உடன்பிறப்பே.. 5 முறை முதல்வர் சிம்மாசனத்தை வென்ற தலைவனிடம் இருந்த கார்களின் எண்ணிக்கை தெரியுமா?

முதுபெரும் அரசியல் தலைவரான கருணாநிதி, உடன்பிறப்புகளை எல்லாம் மீளா துயரில் ஆழ்த்தி விட்டு, மண்ணுலகில் இருந்து விடைபெற்றுள்ளார்.

By Arun

முதுபெரும் அரசியல் தலைவரான கருணாநிதி, உடன்பிறப்புகளை எல்லாம் மீளா துயரில் ஆழ்த்தி விட்டு, மண்ணுலகில் இருந்து விடைபெற்றுள்ளார். கருணாநிதி என்னும் கம்பீரமான அந்த ஆளுமை, வயோதிகம் காரணமாக, தனது கடைசி காலத்தை சக்கர நாற்காலியில் தள்ள நேரிட்டது. அந்த நேரத்தில் சில வாகனங்கள் அவருக்கு உற்ற நண்பனாய் இருந்தன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி பெயரில் கார் இருந்ததா?

இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாகவும், ஆகச்சிறந்த ஆளுமையாகவும் விளங்கிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதி, நேற்று (ஆகஸ்ட் 7ம் தேதி) காலமானார். கருணாநிதியின் மறைவு செய்தி, உலகெங்கும் பரவி கிடக்கும் தமிழர்களை சோக கடலில் ஆழ்த்தியுள்ளது.

5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி பெயரில் கார் இருந்ததா?

கடந்த 7 தசாப்தங்களாக இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த ஒரு சகாப்தம் மறைந்திருக்கிறது. கடைக்கோடி தொண்டன் முதல் பிரதமர் நரேந்திர மோடி வரை, கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கின்றனர்.

5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி பெயரில் கார் இருந்ததா?

5 முறை தமிழக முதல்வர் சிம்மாசனத்தை கைப்பற்றியிருந்தாலும், கருணாநிதியின் பெயரில் ஒரு கார் கூட கிடையாது. 2016ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுக தலைவர் கருணாநிதி, திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதானே, சட்டமன்ற தேர்தல்களில் அவருக்கு தோல்வி ஏது?

5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி பெயரில் கார் இருந்ததா?

அப்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில், தனது பெயரில் கார் எதுவும் இல்லை என்பதை கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார். எனினும் டொயோட்டா அல்ஃபார்டு போன்ற ஒரு சில கார்களை கருணாநிதி பயன்படுத்தி வந்துள்ளார்.

5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி பெயரில் கார் இருந்ததா?

7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா அல்ஃபார்டு கார், சொகுசு மினி வேன் ரகத்தை சேர்ந்தது. ஹைட்ராலிக் இருக்கை மூலம், கருணாநிதி எளிதாக ஏறி, இறங்க உதவும் வகையில், இந்த கார் ஸ்பெஷலாக கஸ்டமைஸ் செய்யப்பட்டிருந்தது.

5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி பெயரில் கார் இருந்ததா?

இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவருக்கு, உற்ற நண்பனாக திகழ்ந்த கார் என்ற சிறப்பை டொயோட்டா அல்ஃபார்டு பெறுகிறது. டொயோட்டா நிறுவனம், கடந்த 2002ம் ஆண்டு முதல் அல்ஃபார்டு காரை உற்பத்தி செய்து வருகிறது.

5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி பெயரில் கார் இருந்ததா?

கருணாநிதியின் வசதிக்கு ஏற்ப பல்வேறு வழிகளில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட டொயோட்டா அல்ஃபார்டு காரில், பாதுகாப்பு அம்சங்களுக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். இந்த காரில் 6 ஏர் பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி பெயரில் கார் இருந்ததா?

இதுதவிர லேன் மாறுவதை கண்காணித்து எச்சரிக்கும் லேன் மானிட்டரிங் சிஸ்டம், டிரைவரின் கண்களுக்கு புலப்படாத பகுதியில் வரும் வாகனங்கள் குறித்து எச்சரிக்கும் ப்ளைண்ட் ஸ்பாட் டிடெக்ஸன் சிஸ்டம், ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி பெயரில் கார் இருந்ததா?

கருணாநிதியின் காரை போலவே, தேர்தல் பிரசாரங்களுக்கு அவர் பயன்படுத்தும் வாகனமும் பல்வேறு சிறப்புகளை வாய்ந்தது. இளைஞராக இருந்த காலகட்டத்தில் அவரது முழக்கம் எப்படி இருந்ததோ, அதன் வீச்சு சற்றும் குறையாமல், இந்த பிரசார வாகனத்தில் இருந்தும் எதிரொலித்தது.

5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி பெயரில் கார் இருந்ததா?

கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி பயன்படுத்திய பிரசார வேனில், அவரின் சக்கர நாற்காலியை தூக்க உதவியாக, ஸ்பெஷல் ஹைட்ராலிக் லிப்ட் பொறுத்தப்பட்டிருந்தது. அவர் சுலபமாக ஏறி, இறங்குவதற்காக இந்த வசதி செய்யப்பட்டிருந்தது.

5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி பெயரில் கார் இருந்ததா?

அவர் அமரும் சேர், 360 டிகிரியில் சுற்றக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதுதவிர வேன் முழுவதும் குளிர்சாதன வசதியும் செய்யப்பட்டிருந்தது. வை-பை, ஸ்பாட் லைட்டுகள், ஸ்பீக்கர்கள் என சகல வசதிகளும் இந்த வேனில் ஏற்படுத்தப்பட்டன. கோவையை சேர்ந்த ஒரு பிரபலமான வாகன ரீ மாடலிங் கம்பெனி, இந்த வேனை தயார் செய்தது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. ஒரு முறை சார்ஜ் செய்தால் 800 கிமீ பயணம்..உலகின் முதல் தெர்மல் பேட்டரி பிளாண்ட் இந்தியாவில் திறப்பு..
  2. டொயோட்டா பிராண்டில் வெளிவரும் முதல் மாருதி கார் இதுதான்!!
  3. தரமில்லாத ஹெல்மெட் விற்றால் 2 ஆண்டு சிறை; மத்திய அரசு அதிரடி

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Former Tamilnadu CM Karunanidhi Vehicles. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X