வசதிகளை பிடுங்கிவிட்டு புதிய ஆக்டாவியாவை களமிறக்கிய ஸ்கோடா!

ரூ.2 லட்சம் குறைவான விலையில் ஆக்டாவியாவின் புதிய பேஸ் பெட்ரோல் மாடலை சத்தமில்லாமல் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஸ்கோடா ஆட்டோ.

1.4 லி மற்றும் 1.8 லி எஞ்சின்கள் கொண்ட 2 பெட்ரோல் மாடல்களிலும், 2.0 லி எஞ்சின் கொண்ட ஒரு டீசல் மாடலிலும் ஆக்டாவியா விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், 1.8 லி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலில்தான் தற்போது வசதிகளை குறைத்து புதிய பேஸ் மாடலை இறக்கியுள்ளது.

ஒரே வேரியண்ட்

ஒரே வேரியண்ட்

1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஆக்டாவியா முன்பு எலிகன்ஸ் என்ற ஒரே வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது ஆம்பிஷன் பேஸ் வேரியண்ட்டை ரூ.2 லட்சம் குறைவான விலையில் கொண்டு வந்துள்ளது ஸ்கோடா.

வசதிகள் குறைப்பு

வசதிகள் குறைப்பு

எல்இடி பகல்நேர விளக்குகள், ரியர் ஸ்பாய்லர், அடாப்டிவ் ஹெட்லைட், டயர் பிரஷர் மானிட்டர், ஹெட்லைட் வாஷர், பக்கவாட்டு ஏர்பேக்குகள், முன்புற பார்க்கிங் சென்சார்கள், பானரோமிக் சன்ரூஃப், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் இருக்கை, கண்ணாடியை அமைப்பை மாற்றிக் கொள்வதற்கான மெமரி செட்டிங் உள்ள வசதிகள் நீக்கப்பட்டுள்ளன. ஸினான் விளக்குகளுக்கு பதிலான ஹாலஜன் விளக்குகள் ஹெட்லைட்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய வேரியண்ட்டில் பொருத்தப்பட்டிருக்கும் 1.8 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 177 பிஎச்பி ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

 இதர வசதிகள்

இதர வசதிகள்

பல வசதிகள் நீக்கப்பட்டிருந்தாலும், 16 இஞ்ச் அலாய் வீல்கள், கிளைமேட் கன்ட்ரோல், மல்டி பங்ஷன் டிஸ்ப்ளே, புளூடூத், இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் அப்ஹோல்ஸ்டரி போன்ற அம்சங்கள் இந்த வேரியண்ட்டிலும் இடம்பெற்றிருக்கும்.

விலை

விலை

விற்பனையில் இருக்கும் எலிகன்ஸ் வேரியண்ட் ரூ.18.81 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், புதிய ஆம்பிஷன் பேஸ் வேரியண்ட் ரூ.16.95 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. ஜனவரி மாதம் முதல் கார் டெலிவிரி ஆரம்பமாகும்.

ஆக்டாவியா முழு விபரம்

ஆக்டாவியா முழு விபரம்

ஆக்டாவியா காரின் முழுமையான விபரங்களை படிப்பதற்கு எங்களது சிறப்பு பார்வை பக்கத்துக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

வசதிகள் குறித்த ஒப்பீட்டு விபரத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 22, 2013, 10:04 [IST]
English summary
Skoda has silently launched a new base 1.8 Ambition petrol variant of the recently launched new 2013 Octavia. The new Skoda Octavia 1.8 Ambition petrol trim is priced at Rs 16.85 lakh (ex-showroom, Mumbai).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+