுக்கு கார் விற்பனை இருக்கும் என கார் நிறுவனங்கள் கணக்கு போட்டன.

ஆனால், பெட்ரோல் விலை உயர்வு, கார் கடன் வட்டி கணிசமாக உயர்த்தப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் கார் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. இதனால், இந்த ஆண்டு கார் நிறுவனங்களுக்கு சவாலான ஆண்டாகவே அமைந்தது.

இருப்பினும், புதிய கார்களின் வரவு ஓரளவு விற்பனை சரிவை தடுத்து நிறுத்த உதவின. மேலும், குறைந்த விலையில் பல புதிய கார் மாடல்கள் மார்க்கெட்டில் போட்டா போட்டியில் இறக்கப்பட்டதால், நடுத்தர மக்களுக்கு ஏதுவாகவும் தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தந்தது.

இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கார்களில் மார்க்கெட்டில் ஆவலையும், பரபரப்பையும் ஏற்படுத்திய டாப்-10 கார்கள் பற்றிய தொகுப்பு இதோ உங்களுக்காக...

1.மாருதி ஸ்விப்ட்:

இதுவரை எந்தவொரு காருக்கும் இப்படியொரு வரவேற்பு கிடைத்திருக்குமா என்பதும், எதிர்காலத்தில் இந்தளவுக்கு ஒரு கார் புக்கிங்கில் புரட்சியை படைக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பிய கார்தான் கடந்த ஆகஸ்ட்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்விப்ட்.

பல புதிய மாற்றங்களுடன் மார்க்கெட்டில் சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்விப்ட் 1.08 லட்சம் புக்கிங்குகளை வாரி சுருட்டி மார்க்கெட்டில் புதிய அத்தியாயத்தை எழுதியது.

ஃபேஸ்லிப்ட் எனப்படும் மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்த ஸ்விப்ட்டில் நூற்றுக்கணக்கான மாற்றங்களையும், கூடுதல் வசதிகளையும் செய்திருந்தது மாருதி. புதிய ஹெட்லைட், கவர்ச்சியான முன்பக்க கிரில், புன்முருவல் பூக்கும் முகம் போன்ற லுக்கை தரும் ஏர் டேக் என முன்பக்கம் மாற்றங்கள் கண்டிருந்தது.

அருவி போன்ற வடிவம் கொண்ட சென்ட்ரல் கன்சோல், 6 ஸ்பீக்கர் சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல் வசதிகளும் புதிது. புதிய ஸ்விப்ட்டில் பொருத்தப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் 87 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். பழைய ஸ்விப்ட்டில் பொருத்தப்பட்டிருந்த அதே 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்தான் புதிய ஸ்விப்ட்டிலும் பொருத்தப்பட்டிருக்கிறது.

தவிர, பழைய ஸ்விப்ட்டைவிட புதிய ஸ்விப்ட் பெட்ரோல் மாடல் 15 கிலோ எடையும், டீசல் மாடல் 30 கிலோ எடை குறைவாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், அதிக மைலேஜ் பெற முடியும் என்று மாருதி தெரிவித்துள்ளது.

பழைய மாடலைவிட 90மிமீ நீளத்திலும், 40மிமீ கூடுதல் வீல் பேஸ் கொண்டுள்ளதும் புதிய ஸ்விப்ட்டின் முக்கிய மாறுதல்கள். இதனால், பின் இருக்கை அதிக இடவசதி கொண்டதாக இருக்கிறது. புதிய ஸ்விப்ட் ரூ.4.16 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2.செவர்லே பீட்:

ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனையை அலேக்காக தூக்கியுள்ள பெருமை கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட பீட் டீசல் மாடலையே சாரும்.

மார்க்கெட்டில் டீசல் கார்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்து வருவதை ஆருடம் கணித்து தனது இந்திய ஆராய்ச்சி பிரிவின் மூலம் வடிவமைத்த ஸ்மார்ட்டெக் டீசல் எஞ்சினை பொருத்தி பீட்டுக்கு புதிய பரிமாணம் கொடுத்தது ஜெனரல் மோட்டார்ஸ்.

அதன் கணிப்பை பொய்யாக்காமல் விற்பனையில் பீட் எதிர்பார்த்த அளவுக்கும் மேலாகவே விற்பனையில் வளர்ச்சி கண்டு வருகிறது. பீட் டீசலில் 1.0 லிட்டர் எக்ஸ்எஸ்டிஇ ஸ்மார்ட்டெக் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 58.5 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும்.

மேலும், இந்த கார் மற்ற டீசல் ஹேட்ச்பேக் கார்களுக்கு சவால் விடும் வகையில் லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் கொடுப்பதாக ஏஆர்ஏஐ சான்றளித்துள்ளது.

மேலும், மார்க்கெட்டுக்கான புத்தம் புதிய டீசல் காரான பீட் டீசல் 80 முதல் 100 கிமீ வேகத்தில் அட்டகாசமான பெர்ஃபார்மென்சை காண்பித்து வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தியுள்ளது.

மேலும், குறைந்த விலை கொண்ட பீட் டீசல் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பீட் டீசல் கொண்டிருக்கிறது. பீட் டீசல் கார் ரூ. லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

3.ஹோண்டா பிரியோ:

இந்திய கார் மார்க்கெட்டில் ஹோண்டா பிராண்டு கார்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு நன் மதிப்பு இருக்கிறது. இதை தக்கவைக்கும் விதமாக புத்தம் புதிய பிரியோ ஹேட்ச்பேக் காரை ஹோண்டா இந்திய வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியது.

நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு அருமையான கையாளுமை, அழகிய வடிவமைப்பில் வந்த பிரியோ வாடிக்கையாளர்களை வெகுவாகவே கவர்ந்தது. மேலும், சிறிய குடும்பத்தினருக்கு ஏற்ற பர்ஃபெக்ட் காராக ஹோண்டா பிரியோ வந்துள்ளது.

பிரியோ காரில் 1.2 லிட்டர் ஐ-விடெக் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அபாரமாக 88 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். மேலும், ஏர்ஏஐ சான்றுபடி லிட்டருக்கு 18.4 கிமீ மைலேஜ் கொடுக்கும் காராக பிரியோவுக்கு சான்றளிக்கப்பட்டுள்ளது.

பிரியோவில் ஏபிஎஸ், இபிடி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இருக்கின்றன. ஆனால், ஹோண்டாவின் போதாத காலம் உதிரிபாகங்கள் தட்டுப்பாட்டால் பிரியோ உற்பத்தியை தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

(அடுத்தடுத்த பக்கங்களில் ஹூண்டாய் இயான், டொயோட்டோ லிவா மற்றும் புதிய மஹிந்திரா எஸ்யூவி விபரங்கள்)

More from DriveSpark

Article Published On: Thursday, December 29, 2011, 11:04 [IST]
English summary
2011 is a rough riding year for the Car companies. The second half of the 2011 period car sales declining trend. But many new launches gave boost the car sales. Here are given top 10 car details of the 2011.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+