மாருதி எர்டிகாவை விட மிகவும் குறைவான விலையில் 9 சீட்டர் கார்! மார்க்கெட்டை மிரள விடும் இந்திய நிறுவனம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero). இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9,863 மஹிந்திரா பொலிரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் அதற்கு முந்தைய ஜனவரி மாதம், அதாவது நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 11,841 மஹிந்திரா பொலிரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 1,978 மஹிந்திரா பொலிரோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 16.70 சதவீத வீழ்ச்சி ஆகும்.

மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில், மஹிந்திரா பொலிரோ கார் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அதாவது நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 9,863 மஹிந்திரா பொலிரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8,690 மஹிந்திரா பொலிரோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 1,173 மஹிந்திரா பொலிரோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. எனவே வருடாந்திர ஒப்பீட்டில் மஹிந்திரா பொலிரோ கார் விற்பனையில் 13.50 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

மஹிந்திரா பொலிரோ கார் தற்போதைய நிலையில் மொத்தம் 3 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மஹிந்திரா பொலிரோ ஒன்றாகும். இதன் ஆரம்ப விலை 7.99 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 9.80 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இது 7 சீட்டர் ஆப்ஷனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த காரின் மற்றொரு வெர்ஷன், மஹிந்திரா பொலிரோ நியோ (Mahindra Bolero Neo) ஆகும். இதன் ஆரம்ப விலை 8.69 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 10.49 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது. இதுவும் 7 சீட்டர் ஆப்ஷனில்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த காரின் 3வது மற்றும் கடைசி வெர்ஷன், மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் (Mahindra Bolero Neo) ஆகும். இதன் ஆரம்ப விலை 10.90 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 12.99 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இது 9 சீட்டர் ஆப்ஷனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் இது 5 சீட்டர் ஆப்ஷன் உடன், ஆம்புலன்ஸ் ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மாருதி சுஸுகி எர்டிகாவை விட குறைவான விலையில், அதே நேரத்தில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில் ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மஹிந்திரா பொலிரோ மிகவும் ஏற்றதாக இருக்கும்.
7 சீட்டர் ஆப்ஷனில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை 8.80 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதாவது மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை விட 81 ஆயிரம் ரூபாய் குறைவான விலையிலேயே, மஹிந்திரா பொலிரோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை வாங்கி விட முடியும்.
அதே நேரத்தில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் டாப் வேரியண்ட்டின் விலை 12.94 லட்ச ரூபாயாக இருக்கிறது. இதை விட மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் காரின் டாப் வேரியண்ட்டின் விலை வெறும் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகம் ஆகும். எனவே மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மஹிந்திரா பொலிரோ உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா நிறுவனம் பொலிரோ காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் வருகைக்கு பின்னர், மஹிந்திரா பொலிரோ காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை, தற்போது இருப்பதை காட்டிலும் அதிகமாக உயரும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








