ரூ.26 லட்சத்தில் ஆடியின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி அறிமுகம்!

Audi Q3
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய க்யூ3 காம்பெக்ட் சொகுசு எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டது ஆடி. ரூ.26.21 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய எஸ்யூவி அறிமுகமாகியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் எஸ்4 பிரிமியம் செடான் காரை ஆடி அறிமுகப்படுத்தியது. ஆனால், க்யூ3 காம்பெக்ட் எஸ்யூவி மீதுதான் வாடிக்கையாளர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமிருந்தது.

ஏனெனில், ஆடியின் குறைந்த விலை எஸ்யூவி மாடல் மட்டுமல்ல, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதற்கு இலகுவான வடிவமைப்பும் முக்கிய காரணம். கடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்க்பபட்டிருந்த கலப்பின(கிராஸ்ஓவர்) வடிவமைப்பு தத்துவம் கொண்ட இந்த எஸ்யூவி அப்போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், எந்த ஆர்ப்பாட்டமும், முன் அறிவிப்பும் இல்லாமல் புதிய க்யூ3 எஸ்யூவியை விற்பனைக்கு விட்டுள்ளது ஆடி. பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவிக்கு நேரடி போட்டியை கொடுக்கும் வகையில் இந்த புதிய எஸ்யூவி வந்திருக்கிறது. ஆனால், பென்சிடம் இந்த செக்மென்ட்டில் எஸ்யூவி இல்லை.

ஏ4 என்ட்ரி லெவல் செடான் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 2.0 டிடிஐ டீசல் எஞ்சின்தான் ஆடி க்யூ3 எஸ்யூவியிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. க்யூ3 எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட் ரூ.26.21 லட்சத்திலும், டாப் வேரியண்ட் ரூ.31.49 லட்சத்திலும் விற்பனைக்கு வ்நதுள்ளது.

உற்பத்தி காரணங்களுக்காக முதலில் 500 புக்கிங்குகளை மட்டும் க்யூ3 எஸ்யூவிக்கு பெறப்பட உள்ளதாக ஆடி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது எஸ்யூவி என்றாலும் சாதாரண சாலைநிலைகளுக்கு தகுந்தவாறே வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆடி தெரிவித்துள்ளது. ஆஃப் ரோடு அம்சங்கள் எதுவும் இதில் இருக்காது என்று கூறியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 7, 2012, 10:36 [IST]
English summary
Audi has launched compact luxury SUV Audi Q3 in India at Rs.26.21 lakhs. The new compact suv, taking BMW's X1 head on. Mercedes-Benz, the third German luxury player does not have a competing product in this segment that is expected to generate good volumes.
மேலும்... #audi #four wheeler #ஆடி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+