பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராயல் என்பீல்டு 650 இரட்டையர்கள்! இந்திய லான்ச் விபரம் கசிந்தது

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகளின் லான்ச் விபரங்கள் கசிந்துள்ளன. இதுகுற

By Arun

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகளின் லான்ச் விபரங்கள் கசிந்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராயல் என்பீல்டு 650 இரட்டையர்கள்! இந்திய லான்ச் விபரம் கசிந்தது

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 (Interceptor 650) மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650) ஆகிய பைக்குகள், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இந்த 2 பைக்குகளும் லான்ச் ஆவது பல்வேறு காரணங்களால் தாமதமாகி கொண்டே இருந்தது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராயல் என்பீல்டு 650 இரட்டையர்கள்! இந்திய லான்ச் விபரம் கசிந்தது

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதமே, இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகளை காட்சிபடுத்தி விட்டது. அப்போதில் இருந்தே வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த பைக்குகள் எப்போது லான்ச் செய்யப்படும்? என ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராயல் என்பீல்டு 650 இரட்டையர்கள்! இந்திய லான்ச் விபரம் கசிந்தது

ஆனால் அந்த பைக்குகளின் லான்ச் குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது. எனினும் 2018ம் ஆண்டின் முதல் காலாண்டில், இந்த 2 பைக்குகளும் லான்ச் செய்யப்படும் என ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்தது. ஆனால் அதுவும் நடக்கவில்லை.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராயல் என்பீல்டு 650 இரட்டையர்கள்! இந்திய லான்ச் விபரம் கசிந்தது

இன்டர்செப்டார் 650, கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகள் லான்ச் ஆவது தள்ளி போய் கொண்டே இருந்ததற்கான தெளிவான காரணம் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த 2 பைக்குகளும், வரும் செப்டம்பர் மாதம் 22 மற்றும் 26ம் தேதிகளுக்கு இடையே சர்வதேச மார்க்கெட்டில் லான்ச் செய்யப்பட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராயல் என்பீல்டு 650 இரட்டையர்கள்! இந்திய லான்ச் விபரம் கசிந்தது

எனினும் இந்தியாவில் இந்த 2 பைக்குகளும், தீபாவளி பண்டிகையை ஒட்டி லான்ச் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அதாவது தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த 2 பைக்குகளையும் இந்தியாவில் லான்ச் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராயல் என்பீல்டு 650 இரட்டையர்கள்! இந்திய லான்ச் விபரம் கசிந்தது

ரெட்ரோ மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு, டிவின் சிலிண்டர் மார்க்கெட்டில் நுழைய உள்ளதால், இதுவே இந்த ஆண்டில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகப்பெரிய லான்ச் என கருதப்படுகிறது. இந்த 2 பைக்குகளின் விலை ரூ.3-3.50 லட்சத்திற்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராயல் என்பீல்டு 650 இரட்டையர்கள்! இந்திய லான்ச் விபரம் கசிந்தது

ரூ.3-3.50 லட்சம் என்பது எக்ஸ் ஷோரூம் விலையாகும். எனவே இதன் ஆன்ரோடு விலை 4 லட்ச ரூபாய்க்குள்தான் இருக்கும். எனவே இந்த 2 பைக்குகளும், ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்குடன் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராயல் என்பீல்டு 650 இரட்டையர்கள்! இந்திய லான்ச் விபரம் கசிந்தது

ஏனெனில் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் ரூ.5.14 லட்சம். ஆன் ரோடு விலை எப்படியும் ரூ.6 லட்சத்தை எட்டிவிடும். ஆனால் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகள், ஸ்ட்ரீட் 750 பைக்கை விட மலிவான விலையிலேயே கிடைக்கும்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராயல் என்பீல்டு 650 இரட்டையர்கள்! இந்திய லான்ச் விபரம் கசிந்தது

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய 2 பைக்குகளிலும், புதிதாக தயாரிக்கப்பட்ட 648 சிசி, பேரலல் டிவின், ப்யூயல் இன்ஜெக்டட், ஏர் மற்றும் ஆயில் கூல்டு, 4 ஸ்ட்ரோக் இன்ஜின்தான் பொருத்தப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராயல் என்பீல்டு 650 இரட்டையர்கள்! இந்திய லான்ச் விபரம் கசிந்தது

இந்த இன்ஜின் அதிகபட்சமாக, 7,100 ஆர்பிஎம்மில் 47.7 பிஎஸ் பவர் மற்றும் 5,200 ஆர்பிஎம்மில் 52 என்எம் டார்க் திறனை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. இதுதவிர ஸ்லிப்பர் கிளட்ச் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராயல் என்பீல்டு 650 இரட்டையர்கள்! இந்திய லான்ச் விபரம் கசிந்தது

இதுவரை ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கியதிலேயே, இதுதான் மிகவும் அட்வான்ஸ்டு இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் காம்பினேஷன் என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் வர்ணிக்கின்றனர். எனவேதான் இந்த 2 பைக்குகள் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி கிடக்கிறது.

Most Read Articles
English summary
Royal Enfield Interceptor 650 & Continental GT 650 India Launch Expected Soon. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X