5 நாளில் 400 க்யூ3 எஸ்யூவி புக்கிங்: ஆடிக்கு அடித்த ஜாக்பாட்

கடந்த வாரம் க்யூ3 காம்பெக்ட் எஸ்யூவியை ஆடி அறிமுகம் செய்தது. பிஎம்டபிள்யூ விற்பனை செய்து வரும் எக்ஸ்1 காம்பெக்ட் எஸ்யூவிக்கு நேரடி கொடுக்கும் அம்சங்களுடன் இந்த எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது.
அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த புதிய எஸ்யூவி வந்துள்ளது. மேலும், 500 க்யூ3 எஸ்யூவிக்கு மட்டுமே முதல்கட்டமாக புக்கிங் பெறப்பட உள்ளதாக ஆடி அறிவித்தது. இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்டு வெறும் 5 நாட்களில் 400 க்யூ3 எஸ்யூவி கார்கள் புக்கிங் செய்யப்பட்டு விட்டன.
இதனால், ஆடி பெரும் உற்சாகத்தில் இருக்கிறது. பென்சை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தில் உள்ள ஆடி அடுத்த முதலிடத்தில் உள்ள பிஎம்டபிள்யூவை கீழே இறக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதற்காக, புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுபோன்று அறிமுகம் செய்யப்பட்ட க்யூ3 எஸ்யூவிக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளதே ஆடியின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications