மாருதி பிரெஸ்ஸாவை விட 1 லட்சம் குறைவான விலையில் பாதுகாப்பான டாடா கார்! எமனே எதிர்ல வந்தாலும் உசுர காப்பாத்தும்
குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) பெற்ற முதல் இந்திய கார் என்ற பெருமை டாடா நெக்ஸான் (Tata Nexon) காருக்கு உண்டு. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா நெக்ஸான் கார் பிரபலமடைய இது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
அத்துடன் அதன் பெரும்பாலான போட்டி மாடல்களை போல் அல்லாமல், டாடா நெக்ஸான் கார், ஐசி இன்ஜின் வெர்ஷனில் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற காரணங்களால், இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் டாடா நெக்ஸான் கார் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து கொண்டுள்ளது.

இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் விதிவிலக்கு அல்ல. டாடா நெக்ஸான் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்தமாக (ஐசி இன்ஜின் + எலெக்ட்ரிக்) 19,430 டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்தமாகவே வெறும் 15,349 டாடா நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 4,081 டாடா நெக்ஸான் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டாடா நெக்ஸான் கார் விற்பனையில் 26.59 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

அத்துடன் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars February 2026), டாடா நெக்ஸான் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. ஆனால் டாடா நெக்ஸான் காரின் மிக முக்கியமான போட்டி மாடலான மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) காருக்கு இந்த பட்டியலில் 5வது இடம் மட்டும்தான் கிடைத்துள்ளது.
ஏனெனில் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 17,863 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. டாடா நெக்ஸான் காரானது, மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவை விட விலை குறைவானதாக உள்ளது. அதாவது மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.26 லட்ச ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.01 லட்ச ரூபாயாக இருக்கிறது. ஆனால் டாடா நெக்ஸான் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 7.31 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதாவது மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவை விட 95 ஆயிரம் ரூபாய் குறைவு.
அதே நேரத்தில் டாடா நெக்ஸான் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 14.15 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதாவது மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவின் டாப் வேரியண்ட் விலையை விட டாடா நெக்ஸான் காரின் டாப் வேரியண்ட் விலை 1.14 லட்ச ரூபாய் அதிகம். இருப்பினும் இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், டாடா நெக்ஸான் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது.
அதே நேரத்தில் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 12.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. மறுபக்கம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 17.49 லட்ச ரூபாயாக உள்ளது. இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே டாடா மோட்டார்ஸ் மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா நெக்ஸான் காரானது, மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவிற்கு மட்டுமல்லாது, ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) மற்றும் ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) ஆகிய கார்களுக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








