முதல்வரின் திடீர் உத்தரவால் ஆட்டோ டிரைவர்கள் கலக்கம்.. கட்டண கொள்ளை இனி கிடையாது..

By Arun

ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தி, அதன் அடிப்படையில் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முதல்வரின் திடீர் உத்தரவால் ஆட்டோ டிரைவர்கள் கலக்கம்.. கட்டண கொள்ளை இனி கிடையாது..

ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன. ஆட்டோக்களில் பயணம் செய்யும் பயணிகளிடம், சில அடாவடியான ஆட்டோ டிரைவர்கள், கட்டண கொள்ளையை அரங்கேற்றி வருகின்றனர்.

முதல்வரின் திடீர் உத்தரவால் ஆட்டோ டிரைவர்கள் கலக்கம்.. கட்டண கொள்ளை இனி கிடையாது..

குறிப்பாக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னையாக இது உள்ளது. எனவே ஆட்டோக்களின் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஒரு பக்கம் வலு பெற்று கொண்டே வருகிறது.

முதல்வரின் திடீர் உத்தரவால் ஆட்டோ டிரைவர்கள் கலக்கம்.. கட்டண கொள்ளை இனி கிடையாது..

ஆட்டோக்களில் அரங்கேறும் கட்டண கொள்ளையை தடுக்கும் விதமாக, அரசு அவ்வப்போது சில அறிவிப்புகளை வெளியிடவே செய்கிறது. ஆனால் அரசாங்கத்தின் உத்தரவு ஒரு சில நாட்கள் மட்டுமே நடைமுறையில் இருக்கும். பின்னர் அந்த உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டு விடுகிறது.

முதல்வரின் திடீர் உத்தரவால் ஆட்டோ டிரைவர்கள் கலக்கம்.. கட்டண கொள்ளை இனி கிடையாது..

இந்த சூழலில், ஹரியானா மாநிலத்தில், ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, அரசுக்கு தொடர்ச்சியாக புகார்கள் சென்றன. அடாவடியான ஆட்டோ கட்டணம் குறித்து, மக்கள் குறைதீர் கூட்டங்களில், தொடர்ந்து புகார்கள் முன்வைக்கப்பட்டன.

முதல்வரின் திடீர் உத்தரவால் ஆட்டோ டிரைவர்கள் கலக்கம்.. கட்டண கொள்ளை இனி கிடையாது..

எனவே பயணிகளிடம் முறைகேடு செய்வதை தடுக்கும் விதமாக, ஹரியானா மாநிலத்தில் இயங்கும் அனைத்து ஆட்டோக்களிலும் கட்டாயமாக மீட்டர் பொருத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

முதல்வரின் திடீர் உத்தரவால் ஆட்டோ டிரைவர்கள் கலக்கம்.. கட்டண கொள்ளை இனி கிடையாது..

ஹரியானா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஆட்டோக்களிலும் மீட்டர் பொருத்தி, அதன் அடிப்படையில் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என ஹரியானா மாநில முதல் அமைச்சர் மனோகர் லால் கட்டார், தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் திடீர் உத்தரவால் ஆட்டோ டிரைவர்கள் கலக்கம்.. கட்டண கொள்ளை இனி கிடையாது..

கட்டண கொள்ளை தவிர, அதிக அளவிலான பயணிகளை ஏற்றி செல்வதாகவும் புகார்கள் உள்ளது. அத்துடன் 18 வயதுக்கும் குறைவான வயதுடைய நபர்கள் ஆட்டோக்களை இயக்குவதாகவும், சில ஆட்டோக்களில் பதிவு எண் குறிப்பிடப்படாமல் இருப்பதாகவும் புகார்கள் எழுந்து வந்தன.

முதல்வரின் திடீர் உத்தரவால் ஆட்டோ டிரைவர்கள் கலக்கம்.. கட்டண கொள்ளை இனி கிடையாது..

எனவே இந்த புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புகார்கள் தொடர்பாக 3,68,467 பேருக்கு அபராதம் விதித்து ரசீது வழங்கப்பட்டுள்ளதாகவும், 2,577 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராயல் என்பீல்டு 650 இரட்டையர்கள்! இந்திய லான்ச் விபரம் கசிந்தது
  2. போருக்கு தயாராகிறார் மோடி; அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஆயுதம் சேகரிப்பு...
  3. பெண்கள் நள்ளிரவிலும் கெத்தாக ரோட்டில் செல்லலாம்; பாதுகாக்க வருகிறது புதிய கூகுள் அப்டேட்
Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Fare Metres Mandatory for Autos. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X