உயிருக்கு உலை வைக்கும் தோசைக்கல் டயர்: முதல்ல மாத்துங்க

Bald Tyre
வாகனங்களுக்கு பேலன்ஸ் கொடுப்பதில் டயர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறைந்த தூரமோ அல்லது நீண்ட தூர பயணமோ எதுவாயினும் டயர்கள் பங்கு மிக முக்கியமானது. எனவே, பரிந்துரைக்கப்பட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை டயர்களை மாற்றிவிடுவது அவசியம்.

ஓடி ஓடி உழைத்து தேய்ந்த டயர்களை வாகனங்களில் பயன்படுத்துவது உயிருக்கு நாமே உலை வைத்துக்கொள்வது போன்றது. டயர்களில் இருக்கும் பட்டன்கள் தேய்மானம் அடைந்து வழவழப்பாகும்போது டயர்கள் முழு அளவிலான பேலன்ஸ் தராது.

சிறு கற்கள் அல்லது கிளிஞ்சல்கள் டயர்களில் பட்டால்கூட பஞ்சராகும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக, கோடைகாலத்தில் காற்று சூடாகி விரிவடையும்போது ட்யூப் கொடுக்கும் அழுத்தத்தால் டயர் எளிதாக வெடிக்கும் ஆபத்தும் இருக்கிறது.

வளைவுகளில் திரும்பும்போதும் இந்த டயர்கள் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் அதிகம். எனவே, போதுமான பட்டன்கள் இல்லாத டயர்களை பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். இதுபோன்ற டயர்களுடன் செல்லும்போது உயிருக்கு கியாரண்டி இல்லை என்பதை உணருங்கள்.

மேலும், பிரேக் பிடிக்கும்போதும் இந்த டயர்கள் குறிப்பிட்ட தூரத்திற்குள்ளும், சரியான திசையிலும் நிற்காது. எதிர்பார்த்த அளவு மைலேஜும் கிடைக்காது. எனவே, பயன்பாட்டுக்கு தக்கவாறு உங்களது கார் அல்லது பைக் டயர்களை மாற்றி விடுங்கள்.

வாகனத்தில் மற்ற பிரச்னைகளை சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டாலும், டயர் மாற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது மிக அவசியம். சாதாரண பயன்பாடு உள்ள டயர்களை 3 முதல் 4 ஆண்டுகளில் மாற்றிவிடுவது அவசியம்.

மேலும், 8,000 கிமீ ஓடியவுடன் முன்பக்க டயர்களை பின்பக்கத்திலும், பின்பக்க டயர்களை முன்பக்கத்திலும் மாற்றுங்கள். ஏனெனில், முன்பக்க டயர்கள் அதிக தேய்மானம் அடையும் என்பதால் இதுபோன்று செய்வது அவசியம்.

தவிர, சரியான வீல் பேலன்சிங் மற்றும் முறையாக பராமரிக்கப்படும் டயர்கள் 50,000 கிமீ வரை ஆயுளை கொடுக்கும். எனவே, டயர் பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம்.

Most Read Articles
English summary
Some things can remain ageless. The hill that you saw while you were a kid will remain the same even after you turn ninety. Not the same thing cannot be told about things that we use in our vehicles, especially tyres. Like any manufactured product, even tyres have a use by date and expiry date. You cannot continue to use a tyre for years together without risking your limb or life. A tyre 's fitness is very essential for avoiding accidents as it is the only thing that is in contact with the ground while you are driving.
Story first published: Thursday, March 22, 2012, 15:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X