அப்படி என்னதான் இருக்கு ஸ்கோடா ஆக்டாவியாவில்...? - சிறப்பு பார்வை

இந்திய மார்க்கெட்டில் ஸ்கோடா பிராண்டுக்கு வலுவூட்டிய பெயர் ஆக்டாவியா. 10 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் தலைமுறை ஆக்டாவியாவுடன் ஸ்கோடா ஆட்டோ இந்திய மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்தது. அதிக விலை என்ற முத்திரையால் விற்பனை எண்ணிக்கையை பெரிய அளவில் காட்ட தவறினாலும், கொடுத்த பணத்திற்கு மதிப்பு மிக்க கார் என்று வாங்கியவர்களை மனதார பாராட்ட வைத்தது.

இந்த நிலையில், ஆக்டாவியா காரை லாரா என்ற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன் ஸ்கோடா களமிறக்கியது. ஆனால், ஆக்டாவியாவிற்கு இருந்த நன்மதிப்பை லாரா பெறவில்லை. இந்த நிலையில், ஆக்டாவியா ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் மீண்டும் புதிய தலைமுறை ஆக்டாவியா காரை விரைவில் களமிறக்குகிறது ஸ்கோடா ஆட்டோ. அந்தஸ்து விரும்பிகளுக்கான காராகவும் அதிக எதிர்பார்ப்பை கிளறியுள்ள இந்த புதிய ஆக்டாவியா குறித்த முழுமையான தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

 பிளாட்பார்ம்

பிளாட்பார்ம்

முந்தைய தலைமுறை கார்களைவிட சிறந்த இடவசதி, ஏராளமான தொழில்நுட்ப வசதிகள், டிசைனில் முன்னேற்றம் என்ற பல பரிமாணங்களுடன் மீண்டும் வருகிறது ஆக்டாவியா. ஃபோக்ஸ்வேகனின் எம்க்யூபி பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் நிச்சயம் பல படிகள் மேலே சென்றுள்ளது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் சற்று விரிவாக பார்க்கலாம்.

பரிமாணம்

பரிமாணம்

நீளம் - 4659 மிமீ

அகலம் - 1,814 மிமீ

உயரம் - 1,416 மிமீ

வீல்பேஸ் - 2,688 மிமீ

கிரவுன்ட் கிளியரன்ஸ் - 155 மிமீ

 கொஞ்சம் பெரிசு

கொஞ்சம் பெரிசு

முந்தைய தலைமுறை கார்களைவிட நீள, அகலத்தில் கூடியிருக்கிறது ஆக்டாவியா. லாராவைவிட 110மிமீ கூடுதல் வீல் பேஸ் கொண்டிருப்பதால் உட்புறத்தில் இடவசதி அதிகரித்துள்ளது. அதேவேளை, உயரம் சற்று குறைக்கப்பட்டிருக்கிறது.

எம்க்யூபி பிளாட்பார்ம்

எம்க்யூபி பிளாட்பார்ம்

ஆட்டோமொபைல் உலகில் அதிகம் பேசப்படும் ஃபோக்ஸ்வேகனின் எம்க்யூபி பிளாட்பார்மில்தான் இந்த கார் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆடி ஏ3 செடான் மற்றும் கோல்ப் கார்களும் இதே பிளாட்பார்மில்தான் உருவாக்கப்பட்டவை. மேலும், எடையும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. வெறும் 1,350 கிலோ மட்டுமே கொண்டுள்ளது. இதன்மூலம், பழைய கார்களின் கட்டுமானத் தரம் இதில் இருக்குமா என்பதை கூற இயலவில்லை. அதேவேளை, பிட் அன்ட் பினிஷ் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. எம்க்யூபி பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட கார் என்பதால் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தர நிலைகளும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.

தோற்றம்

தோற்றம்

ஸ்கோடா கார்களுக்குரிய தனித்துவமான தோற்றம் ஆக்டாவியாவில் பளிச்சிடுகிறது. ஆடி செடான்களின் சாயல் ஆங்காங்கே தெரிகிறது. உயரம் குறைக்கப்பட்டு நீளம் அதிகரிக்கப்பட்டிருப்பதால் முந்தைய மாடல்களைவிட நீளமான ஆக்டாவியாக தெரிகிறது.

முகப்பு

முகப்பு

முகப்பு கிரில்லை சுற்றிலும் சிறியதாக வளைந்து நெளிந்து செல்லும் குரோம் பட்டை எல்லைக்கோடு போல் சுற்றி வளைத்துள்ளது. ஏர்டேமில் தேன்கூடு வலைபின்னல் அமைப்புடன் நடுவில் படுக்கை வாட்டில் பிளாஸ்டிக் தடி நீண்டு அழகூட்டுகிறது.

ஹெட்லைட்

ஹெட்லைட்

ஹெட்லைட் மற்றும் பனி விளக்குகள் டிசைன் மாற்றம் கண்டுள்ளது. கூர்மையான திருப்பங்களுடன் ஹெட்லைட் மற்றும் அதில் இன்டிகேட்டர் விளக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. ஹெட்லைட்டில் புரொஜெக்டர் லைட் போன்ற விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பது சிறப்பு. டாப் என்ட் வேரியண்ட் பை ஸினான் விளக்குகளுடன் வந்துள்ளது.

பகல்வேளை ரன்னிங் விளக்குகள்

பகல்வேளை ரன்னிங் விளக்குகள்

எலிகன்ட் வேரியண்ட்டில் எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள் உண்டு. ஆம்பிஷன் வேரியண்ட்டில் எல்இடி., விளக்குகளுக்கு பதில் ஹாலஜன் பல்புகள் கொண்ட பகல் நேர ரன்னிங் விளக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆக்டிவ் பேஸ் வேரியண்ட்டில் பகல்நேர ரன்னிங் விளக்குகள் இல்லை.

டெயில் லைட்

டெயில் லைட்

சி வடிவத்திலான டெயில் லைட்டுகள் ஸ்கோடாவிந் புதிய ரேபிட் காரை நினைவூட்டுகிறது. அதேவேளை, மிக கவர்ச்சியாக காரின் உருவத்திற்கு ஏற்ற வடிவில் செதுக்கப்பட்டிருக்கிறது.

பின்புற தோற்றம்

பின்புற தோற்றம்

பின்புறத்தில் காரின் பம்பருடன் இணைக்கப்பட்டிருக்கும் டிபியூசர் காரணமாக புகைப்போக்கி குழாய் பார்வையிலிருந்து மறைந்து நிற்கின்றன.

ரியர் வியூ மிரர்

ரியர் வியூ மிரர்

சொகுசு கார்களில் இருப்பது போன்ற டிசைனில் ரியர் வியூ கண்ணாடியில் இன்டிகேட்டர் விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அலாய் வீல்

அலாய் வீல்

அனைத்து வேரியண்ட்டுகளிலும் 16 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆக்டிவ் பேஸ் வேரியண்ட்டின் அலாய் வீல் டிசைன் வேறு மாதிரி இருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

வெளிப்புறத்தை பார்த்துவிட்டு உட்புறத்தில் நுழையும்போது சற்று ஏமாற்றம் ஏற்படுகிறது. மிக சிம்பிளான இன்டிரியரில் பீயேஜ் மற்றும் கருப்பு வண்ண கலவையில் பினிஷிங் செய்யப்பட்டுள்ளன. மர வேலைப்பாடுகள் மற்றும் அலுமினியத்திலான கண்கவர் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், மிக குறைவாகவே கையாளப்பட்டுள்ளன. கேபினில் இடவசதியும், சொகுசும் முன் சொன்ன காரணங்களை மறக்கச் செய்கிறது.

 ஸ்டீயரிங் வீல்

ஸ்டீயரிங் வீல்

அனைத்து வேரியண்ட்டுகளிலும் 4 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் பொருத்தப்பட்டிருக்கிறது. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகளும் நிரந்தர அம்சமாக இருக்கிறது.

வசதிகள்

வசதிகள்

உயரத்தை கூட்டிக் குறைக்க ஏதுவாக 12 வே அட்ஜெஸ்ட் கொண்ட எலக்ட்ரிக் கன்ட்ரோல் டிரைவர் இருக்கைகள் உள்ளன. டாப் வேரியண்ட்டுகளில் மெமரி வசதியும் உள்ளது.

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

5.8 இஞ்ச் திரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. பயன்பாட்டுக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ள முடியும்.

ஆடியோ சிஸ்டம்

ஆடியோ சிஸ்டம்

ரொம்ப சூப்பர் என்று கூற இயலாவிட்டாலும், நன்றாக இருக்கிறது. யுஎஸ்பி, ஆக்ஸ் இணைப்புகள் ஒரே ஒரு போர்ட்டில் இணைக்கும் வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது.

கண்ணாடி கூரை

கண்ணாடி கூரை

எலிகன்ஸ் வேரியண்ட்டில் மட்டும் கண்ணாடி கூரையுடன் வந்துள்ளது. மேலும், மழை வந்தால் தானாக மூடிக் கொள்ளும் வசதி கொண்டது.

சிறப்பான விஷயம்

சிறப்பான விஷயம்

இன்டிரியரில் மிக மிக உயர்வான அம்சமாக இடவசதியை கூறலாம். ஆடி ஏ3 அளவுக்கு இடவசதியை அளிக்கிறது. இருக்கைகள் அமர்வதற்கு மிக தாராள இடவசதியை அளிப்பதுடன் சொகுசாகவும்ி இருக்கின்றன.

ரியர் ஏசி வென்ட்

ரியர் ஏசி வென்ட்

பின்புற பயணிகளுக்கு தனியாக ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், பின் இருக்கையில் மூன்று பேர் அமர்வதில் சிரமம் இருக்கும் என்பதோடு, நடுவில் அமர்பவருக்கு போதிய லெக்ரூம் இருக்காது.

பூட் ரூம்

பூட் ரூம்

ஆக்டாவியாவின் ஸ்பேஸ்பேக் மாடல் போன்று பூட் கதவு திறக்கிறது. இதனால், பொருட்களை எளிதாக வைத்து எடுக்க மிக வசதியாக இருக்கிறது. 590 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூமை பின் இருக்கைகளை மடக்கினால் 1,000 லிட்டர் வரை கொள்ளளவு கொண்டதாக மாற்றிக் கொள்ள முடியும் என்பது பெரிய ப்ளஸ்.

பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் எஞ்சின்

140 எச்பி ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.4 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. எஞ்சினிலிருந்து ஆற்றல் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வாயிலாக முன் சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது.

 1.4லி பெர்ஃபார்மென்ஸ்

1.4லி பெர்ஃபார்மென்ஸ்

ஃபோக்ஸ்வேகன் ஜெட்டாவிலும் இதே எஞ்சின்தான் செயல்புரிகிறது. ஆனால், டியூனிங் மாற்றப்பட்டிருப்பதால் பவர் வெளிப்பாடு சிறப்பாக இருக்கிறது. அதேவேளை, நகர்த்தும்போது டர்போ லேக் தெரிகிறது. சற்று வேகம் பிடித்தால் ஓட்டும்போது மிக மென்மையான அனுபவத்தை தருகிறது. 1.4 லிட்டர் எஞ்சினில் 1,500 ஆர்பிஎம் முதல் 3,500 ஆர்பிஎம் வரை 250 என்எம் என்ற அதிகபட்ச டார்க்கை அளிப்பது குறிப்பிட்டு கூற வேண்டியதாகிறது.

பவர்ஃபுல் மாடல்

பவர்ஃபுல் மாடல்

ஆக்டாவியாவின் பவர்ஃபுல் மாடல் இது. இந்த மாடலில் 1.8 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 177 எச்பி ஆற்றலையும் 250 என்எம் டார்க்கையும் அளிக்கும். இந்த மாடல் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டது.

1.8 லி பெர்ஃபார்மென்ஸ்

1.8 லி பெர்ஃபார்மென்ஸ்

இந்த பவர்ஃபுல் மாடலில் மட்டும் பின்புறத்தில் மல்டி லிங் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. வளைவுகளில் திரும்பும்போதும், மலைப்பாதைகளில் வளைந்து நெளிந்து செல்லும்போதும் அதிக நிலைத்தன்மையுடன் கார் செல்ல உதவுகிறது.

டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

148 எச்பி ஆற்றலையும், 320 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் டிடிஐ டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் மாடல்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

டீசல் எஞ்சினில் குறிப்பிட்டு கூற வேண்டியது குறைந்த வேகத்திலும், ஐட்லிங்கிலும் அதிக சப்தத்தையும், அதிர்வுகளையும் வெளிக்காட்டுகிறது. அதேவேளை, வேகத்தை அதிகரித்துவிட்டால் அப்படி ஒரு பிரச்னை இருப்பதே தெரியாத அளவுக்கு செல்கிறது கார். பெட்ரோல் மாடல் போன்றே குறைந்த வேகத்தில் இதிலும் டர்போ லேக் அதிகமிருக்கிறது. பெர்ஃபார்மென்ஸ் மிகச் சிறப்பாக கூற முடியாவிட்டாலும், நீண்ட தூர பயணங்களில் சீரான வேகத்தில் இயக்கும்போது மிகச் சிறப்பான அனுபவத்தை கொடுக்கிறது.

ஏபிஎஸ் பிரேக்

ஏபிஎஸ் பிரேக்

அனைத்து வேரியண்ட்டுகளிலும் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக், ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட் ஆகிய பாதுகாப்பு அமைப்புகள் நிரந்தரமாக இடம்பெற்றுள்ளன.

டிராக்ஷன் கன்ட்ரோல்

டிராக்ஷன் கன்ட்ரோல்

டிராக்ஷன் கன்ட்ரோல், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் அம்சங்களும் நிரந்தர அம்சமாக உள்ளது.

ரியர் பார்க்கிங் சென்சார்

ரியர் பார்க்கிங் சென்சார்

முன்புறம், பின்புறத்தில் பார்க்கிங் சென்சார்கள் கொடுக்கப்பட்டிருக்கினறன. இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தின் மூலமும், ஆடியோ மூலம் எச்சரிக்கும் வசதி இருக்கின்றது.

ஏர்பேக்ஸ்

ஏர்பேக்ஸ்

ஆக்டிவ், ஆம்பிஷன் வேரியண்ட்டுகளில் முன்பக்கத்தில் டியூவல் ஏர்பேக்குகளும், எலிகன்ஸ் வேரியண்ட்டில் முன்பக்கம், பக்கவாட்டிலும், பின்புறத்திலும் ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

விலை

விலை

அக்டோபர் 3ந் தேதி புதிய ஆக்டாவியாவை ஸ்கோடா அறிமுகம் செய்ய உள்ளது. ரூ.11.5 லட்சம் முதல் ரூ.12.5 லட்சத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலிகன்ஸ் டாப் வேரியண்ட்டுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்படலாம் என தெரிகிறது.

மதிப்பை தக்கவைக்குமா?

மதிப்பை தக்கவைக்குமா?

எக்ஸ்கியூட்டிவ் செடான் மார்க்கெட்டில் தோற்றம், வசதிகள், தரம் என அனைத்திலும் சிறந்த காராக வருகிறது. ஆனால், எஞ்சின்கள் மிகச்சிறப்பு என்று கூற முடியாது. 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் மட்டும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற மதிப்புமிக்கதாக கூறலாம். விற்பனைக்கு பிந்தைய சேவையிலும் ஸ்கோடா சொதப்பி வருவதும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அதேவேளை, போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் வந்தால் நிச்சயம் பழைய ஆக்டாவியா வாடிக்கையாளர்களையும், புதிய வாடிக்கையாளர்கள் வட்டத்தையும் ஆக்டாவியா மீண்டும் பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 28, 2013, 15:22 [IST]
English summary
The prodigal son is set to return. Skoda, an unknown and unassuming Czech automaker made its entry into India more than a decade back with the first generation Octavia sedan. The lower purchasing prowess of car buyers in India then meant the relatively expensive Octavia sold in few number. But those who bought it instantly took a liking to it, turning into Skoda loyalists.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+