ஜீப் காம்பஸ் கார் 13 வேரியண்ட்டுகளில் 1 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஜீப் காம்பஸ் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஜீப் காம்பஸ் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஜீப் காம்பஸ் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஜீப் காம்பஸ் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
---|---|
எஸ்யூவி | Gearbox
|
₹ 20,69,000 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 22,19,000 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 24,19,000 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 24,32,000 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 24,69,000 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 26,19,000 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 26,69,000 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 26,69,000 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 28,19,000 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 28,19,000 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 28,69,000 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 30,19,000 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 32,27,000 |
கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
---|---|---|
Manual | டீசல் | 0 |
எஸ்யூவி கார்களுக்கு உரிய இலக்கணத்திற்கு வித்திட்ட அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனத்தின் மிகச் சிறந்த தயாரிப்பாக காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் பிரிமீயம் 5 சீட்டர் மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜீப் காம்பஸ், கெத்தான எஸ்யூவியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.
எஸ்யூவி கார்களுக்கு உரிய மிரட்டலான தோற்றத்துடன் நவீன யுகத்திற்கு உரிய டிசைன் அம்சங்களை பெற்றுள்ளது. முகப்பில் ஜீப் நிறுவனத்தின் பாரம்பரியத்தை பரைசாற்றும் வகையில் க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய ஏர் இன்டேக் அமைப்பு, எல்இடி பனி விளக்குகள், 18 அங்குல அலாய் வீல்கள், நேர்த்தியான தோற்றத்தை தரும் டெயில் லைட்டுகளுடன் மிடுக்கான மாடலாக காட்சித் தருகிறது.
புதிய ஜீப் காம்பஸ் காரின் பிஎஸ்-6 மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருக்கின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. டீசல் ஆட்டோமேட்டிக் மாடலில் 4 வீல் டிரைவ் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது.
ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் மைலேஜ் விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், செயல்திறன் மிக்க இதன் எஞ்சின்கள் சிறப்பான மைலேஜை நடைமுறையில் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், 18 அங்குல அலாய் வீல்கள், 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யு-கனெக்ட்-5 கனெக்டெட் கார் தொழில்நுட்பம், 10.2 அங்குல திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.
தவிரவும், வயர்லெஸ் சார்ஜர், வென்டிலேட்டட் வசதியுடன் முன் இரு்ககைகள், பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல், மெமரி வசதியுடன் ஓட்டுனர் இருக்கை உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.
இந்த காரில் 60க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன. 6 ஏர்பேக்குகள், ரெயின் பிரேக் சப்போர்ட் வசதி, ஹில் ஹோல்டு மற்றும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல் வசதி, எலெக்ட்ரானிக் ரோல் மிட்டிகேஷன், பிரேக் லாக் டிஃபரன்ஷியல், ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகளை பெற்றுள்ளது.
மிட்சைஸ் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் ஒரு சிறந்த மற்றும் பாதுகாப்புமிக்க எஸ்யூவி காரை விருபம்புவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக ஜீப் காம்பஸ் எஸ்யூவி இருக்கும். அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் ஏற்ற அம்சங்களை இந்த கார் பெற்றிருக்கிறது.
ஸ்போர்ட், லான்ஜிடியூட் ஆப்ஷனல், லிமிடேட் ஆப்ஷனல், மாடல் எஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது