பெட்ரோல் விலையை நூதனமாக ஏற்றிய மத்திய அரசு ; சலுகை 3ல்1 பங்காக குறைப்பு
பெட்ரோல், டீசல் போடுபவர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் அவர்களுக்கு இதுவரை 0.75 சதவீதம் பெட்ரோல் விலை சலுகை அளிக்கப்பட்டது. தற்போது இந்த சலுகை 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம
பெட்ரோல், டீசல் போடுபவர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் அவர்களுக்கு இதுவரை 0.75 சதவீதம் பெட்ரோல் விலை சலுகை அளிக்கப்பட்டது. தற்போது இந்த சலுகை 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்றைய பெட்ரோல் விலைப்படி சுமார் 50 காசுகள் அளிக்கப்பட்ட தள்ளுபடி தற்போது 19 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்தது. இதையடுத்து மக்கள் மத்தியில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்தது. இதற்காக டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்பவர்களுக்ககு சலுகைளை வழங்க துவங்கியது.

இந்த வகையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெட்ரோல் டீசல் போடுவதற்காக டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்பவர்களுக்கு 0.75 சதவீதம் எரிபொருள் விலையில் சலுகை வழங்கபடும் என தெரிவிக்கப்பட்டது.

அந்த சமயத்தில் இந்தியா முழுவதும் தினமும் சராசரியாக 4.5 கோடி வாடிக்கையாளர்கள் ரூ 1,800 கோடி மதிப்பிலான விலைக்கு பெட்ரோல் டீசல்களை விற்பனை செய்து வந்தனர். மத்திய அரசின் இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு தினம் பெட்ரோல் டீசல் போடுபவர்களில் 40 சதவீதம் டிஜிட்டல் பேமெண்டை பயன்படுத்த துவங்கி விட்டனர்.

இந்நிலையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டு சுமார் 20 மாதங்களுக்கு பின்பு சலுகைத்தொகை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இதுவரை 0.75 சதவீதமாக இருந்த சலுகை தற்போது 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் பங்க் உரிமையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் குறிஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளுது. அதன் படி தற்போது 0.75 ஆக உள்ள பணமில்லா பரிவர்த்தனை செய்பவர்களுக்கான சலுகை 0.25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. புதிய சலுகைபடியே இனி பணம் வசூலிக்கலாம். இது டீசல் மற்றும் பெட்ரோல் போடும் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என அதி குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போதைய பெட்ரோல் விலைப்படி லிட்டருக்கு 50 காசுகள் வரை இதுவரை தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது சலுகை குறைக்கப்பட்ட பின்பு இது 19 காசுகளாக குறைந்துள்ளளது. இந்த சலுகை பெட்ரோல், டீசலுக்கான பணத்தை கிரெடிட், டெபிட், டிஜிட்டல் வாலட், பிளஸ்டிக் கேஷ் உள்ளிட்ட எல்லாவகை டிஜிட்டல் பேமெண்டிற்கும் இது பொருந்தும்.

மேலும் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு பெட்ரோல டீசல் டமடும் இல்லாமல் பல வகையான சர்வீஸ்களுக்கு சலுகைகள் வழங்கபப்பட்டன. ஆன்லைனில் வாங்கும் பொது இன்சூரன்ஸ் பொருட்களுக்கு 10 சதவீத சலுகை, ஆன்லைன் பேமெண்ட் மூலம் ரயில் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு 0.5 சதவீத கட்டண சலுகை, சீசனல் மற்றும் மாதாந்திர ரயில் பாஸ்களை டிஜிட்டல் பணம் மூலம் வாங்கினால் சலுகை

ரயில் நிலையங்களில் உள்ள கேட்டரிங், மற்றும் காத்திருப்பு அறைக்கான வசதிகளை ஆன்லைன் பேமெண்ட் பெற்றால் அதற்காக 5 சதவீத சலுகை என பல வகையான சலுகைகள் வழங்கப்பட்டன.

முக்கியமாக நாடு முழுவதும் உள்ள டோல் கேட்களில் செலுத்தப்படும் பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தினால் 10 சதவீத தள்ளுபடி, சேவை வரியை கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் செலுத்தினால் ரூ2000 வரை தள்ளுபடி மற்றும் பிம் யூபிஐ, மற்றும் ஆதாரை பயன்படுத்தி பணம் அனுப்பினால் சலுகை என பல்வேறு வகையான சலுகைகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
- இந்திய ராணுவத்திற்கு புதிய நிறத்தில் கார்.. ரகசியமாக சோதனை செய்த படங்கள் முதல் முறையாக கசிந்தன
- மோடி திறந்து வைத்த 14 வழி சாலை 2 மாதத்தில் சேதம்; அம்பலமாகிறது இமாலய ஊழல்?
- இது சும்மா ட்ரெய்லர்தான்.. மெயின் பிக்சரில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்க மாருதி சுஸூகி ரெடி
- கடந்த மாதம் ஹோண்டா சராசரி விற்பனை தான்


Click it and Unblock the Notifications








