டஸ்ட்டரின் 2ம் ஆண்டு கொண்டாட்டம்... புதிய லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்!

By Saravana

மார்க்கெட்டின் வெற்றிகரமான எஸ்யூவி மாடலான ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை கொண்டாடும் விதத்தில், லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 85 பிஎஸ் அட்வென்ச்சர் எடிசன் மாடல்தான் தற்போதும் லிமிடேட் எடிசன் மாடலாக வந்துள்ளது. ஆனால், முன்பைவிட சற்று குறைவான விலையிலும், கூடுதல் சலுகைகளுடன் இந்த புதிய மாடல் கிடைக்கும்.


 சலுகைகள்

சலுகைகள்

இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்திற்கான மாடலாக வந்துள்ளது டஸ்ட்டரில் கூடுதலாக இரண்டு ஆண்டுகளுக்கான வாரண்டி, 4 ஆண்டுகளுக்கான அவசர சாலை உதவித் திட்டம் ஆகியவை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

 விலை

விலை

கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட 85 பிஎஸ் மாடல் டஸ்ட்டர் ரூ.9.16 லட்சம் விலையில் வந்த நிலையில், புதிய மாடல் ரூ.8.80 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

டஸ்ட்டர் 85 பிஎஸ் அட்வென்ச்சர் மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 200 என்எம் டார்க்கையும், 85 பிஎஸ் பவரையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.

மைலேஜ்

மைலேஜ்

டஸ்ட்டரின் 85 பிஎஸ் டீசல் மாடல் லிட்டருக்கு 20.5 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்துங்கள்

முந்துங்கள்

வரும் 20ந் தேதி வரை மட்டுமே இந்த லிமிடேட் எடிசன் டஸ்ட்டருக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும், 20ந் தேதிக்குள் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் டஸ்ட்டர் உரிமையாளர் கிளப்பில் இலவசமாக உறுப்பினராகும் வாய்ப்பும் இருக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

டஸ்ட்டர் 85 பிஎஸ் அட்வென்ச்சர் எடிசன் மாடலில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

அட்வென்ச்சர் கிட்

அட்வென்ச்சர் கிட்

ஏற்கனவே டஸ்ட்டர் வைத்திருப்பவர்கள் அட்வென்ச்சர் எடிசன் ஆக்சஸெரீஸ்களை தனியாக வாங்கியும் பொருத்திக்கொள்ளலாம். அதன் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

More from DriveSpark

Article Published On: Friday, July 11, 2014, 11:13 [IST]
English summary
Renault India is celebrating its second anniversary of its popular compact SUV the Duster. The French manufacturer has launched a limited edition model to celebrate its second anniversary. The Duster Adventure model has been launched at an attractive price of INR 8,80,000 ex-showroom, Delhi.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+