அட்டகாசமான அம்சங்களுடன் ஆடி க்யூ-3 எஸ்யூவி: ஸ்பீடு ரிவியூ
வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய க்யூ3 எஸ்யூவியை இந்திய மார்க்கெட்டில் களமிறக்கிவிட்டுள்ளது ஆடி.
ஆடியின் குறைந்த விலை எஸ்யூவி மட்டுமல்லாது பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவியை தவிர வேறு எந்த போட்டியாளரும் இல்லாத ரகத்தில் வந்துள்ளது க்யூ3. எனவே, க்யூ3 விற்பனையில் முக்கிய இடத்தை பிடிக்கும் என அடித்து கூறுகிறது ஆடி. ஆடி க்யூ3 எஸ்யூவியில் இருக்கும் சில முக்கிய சிறப்பம்சங்களை மட்டும் இங்கே காணலாம்.

முக்கிய சிறப்பம்சங்கள்:
எஞ்சின்: 2.0 லிட்டர் (ஆடியின் முதல் க்வாட்ரோ வெர்ஷன் எஞ்சின்)
பவர்: அதிகபட்சம் 177 எச்பி
விலை: ரூ.26.21 லட்சம் (எக்ஸ்ஷோரூம் மஹாராஷ்டிரா)
முதல்கட்ட புக்கிங்: 500 கார்கள் மட்டும்
வெளிப்புற சிறப்பம்சங்கள்:
7 ஆர்ம் கொண்ட 16 இஞ்ச் போர்ஜ்டு அலுமினிய அலாய் வீல்கள்
கவர்ச்சியை கூட்டும் ரூப் ரெயில்ஸ்
வெப்பத்தை தடுக்கும் ஹீட் இன்சுலேட்டிங் கண்ணாடிகள்
எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்மென்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள்
ரன்னிங் லைட்டுகளுடன் கூடிய ஹாலஜன் ஹெட்லைட்டுகள்
உட்புற சிறப்பம்சங்கள்:
முன்புறம், பின்புறம் ப்ளோர் மேட்டுகள்
லெதர் பினிஷிங் கொண்ட 4 ஸ்போக் மல்டி பங்ஷன் ஸ்டீயரிங் வீல்
பீயேஜ் வண்ண உட்புற பினிஷிங்
துணியால் கவர் செய்யப்பட்ட உட்புற மேற்கூரை
லக்கேஜ் கம்பார்ட்மென்ட் மேட்
பாதுகாப்பு அம்சங்கள்:
எலக்ட்ரானிக் ஸ்டைபிலைசேஷன் புரோகிராம்(இஎஸ்பி)
கச்சிதமாக வைக்கக்கூடிய வசதியுடன் ஸ்பேர் வீல்
கார் ஜாக்கி
புல் சைஸ் ஏர்பேக்குகள்
முன்புறம், கூரை மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் ஏர்பேக் பாதுகாப்பு
எலக்ட்ரானிக் வெகிக்கிள் இம்மொபைலைசேஷன் சாதனம்
சைல்டு சீட் பொருத்துவதற்கான மவுண்ட்டிங்
சொகுசு வசதிகள்: (பேஸ் வேரியண்ட்)
மேனுவல் ஏசி
மலை சாலைகளில் ஏற, இறங்க உதவும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட்
எலக்ட்ரோ மெக்கானிக்கல் பார்க்கிங் பிரேக்
எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கை
மடக்கி விரிக்கும் வசதிகொண்ட பின்புற இருக்கை
ரேடியோ ரிமோட் கன்ட்ரோல்
முன் இருக்கையில் ஆர்ம் ரெஸ்ட்
ரியர் பார்க்கிங் சென்சார்
க்ரூஸ் கன்ட்ரோல்
இன்போடெயின்மென்ட் சிஸ்டம்
கான்சர்ட் ரேடியோ
பாசிவ் ஸ்பீக்கர்கள்
டிரைவர் இன்பர்மேஷன் சிஸ்டம்
ஆடி மியூசிக் இன்டர்பேஸ் தொழில்நுட்ப வசதி
வாய்ஸ் டயலாக் சிஸ்டம்
ப்ளூடூத் இன்டர்பேஸ் வசதி
முக்கிய அம்சங்கள்: ஹை கிரேடு வேரியண்ட்(கூடுதல் அம்சங்கள் கொண்ட பேஸ் வேரியண்ட்)
17 இஞ்ச் அலாய் வீல்
தானியங்கி ஹெட்லைட்
தானியங்கி வைப்பர்
கிரே பேப்பர் ஒட்டப்பட்ட வைண்ட் ஷீல்டு(முன்பக்க கண்ணாடி)
ஹெட்லைட் வாஷர்
ஸினான் ப்ளஸ் ஹெட்லைட்
எல்இடி பின்புற டேஞ்சர் லைட்டுகள்
எல்இடி இன்டிரியர் லைட் பேக்கேஜ்
சொகுசு வசதிகள்:
சென்சாருடன் கூடிய டீலக்ஸ் ஆட்டோமேட்டிக் ஏசி
ஆடி பார்க்கிங் ப்ளஸ் சிஸ்டம்
அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் ஹெட்லைட்
எலக்ட்ரிக்கல் முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் முன் இருக்கைகள்
டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம்
ஆட்டோ ரிலீஸ் வசதி
ஆடி இன்போடெயின்மென்ட் சிஸ்டம்
கலர் டிஸ்ப்ளேயுடன் கூடிய டிரைவர் இன்பர்மேஷன் சிஸ்டம்
கண்ணாடி கூரை


Click it and Unblock the Notifications








