டஸ்ட்டர் வைத்துள்ளவர்கள் அட்வென்ச்சர் கிட்டை தனியாக வாங்கலாம்!
ரெனோ டஸ்ட்டரின் அட்வென்ச்சர் எடிசன் என்ற சிறப்பு பதிப்பு மாடல் சமீபத்தில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறை 85 பிஎஸ் டீசல் மாடலில் வெளியிடப்பட்டது.
ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்டில் இந்த புதிய அட்வென்ச்சர் எடிசன் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், டஸ்ட்டர் எஸ்யூவியின் அட்வென்ச்சர் எடிசனில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் ஆக்சஸெரீஸ்களை தனியாக வாங்கிக் கொள்ளும் வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது ரெனோ.

அனைத்து வேரியண்ட்டுகளுக்கும்...
ஏற்கனவே டஸ்ட்டர் எஸ்யூவி வைத்திருப்பவர்கள் அட்வென்ச்சர் கிட்டை தனியாக வாங்கி பொருத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆர்எக்ஸ்எல் வேரியண்ட் மட்டுமில்லாமல் எல்லா வேரியண்ட்டுகளிலும் இந்த அட்வென்ச்சர் கிட்டில் கிடைக்கும் ஆக்சஸெரீஸ்களை பொருத்திக்கொள்ளலாம்.

சில ஆக்சஸெரீஸ்கள் மிஸ்ஸிங்
அட்வென்ச்சர் கிட்டை தனியாக வாங்கும்போது தரை விரிப்பு, சீட் கவர்கள் போன்ற உட்புறத்துக்கான சில ஆக்சஸெரீஸ்கள் மட்டும் கிடைக்காது. ஆனால், அட்வென்ச்சர் எடிசன் கிட்டில் வெளிப்புற ஆக்சஸெரீஸ்களே முக்கியமானதாக கருதப்படுவதால் பிரச்னையில்லை.

பணம் மிச்சம்
சாதாரண மாடலைவிட அட்வென்ச்சர் எடிசன் டஸ்ட்டரின் விலை ரூ.1 லட்சத்தை விட கூடுதல். ஆனால், தனியாக கிட்டை வாங்கி பொருத்திக் கொள்ளும் போது பணத்தை மிச்சப்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது.

விலை விபரம்
ட்வின் விளக்குகளுடன் பம்பர் கார்டு, சைடு மோல்டிங், வீல் ஆர்ச்சுகள் ஆகிய கிளாடிங் பேக்கின் விலை ரூ.62,390.
இரட்டை விளக்குகளுடன் கூடிய பம்பர் கார்டை தனியாக வாங்கலாம். இதன் விலை ரூ.18,410.
சைடு பாடி கிளாடிங் விலை ரூ.19,320.
வீல் ஆர்ச்சுகள் விலை ரூ.24,660.

வரவேற்பு
இதுபோன்று அனைத்து கூடுதல் ஆக்சஸெரீஸ்களும் தனித்தனியாக கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் தங்களது பட்ஜெட், விருப்பத்தை போன்று வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என ரெனோ நம்பிக்கை தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications








