ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்- 7ம் பாகம் முழுவதிலும் பால்வாக்கர் இருப்பார்?!
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் புகழ் பால்வாக்கர் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த கோர கார் விபத்தில் உயிரிழந்தார். அவர் சென்ற போர்ஷே கரீரா ஜிடி காரை ஓட்டிய அவரது நெருங்கிய நண்பரும் விபத்தில் உயிரிழந்தார்.
உலக சினிமா ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய அந்த நிகழ்வுக்கு மருந்து போடும் வகையில், புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. ஆம், அந்த தகவலையும், பால்வாக்கர் கார் விபத்தில் சிக்கியதற்கு காரணமாக விசாரணை அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் வரிசை படங்களில் பால்வாக்கர் இன்றிமையாதவராக திகழ்ந்தார். அவர் இல்லாத ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படங்களை ரசிகர்களும், ஏன் சினிமாத் துறையினர் கூட நினைத்து பார்க்க விரும்பவில்லை. இதனை யுனிவர்சல் ஸ்டூடியோவும் உணர்ந்து கொண்டுள்ளது. அதற்காக புதிய முயற்சியை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

முழுவதுமாக இருப்பார்!
அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ந் தேதி வெளியிடப்பட இருக்கும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7ம் பாகத்தில் பால்வாக்கர் முழுவதுமாக தோன்ற வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. பிரத்யேக வீடியோ சாஃப்ட்வேர் மூலம் பால்வாக்கரை இந்த படத்தில் முழுவதுமாக தோன்ற வைப்பதற்கான முயற்சிகளை யுனிவர்சல் ஸ்டூடியோ மேற்கொண்டுள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்த தகவல் வெளியாகியிருப்பது பால்வாக்கர் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கொடுக்கப்படும் சிறந்த மரியாதையாக இதை கருதுவதாக அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

விபத்தில் புதிய திருப்பம்
படத்தில் அவர் தோன்றுவார் என்ற தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் அதேவேளையில், பால்வாக்கர் மரணம் பற்றிய மற்றுமொரு பரபரப்பு தகவலை லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்ட்டி செரீஃப் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், பால்வாக்கர் சென்ற கார் விபத்துக்குள்ளானபோது 150 கிமீ வேகத்தில் சென்றது உறுதியாகியுள்ளது. அதைவிட இன்னொரு காரணம்தான் விபத்துக்கு முக்கியமானதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரணம்
காரில் பொருத்தப்பட்டிருந்த 9 ஆண்டுகள் பழமையான தேய்ந்த டயர்கள்தான் கார் கட்டுப்பாட்டை இழப்பதற்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய டயர்தான் பால்வாக்கர் நண்பரின் கணிப்பை பொய்யாக்கி, கார் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, காரில் தொழில்நுட்பக் கோளாறு எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

தோசைக்கல் டயரின் விபரீதம்
உயிருக்கு உலை வைக்கு தோசைக்கல் டயர் என்ற தலைப்பில் நாம் ஏற்கனவே எழுதியிருக்கும் டிப்ஸ் செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

மரணம் பற்றி பால்வாக்கரின் கூற்றுகள்
மரணத்தை பற்றி பால்வாக்கர் கூறிய வார்த்தைகளை காண இங்கே கிளிக் செய்யவும்.

ஃபேஸ்புக் பக்கம்
சுவையான ஆட்டோமொபைல் செய்திகளுக்கு எங்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்பில் இருங்கள்.


Click it and Unblock the Notifications








