மலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... இது மாபாதக படுகொலை!!

மலேசிய விமான விபத்து குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. விமானத்தின் கேப்டன் அகமது ஷாதான் விமானத்தை கடத்தி, கடலில் விழச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானத்தில் காற்றிற

By Saravana Rajan

உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய, மலேசிய விமானம் மாயமாகி 4 ஆண்டுகளை கடந்துவிட்டது. எனினும், அந்த விமானம் விபத்துக்குள்ளானதற்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், மாயமான மலேசிய விமானம் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... இது மாபாதக படுகொலை!!

கடந்த 2014ம் ஆண்டு மலேசியாவிற்கு சொந்தமான MH370 போயிங் 777 விமானம் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகருக்கு பீஜிங் நகருக்கு சென்றபோது மாயமானது. அந்த விமானத்தில் 239 பேர் பயணித்தனர். விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

மலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... இது மாபாதக படுகொலை!!

பல்வேறு நாடுகளும் மலேசியாவுக்கு உதவியாக தேடுதல் முயற்சியில் களமிறங்கியும், தேடுதல் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதுவரை 4 ஆண்டுகள் ஆன நிலையிலும், அந்த விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

மலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... இது மாபாதக படுகொலை!!

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்பாகும் "60 மினிட்ஸ் ஆஸ்திரேலியா" என்ற நிகழ்ச்சியில், மலேசிய விமான விபத்து குறித்து கனடா நாட்டு விமான விபத்து புலனாய்வு நிபுணர் லாரி வான்ஸ் என்பவர் அதிர்ச்சி தரும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

மலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... இது மாபாதக படுகொலை!!

லாரி வான்ஸ் கூற்றுப்படி, இதுவரை கிடைத்த தரவுகளின்படி, மலேசிய விமானம் விபத்தில் சிக்கியது ஒரு திட்டமிட்ட செயல் என்று அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மூத்த விமானிகள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரியும் உடனிருந்தார்.

மலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... இது மாபாதக படுகொலை!!

மாயமான எம்எச்370 விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த சூழலில், அது திட்டமிட்டு கடத்தப்பட்டு விபத்தில் சிக்க வைக்கப்பட்டதாக லாரி வான்ஸ் கூறி இருக்கிறார்.

மலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... இது மாபாதக படுகொலை!!

விமானம் விபத்தில் சிக்கியதற்கு, அந்த விமானத்தின் கேப்டன் ஸஹாரி அகமது ஷாதான் முழு பொறுப்புக்கு உரியவராகவும் லாரி வான்ஸ் கூறி இருக்கிறார். தற்கொலை செய்யும் எண்ணத்துடன் ஸஹாரிதான் விமானத்தை திட்டமிட்டு கடத்தியுள்ளார்.

மலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... இது மாபாதக படுகொலை!!

மலேசியா மற்றும் தாய்லாந்து நாட்டு ராணுவ ரேடார்களில் சிக்காத வகையில், மிகவும் சாதுர்யமாக திட்டமிட்டு கேப்டன் ஸகாரி செலுத்தி இருக்கிறார். இதற்காக, அவர் விமானத்தின் உயரத்தை குறைத்து மிகச் சரியான திசையில் இயக்கி இருக்கிறார்.

மலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... இது மாபாதக படுகொலை!!

விமானம் சரியான திசையில் சென்றதாலும், ரேடாரில் கண்களில் சிக்காததாலும், ராணுவ விமானங்கள் அதனை வழிமறிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மலேசிய மற்றும் தாய்லாந்து எல்லைகளை தாண்டி சர்வதேச வான் எல்லையில் செல்லும்போது, விமானத்தின் கேபினில் காற்றிறக்கம் செய்துள்ளார்.

மலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... இது மாபாதக படுகொலை!!

இதனால், அதில் பயணித்த அனைவரும் மூச்சுத் திணறி உயிரிழந்திருக்கக் கூடும். இதனால்தான் ஒரு பயணியின் உடல்கூட கிடைக்கவில்லை. இது திட்டமிட்ட படுகொலை. பின்னர், விமானத்தை இந்திய பெருங்கடல் பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் அவர் கடலில் மெதுவாக இறக்கி விபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

மலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... இது மாபாதக படுகொலை!!

இதனால், விமானம் தண்ணீரில் மோதி வெடித்து சிதறாமல், மெதுவாக தண்ணீர் புகுந்து கடலுக்குள் மூழ்கி இருக்கும். இதனால்தான், உதிரிபாகங்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே வந்த தகவல்களின்படி, விமானம் டெத் டைவ் என்று சொல்லப்படுவது போல விமானிகளின் கட்டுப்பாடு இல்லாமல் பறந்து சென்று விழவில்லை.

மலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... இது மாபாதக படுகொலை!!

நிச்சயமாக விமானத்தை யாரோ ஒருவர் சாமர்த்தியமாக இயக்கி இருப்பது உண்மை. ரேடாரில் மறைந்தது முதல் கிட்டத்தட்ட 115 மைல் தூரம் விமானம் சரியாக இயக்கப்பட்டு இருப்பதும் இது விமானியின் சதிச் செயல் என்பதற்கான முக்கிய ஆதாரம் என்று லாரி வான்ஸ் அந்த நிகழ்ச்சியில் விவாதத்தின்போது பதில் அளித்தார்.

மலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... இது மாபாதக படுகொலை!!

அதேநேரத்தில், வேறு சில புலனாய்வு அதிகாரிகள் விமானம் எரிபொருள் தீர்ந்து கடலில் விழுந்திருக்கலாம் என்றும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக கருதப்படுகிறது.

மலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... !!

அதற்கு காரணம், போயிங் 777 விமான மாடல் உலகிலேயே பாதுகாப்பான மாடல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. போயிங் 777 விமானங்கள் சேவைக்கு வந்து 23 ஆண்டுகள் ஆகின்றன. மொத்தமே 6 விமானங்கள் மட்டுமே விபத்துக்களில் சிக்கி இருக்கின்றன. அதில், மாயமான மலேசிய விமானமும் ஒன்று.

மலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... !!

2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, உற்பத்தி செய்யப்பட்ட 1,412 போயிங் 777 விமானங்களில் வெறும் 0.4 சதவீத விமானங்கள் மட்டுமே விபத்தில் சிக்கி உள்ளன. நீண்ட தூர தடங்களில் மிக பாதுகாப்பான விமானமாக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

மலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... !!

எனவே, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு மலேசிய விமானம் விபத்தில் சிக்கி இருப்பதற்கான வாய்ப்புகளை விமானத் துறை நிபுணர்கள் அறவே மறுக்கின்றனர். இந்த விமான விபத்திற்கு மனித தவறும், சதிச் செயலுமே காரணமாக இருக்க முடியும் என்று அடித்து கூறுகின்றனர்.

மலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... !!

லாரி வான்ஸ் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதத்தில், மாயமான விமானத்தின் கேப்டன் ஸஹாரி அகமது ஷா வீட்டில் கைப்பற்றப்பட்ட விமான சிமுலேட்டர் மற்றும் வரைபடங்களை வைத்து அவர் மிக தீவிரமான பயிற்சிகளை பெற்றிருப்பதும் புலனாகி இருக்கிறது.

மலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... !!

அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டரில் பல்வேறு வழித்தட வரைபடங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்ததால், அவர் எந்த தடத்தை பயன்படுத்தினார் என்பதும் புலனாகவில்லை. கற்ற மொத்த வித்தையையும் தனது இந்த சதிச் செயலுக்கு அவர் பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் வெளிப்படையாகவே முன் வைக்கப்படுகிறது.

மலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... !!

எது உண்மை என்பது இன்னமும் புதிராகவே உள்ளது. உண்மையான காரணத்திற்கான தரவுகள் அல்லது இதற்கு மறுப்பு தெரிவித்து ஏதேனும் புதிய அறிக்கை வரும் வரை இதையே நிதர்சனமாக கருத வேண்டிய அவலம் இந்த விபத்தில் நீடிக்கிறது.

இதர தொடர்புடைய செய்திகள்:

  1. ஆகாய ராஜா... போயிங் 777 விமானத்தின் சிறப்புகள்!
  2. ஏர்பஸ் ஏ380 Vs போயிங் 777: சுவாரஸ்ய ஒப்பீடு!
  3. பிரதமர் மோடி பயன்பாட்டிற்காக வரும் புதிய போயிங் 777 விமானத்தின் சிறப்பம்சங்கள்!
Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
MH370 Mystery: Aviation Experts Revealed The Truth.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X