தரமில்லாத ஹெல்மெட் விற்றால் 2 ஆண்டு சிறை ; மத்திய அரசு அதிரடி

தரமில்லா ஹெல்மெட்களை விற்றால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை உறுதி என்றும், இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றம் விற்கப்படும் ஹெல்மெட்கள் எல்லாம் பிஐஎஸ் அளித்த விதிமுறையின் கீழ்தான் தயார் செய்யப்பட வேண்டும் எனவு

By Balasubramanian

தரமில்லாத ஹெல்மெட்களை விற்றால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை உறுதி என்றும், இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் விற்கப்படும் ஹெல்மெட்கள் எல்லாம் பிஐஎஸ் அளித்த விதிமுறையின் கீழ் தான் தயார் செய்யப்பட வேண்டும் எனவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றம் நெடுஞ்சாலத்துறை அறிவித்துள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம் தான் ஹெல்மெட் தயாரிப்பின் விதிமுறைகள் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தரமில்லாத ஹெல்மெட் விற்றால் 2 ஆண்டு சிறை ; மத்திய அரசு அதிரடி

மத்திய சாலைபேக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில் அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி டூவீலருக்கான தயாரிக்கப்படும் ஹெல்மெட்களில் ஐஎஸ்ஐ தரம் இல்லாத ஹெல்மெட்களை தயாரிக்கவோ, ஸ்டாக் வைக்கவோ, விற்கவோ கூடாது என்று அறிக்கப்பட்டுள்ளது.

தரமில்லாத ஹெல்மெட் விற்றால் 2 ஆண்டு சிறை ; மத்திய அரசு அதிரடி

மேலும் அதை மீறுபவர்களுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை அல்லது 2 லட்சம் அபராதம் வதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் தான் பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்டுஸ் (BIS) சார்பில் ஹெல்மெட் தயாரிப்பு குறித்த சில விதிமுறை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின் ஒரு வாரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தரமில்லாத ஹெல்மெட் விற்றால் 2 ஆண்டு சிறை ; மத்திய அரசு அதிரடி

கடந்த வாரம் பிஐஎஸ் செய்யத விதிமுறை மாற்றத்தின் படி டூவீலர்களுக்காக தயாரிக்கப்படும் ஹெல்மெட்களின் அதிகபட்ச எடையை 1.2 கிலோவாக குறைந்தது. முன்னர் இதன் அதிகபட்ச எடையாக 1.5 கிலோ என இருந்தது.

தரமில்லாத ஹெல்மெட் விற்றால் 2 ஆண்டு சிறை ; மத்திய அரசு அதிரடி

தற்போது உள்ள அறிவிப்பின் படி இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது விற்கப்படும் அனைத்து ஹெல்மெட்களும் பிஐஎஸ் தரத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்கள் எல்லாம் எவ்வளவு தாக்கத்தை தாங்குகிறது என்பது டெஸ்ட் செய்யப்படுகிறது. இந்த டெஸ்ட் பல்வேறு வெப்ப சூழ்நிலைகளிலும், ஈரப்பத சூழ்நிலையிலும் டெஸ்ட் செய்யப்படுகிறது.

தரமில்லாத ஹெல்மெட் விற்றால் 2 ஆண்டு சிறை ; மத்திய அரசு அதிரடி

இதில் தாக்கத்தை தாங்கும் திறன். நீடித்து உழைக்கும் திறன், உராய்வின் போது எப்படி இருக்கிறது என்பதை சோதிக்கும் திறன். விபத்தில் போது ஹெல்மெட் எளிதாக கழண்டு செல்ல வாய்ப்புள்ளதா என்பதை அறியும் டெஸ்ட். ஆகியன பரிசோதிக்கப்படுகிறது.

தரமில்லாத ஹெல்மெட் விற்றால் 2 ஆண்டு சிறை ; மத்திய அரசு அதிரடி

தற்போது இந்தியாவில் பெரும்பகுதியில் ரோட்டோரங்களில் தரம் இல்லாத ஹெல்மெட்களின் விற்பனை தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த ஹெல்மெட்களும் அதிகமாக மக்கள் மத்தியில் வாங்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் டிராபிக் போலீசிடம் இருந்து ஹெல்மெட் போடாமல் சென்றால் போடப்படும் அபராதத்தில் இருந்து தப்பிக்க இதை மக்கள் செய்து வருகின்றனர்

தரமில்லாத ஹெல்மெட் விற்றால் 2 ஆண்டு சிறை ; மத்திய அரசு அதிரடி

இது குறித்து ஆசியாவின் மிகப்பெரிய ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்டீல் பேர்டு நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் கபூர் கூறுகையில் :" அரசின் இந்த முடிவு வரவேற்க்கதக்கது. ஐஎஸ்ஐ தரம் இல்லாத ஹெல்மெட்களை மார்கெட்டில் இருந்து நீக்க இது சிறப்பான நடவடிக்கை தான்.

தரமில்லாத ஹெல்மெட் விற்றால் 2 ஆண்டு சிறை ; மத்திய அரசு அதிரடி

தற்போது பெரிய பெரிய நிறுவனங்கள் சிலர் ஹெல்மெட்களை இந்தியாவிற்கு அனுப்புகின்றனர். அவர்களும் இனி ஐஎஸ்ஐ தரத்திற்கு உட்பட்டே ஹெல்மெட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்." இவ்வாறு கூறினார்.

தரமில்லாத ஹெல்மெட் விற்றால் 2 ஆண்டு சிறை ; மத்திய அரசு அதிரடி

விலை குறைந்த ஹெல்மெட்கள் மட்டும் அல்ல விலை உயர்ந்த சில ரக ஹெல்மெட்களும் ஐஎஸ்ஐ தரத்தை உறுதி செய்யவில்லை. நீங்கள் தற்போது ஹெல்மெட் வாங்குகிறீர்கள் என்றால் ஐஎஸ்ஐ தரம் வாய்ந்த ஹெல்மெட்டை வாங்குகிறீர்களா என்பதை ஆய்வு செய்து பின் வாங்குங்கள்.நீங்கள் வாங்கும் ஹெல்மெட்டில் கூர்மையான பாகங்கள், ஊசி போன்ற வடிவம் இருந்தால் அது உங்கள் உயிருக்கே ஆபத்தாகி விடும் எச்சரிக்கை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்.

Most Read Articles
மேலும்... #ஹெல்மெட் #helmet
English summary
Non ISI Helmets To Be Banned . Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X