34 கிமீ மைலேஜ்! டாடா டியாகோவை விட 1 லட்சம் குறைவான விலையில் புது கார்! ஷோரூம்ல கூட்டம் அலை மோதுது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10). இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9,787 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 8,541 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் மட்டும்தான் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது இம்முறை 1,246 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார், விற்பனையில் 14.59 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி ஆல்டோ கே10 திகழ்கிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் ஆரம்ப விலை வெறும் 3.70 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 5.45 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, அதில் ஏராளமான பாதுகாப்பு வசதிகள் (Safety Features) வழங்கப்படுகின்றன. இதில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் 6 ஏர்பேக்குகள் வசதி மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதாவது இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டிருக்கும்.
அத்துடன் இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு வசதிகளையும், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் கொண்டுள்ளது. இவை எல்லாம் தவிர, 17.78 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்ற வசதிகளையும் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் கொண்டுள்ளது.
இது போன்ற வசதிகள் உடன், சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 திகழ்கிறது. மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. இது மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா டியாகோ (Tata Tiago) கார்தான், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் நேரடி போட்டி மாடல் ஆகும். ஆனால் டாடா டியாகோ காரை விட மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விலை மிகவும் குறைவு. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா டியாகோ காரின் ஆரம்ப விலை 4.57 லட்ச ரூபாயாக உள்ளது.
இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். அதாவது டாடா டியாகோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை விட 87 ஆயிரம் ரூபாய் குறைவான விலையிலேயே மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரை வாங்கி விட முடியும். எனவே குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மிகவும் ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








