கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டுக்கு ரெனோ டஸ்ட்டர் பரிசு!
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான ராகுல் டிராவிட்டுக்கு ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ கிரிக்கெட் இணையதளத்தின் சார்பில் கிரிக்கெட் உலகில் சாதனை புரிபவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான கிரிக்இன்ஃபோ தளத்தின் விருதுகள் வழங்கும் நிகழ்வு சமீபத்தில் நடந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில், ரெனோ கார் நிறுவனமும் ஸ்பான்சராக இணைந்து கொண்டது. இந்த ஆண்டுக்கான விருதுகள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் உலகில் மகத்தான சாதனைகளை படைத்த ராகுல் டிராவிட்டுக்கு "Cricket for Good"என்ற விருது வழங்கப்பட்டது.
இந்த மதிப்புமிக்க விருதை பெற்ற ராகுல் டிராவிட்டை மேலும் கவுரவிக்கும் விதத்தில், வெள்ளை நிற டஸ்ட்டர் காம்பெக்ட் எஸ்யூவியை ரெனோ கார் நிறுவனம் பரிசாக வழங்கி கவுரவித்துள்ளது. ரெனோ டஸ்ட்டரில் இருக்கும் சிறப்பம்சங்களின் தொகுப்பை ஸ்லைடரில் காணலாம்.

வடிவமைப்பு
தடித்த குரோம் பட்டைகளுடன் கூடிய முகப்பு கிரில், பெரிய வீல் ஆர்ச்சுகள் ரெனோ டஸ்ட்டரை ஒரு கம்பீரமான எஸ்யூவியாக காட்டுகிறது. ரூஃப் ரெயில்கள் கூடுதல் அழகு சேர்க்கின்றன.

மோனோகாக் சேஸிஸ்
டஸ்ட்டர் மோனோகாக் சேஸிஸில் வடிவமைக்கப்படுவதால் அதிக உறுதி, சிறந்த கையாளுமை, கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

ஹெட்லைட்
முகப்பு கிரில்லுடன் இணையாக ஒரே நேர்க்கோட்டில் ஒத்துப் போகும் வகையில் சிறப்பான வடிவமைப்புடன் ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது.

பனி விளக்குகள்
பனி விளக்குகள் அழகு சேர்ப்பதுடன் பனிக் காலங்களில் பாதுகாப்பான பயணத்துக்கு உதவும்.

உள்ளலங்காரம்
3 விதமான உள்ளலங்காரத்துடன் டஸ்ட்டர் கிடைக்கிறது. ஆர்எக்ஸ்இசட் வேரியண்ட்டில் லெதர் அப்ஹோல்ஸ்டரியுடன் கிடைக்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்
இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டிரிப் மீட்டர், எரிபொருள் மானி, ஸ்பீடோ மீட்டர் ஆகியவற்றுடன் சராசரி வேகம், எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை பெறும் வசதியை கொண்டிருக்கிறது.

கன்ட்ரோல் சுவிட்சுகள்
ஸ்டீயரிங் வீலுக்கு கீழே ஆடியோ கன்ட்ரோல் மற்றும் போன் கன்ட்ரோல் சுவிட்சுகள் பொருத்தப்பட்டுள்ளன. டிரைவிங்கின்போது இது உதவிகரமாக இருக்கும்.

சென்ட்ரல் கன்சோல்
சென்ட்ரல் கன்சோலில் 2 டின் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. சிடி, எம்பி3 பிளேயருடன் ஏஎம், எஃப்எம் அலைவரிசை ரேடியோ கேட்கும் வசதி மற்றும் யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ் இன் போர்ட் ஆகிய வசதிகள் உண்டு. 4 ஸ்பீக்கர்களும் இணைக்கப்பட்டுள்ளன. தவிர, புளூடூத் மூலம் மொபைல்போனை இணைத்து பாடல்களை கேட்கும் வசதியும் இருக்கிறது.

ரீடிங் லேம்ப்
ரீடிங் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ரீடிங் லேம்ப்பை தங்களது வசதிக்கேற்ப பயணிகள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

டில்ட் ஸ்டீயரிங்
டிரைவர் தனது உயரம், வசதிக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ள டில்ட் ஸ்டீயரிங் வசதி உள்ளது.

ரியர் வியூ மிரர்
எலக்ட்ரிக்கல் கன்ட்ரோல் ரியர் வியூ மிரர் பொருத்தப்பட்டிருப்பது டிரைவருக்கு கூடுதல் வசதியை தரும்.

எஞ்சின்
104 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட 2 மாடல்களில் டஸ்ட்டர் வந்துள்ளது. 84 பிஎச்பி மற்றும் 108 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் இரண்டு டீசல் மாடல்களில் கிடைக்கிறது.

லெதர் இருக்கைகள்
ஹெட்ரெஸ்ட்டுடன் கூடிய லெதர் இருக்கைகள் உண்டு.

டிரைவர் இருக்கை
8 வே அட்ஜெஸ்ட்மென்ட் கொண்ட டிரைவர் இருக்கை மிகுந்த சொகுசையும், சவுகரியத்தையும் தரும்.

சார்ஜிங் பாயிண்ட்
மொபைல்போன், லேப்டாப், வீடியோ கேம் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கான 12 வோல்ட் சார்ஜிங் பாயின்ட் இருக்கிறது.

பார்க்கிங் சென்சார்
பார்க்கிங் சென்சார் பொருத்தப்பட்டிருப்பதால் ரிவர்ஸ் எடுக்கும்போதும், பார்க்கிங் செய்யும்போது அருகிலுள்ள பொருட்கள் குறித்து எச்சரிக்கை செய்யும் வசதி இருக்கிறது.

பாதுகாப்பு வசதிகள்
பிரேக் அசிஸ்ட், இபிடி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டிருப்பதால் மிகுந்த பாதுகாப்பான பயணத்தை வழங்கும். அவசரத்தில் பிரேக் பிடிக்கும்போது கூட கார் கவிழாது. மேலும், இரட்டை காற்றுப் பைகள் கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

பூட் ரூம்
475 லிட்டர் பூட் ரூமை கொண்டிருப்பதால் அதிக பொருட்களை வைக்க முடியும். நீண்ட தூர பயணங்களுக்கு சிறந்த காராக இருக்கும். மேலும், இரண்டாவது வரிசை இருக்கைகள் மடக்கும் வசதியை கொண்டிருப்பதால் 1064 லிட்டர் வரை பூட் ரூமை அதிகரித்துக் கொள்ள முடியும்.

மைலேஜ்
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 13.24 கிமீ மைலேஜையும், 85 பிஎஸ் பவர் டீசல் மாடல் லிட்டருக்கு 20.45 கிமீ மைலைஜையும் தரும் என்கிறது ரெனோ.

கிரவுன்ட் கிளியரன்ஸ்
205 மிமீ கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்டிருப்பதால் டஸ்ட்டரை ஓட்டும்போது வேகத்தடைகள், திடீர் பள்ளங்களை கண்டவுடன் பதற வேண்டாம்.

போட்டியாளர்களுடன் ஒப்பீடு
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் Vs நிசான் டெரானோ Vs ரெனோ டஸ்ட்டர்: ஒப்பீட்டு பார்வை செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








