ரூ.25 கோடி மதிப்புடைய குண்டு துளைக்காத காரை வாங்கும் முகேஷ் அம்பானி!

ரூ.25 கோடி மதிப்புடைய குண்டு துளைக்காத காரை முகேஷ் அம்பானி வாங்க இருக்கிறார். அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி ரூ.25 கோடி மதிப்புடைய காரை வாங்க இருக்கிறார். அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரூ.25 கோடி மதிப்புடைய காரை வாங்கும் முகேஷ் அம்பானி!

இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் உயிருக்கு பல்வேறு வகையில் அச்சுறுத்தல்கள் உள்ளன. அவர் தற்போது இசட் ப்ளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால், அவர் நவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்களை பயன்படுத்தி வருகிறார்.

ரூ.25 கோடி மதிப்புடைய காரை வாங்கும் முகேஷ் அம்பானி!

கடந்த 2015ம் ஆண்டு ரூ.10 கோடி மதிப்புடைய குண்டு துளைக்காத அம்சங்கள் கொண்ட பிஎம்டபிள்யூ ஹை செக்யூரிட்டி காரை வாங்கி பயன்படுத்தி வருகிறார். இந்த காரில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.

ரூ.25 கோடி மதிப்புடைய காரை வாங்கும் முகேஷ் அம்பானி!

இந்த சூழலில், பிஎம்டபிள்யூ ஹை செக்யூரிட்டி காரைவிட அதிக பாதுகாப்பு வசதிகளும், சிறப்பம்சங்களும் கொண்ட புதிய மெர்சிடிஸ் மேபக் சொகுசு காரை வாங்க இருக்கிறார். இந்த காரின் சிறப்பமசங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரூ.25 கோடி மதிப்புடைய காரை வாங்கும் முகேஷ் அம்பானி!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மிக உயரிய சொகுசு கார் மாடல் எஸ் க்ளாஸ். இதன் அதிக வீல் பேஸ் நீளம் கொண்ட மெர்சிடிஸ் - மேபக் எஸ்-600 புல்மேன் கார்டு என்ற அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட லிமோசின் ரக கார் மாடலையே முகேஷ் அம்பானி வாங்க இருக்கிறார்.

ரூ.25 கோடி மதிப்புடைய காரை வாங்கும் முகேஷ் அம்பானி!

இந்த கார் மிக அதிக பாதுகாப்பு வசதிகள் நிறைந்தது. சாதாரண கார்கள் ஒன்று முதல் ஒன்றரை டன் எடை கொண்டதாக இருக்கும் நிலையில், இந்த கார் 5.1 டன் எடை கொண்டது.

ரூ.25 கோடி மதிப்புடைய காரை வாங்கும் முகேஷ் அம்பானி!

இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கும் குண்டுதுளைக்காத கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் பாடி பேனல்கள் 7.62*51மிமீ துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் எம்60, எம்12 மற்றும் எஃப்என்-எஃப்ஏஎல் துப்பாக்கிகளையும் இந்த கண்ணாடி ஜன்னல்கள் தாக்குப் பிடிக்கும் திறன் கொண்டது.

ரூ.25 கோடி மதிப்புடைய காரை வாங்கும் முகேஷ் அம்பானி!

இந்த காரின் பாடி பேனல்களுக்கு இடையில் துப்பாக்கி குண்டுகளை தடுத்து நிறுத்துவதற்கான விசேஷ ஸ்டீல் பிளேட் பொருத்தப்பட்டு இருக்கிறது. துப்பாக்கி குண்டுகள் மட்டுமின்றி, குண்டு வெடிப்புகளில் இருந்தும் பயணிகளை பாதுகாக்கும் திறன் வாய்ந்தது.

ரூ.25 கோடி மதிப்புடைய காரை வாங்கும் முகேஷ் அம்பானி!

கண்ணி வெடித்தாக்குதல் மற்றும் குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்படாத அடிப்பாகத்துடன் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் டயர் பஞ்சரானாலும், குறிப்பிட்ட வேகத்தில் செல்வதற்கான ரன் ஃப்ளாட் டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. தீப்பிடிக்காத எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ரூ.25 கோடி மதிப்புடைய காரை வாங்கும் முகேஷ் அம்பானி!

பாதுகாப்பு வசதிகள் மட்டுமல்ல, இந்த கார் சொகுசு அம்சங்களிலும் விஞ்சி நிற்கிறது. லிமோசின் ரக கார் மாடல் என்பதால், உட்புறத்தில் மிக மிக தாராளமான இடவசதியை பெற்றிருக்கிறது. கால்களை நீட்டி சாய்ந்து செல்வதற்கான அதிக இடவசதி இருக்கிறது.

ரூ.25 கோடி மதிப்புடைய காரை வாங்கும் முகேஷ் அம்பானி!

மிக மிக சொகுசான ராஜ இருக்கைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஓட்டுனர் அறை தனியாக தடுக்கப்பட்டு ஒரு தனி அறையில் இருப்பது போன்ற சுகத்தை தரும். இந்த காரில் மிக உயரிய பொழுதுபோக்கு சாதனங்களும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ரூ.25 கோடி மதிப்புடைய காரை வாங்கும் முகேஷ் அம்பானி!

5 டன் எடையுடைய இந்த காரில் 6.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 530 பிஎச்பி பவரையும், 830 என்எம் டார்க் திறனையும் வழங்கும் வல்லமை கொண்டது. இந்த காரில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.25 கோடி மதிப்புடைய காரை வாங்கும் முகேஷ் அம்பானி!

அவசர சமயங்களில் மிக விரைவாக அந்த இடத்திலிருந்து செல்வதற்கு போதுமான திறனை வழங்குவதோடு, குறைந்த ஆர்பிஎம்.,மில் அதிக டார்க் திறனை வழங்குவதும், ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இந்த காருக்கு சிறப்பு.

ரூ.25 கோடி மதிப்புடைய காரை வாங்கும் முகேஷ் அம்பானி!

இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும். அதிக நிலைத்தன்மையுடன் செல்வதற்கும், விபத்து நேரிட்டால் பயணிகளை காப்பதற்கும் ஏர்பேக்குகள் உள்ளிட்ட காருக்கான பாதுகாப்பு அம்சங்களும் ஏராளம்.

ரூ.25 கோடி மதிப்புடைய காரை வாங்கும் முகேஷ் அம்பானி!

ஜெர்மனியில் இந்த கார் ரூ.10.5 கோடி மதிப்புடையதாக இருக்கிறது. இந்தியாவில் இறக்குமதி செய்யும்போது வரி மற்றும் பதிவுக் கட்டணங்களை சேர்த்து ரூ.25 கோடி மதிப்புடையதாக இருக்கும்.

ரூ.25 கோடி மதிப்புடைய காரை வாங்கும் முகேஷ் அம்பானி!

பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தும் பிஎம்டபிள்யூ ஹை செக்யூரிட்டி காரைவிட இது அதிக பாதுகாப்பு அம்சங்களும், இரு மடங்கு கூடுதல் விலை கொண்ட கார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.25 கோடி மதிப்புடைய காரை வாங்கும் முகேஷ் அம்பானி!

முகேஷ் அம்பானி பயன்படுத்தும் பல கோடி மதிப்புடைய கார்களை செலுத்தும் ஓட்டுனர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இங்கே க்ளிக் செய்யவும்.

Via- Cartoq

More from DriveSpark

Article Published On: Friday, December 15, 2017, 12:56 [IST]
English summary
Mukesh Ambani Will Get New Armoured Car Soon.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+