ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் Vs நிசான் டெரானோ Vs ரெனோ டஸ்ட்டர்: ஒப்பீட்டு பார்வை

காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட் போர்க்களமாக மாறி வருகிறது. ரெனோ டஸ்ட்டருக்கு கிடைத்த அமோக வரவேற்பு அனைத்து கார் நிறுவனங்களையும் திரும்பி பார்க்க வைத்தது. சமீபத்தில் ஈக்கோஸ்போர்ட் வந்தவுடன் இந்த மார்க்கெட்டில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை கண்டு வியந்த பல முன்னணி நிறுவனங்களும் விரைவில் தங்களது தயாரிப்புகளை களமிறக்க உள்ளன.

இந்த நிலையில், காம்பெக்ட் எஸ்யூவி பட்டியலில் இருக்கும் ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் முன்பதிவு துவங்கப்பட்டுவிட்ட நிசான் டெரானோ ஆகிய எஸ்யூவிகளில் இருக்கும் சாதக, பாதகங்களை இந்த செய்தித் தொகுப்பில் ஒப்பிட்டு பார்க்கலாம்.

டஸ்ட்டர் தோற்றம்

டஸ்ட்டர் தோற்றம்

4.31 மீட்டர் நீளம் கொண்ட டஸ்ட்டரின் முகப்பு வாடிக்கையாளர்களை கவரும் அம்சம். அதேவேளை, போட்டியாளர்களை ஒப்பிடும்போது பின்புறம் கவர்ச்சியாக இல்லை.

 நிசான் டெரானோ

நிசான் டெரானோ

டஸ்ட்டரைவிடடெரானோவின் முகப்பு படு கம்பீரமாக தெரிகிறது. நீளத்திலும் சற்று கூடியிருக்கிறது. பின்புறத்திலும் டெயில் லைட்டுகள் மாற்றப்பட்டுள்ளதால் சிறப்பாக இருக்கிறது. பக்கவாட்டில் பில்லர்கள் கருப்பு வண்ணம் தீட்டப்பட்டுள்ளது கூடுதல் கவர்ச்சியை அளிக்கிறது.

ஈக்கோஸ்போர்ட் தோற்றம்

ஈக்கோஸ்போர்ட் தோற்றம்

மூன்று கார்களுமே தோற்றத்தில் குறை சொல்ல முடியாவிட்டாலும், ஈக்கோஸ்போர்ட் ஒட்டுமொத்த ஸ்டைலில் மார்க்கை தட்டிச் செல்கிறது. போட்டியின்றி இருந்தவரை டஸ்ட்டர் சிறந்ததாக தெரிந்தது. மூன்றுமே அழகுதான் ஆனால், சாமுத்ரிகா லட்சணம் என்று பார்க்கும்போது ஈக்கோஸ்போர்ட்தான் சிறப்பாக இருக்கிறது.

 டஸ்ட்டர் எஞ்சின்

டஸ்ட்டர் எஞ்சின்

டஸ்ட்டரில் 104 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் இரண்டு விதமான ட்யூனிங்கில் கிடைக்கிறது. ஒன்று 85 பிஎஸ் பவர் கொண்டதாகவும், மற்றொன்று 110 பிஎஸ் பவர் கொண்டதாகவும் கிடைக்கிறது. இதில், டீசல் எஞ்சின் மிகச்சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் மற்றும் மைலேஜை வழங்குகிறது.

டெரானோ எஞ்சின்

டெரானோ எஞ்சின்

டஸ்ட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின்கள்தான் டெரானோவிலும் செயல்புரிகிறது. எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன்களில் மாற்றங்கள் இல்லை. இதிலும், டீசல் மாடல் முக்கியமாக பேசப்படும்.

ஈக்கோஸ்போர்ட் எஞ்சின்

ஈக்கோஸ்போர்ட் எஞ்சின்

ஈக்கோஸ்போர்ட் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பல முக்கிய அம்சங்களை கொண்டிருக்கிறது. அதில், ஒன்று எஞ்சின் ஆப்ஷன். மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் வரும் ஈக்கோஸ்போரட்டின் 125 பிஎஸ் பவர் கொண்ட 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த எஞ்சின் குறைந்த கார்பன் புகை, அதிக மைலேஜ், அதிக பவர் கொண்டதாக இருக்கிறது. இதுதவிர, 112 பிஎஸ் பவர் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 91 பிஎஸ் பவர் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்களில் கிடைக்கிறது.

டஸ்ட்டர் பூட் ரூம்

டஸ்ட்டர் பூட் ரூம்

டஸ்ட்டரின் மிகப்பெரிய பலம் பொருட்கள் வைப்பதற்கான இடவசதி. 475 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இருக்கிறது. பின்புற கதவுகள் ஹேட்ச்பேக் கார் போன்று மேல் நோக்கி திறக்கும்.

டெரானோ பூட் ரூம்

டெரானோ பூட் ரூம்

டெரானோவிலும் 475 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம்தான் இருக்கிறது.

ஈக்கோஸ்போர்ட் பூட் ரூம்

ஈக்கோஸ்போர்ட் பூட் ரூம்

4 மீட்டர் எஸ்யூவி என்பதால் டஸ்ட்டர், டெரானோ அளவுக்கு பொருட்கள் வைக்கும் இடவசதி இல்லை. இந்த எஸ்யூவியில் 346 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் கொடுக்கப்பட்டுள்ளது. பின் இருக்கையை மடக்கிக் கொண்டால் 705 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக மாற்றிக் கொள்ளலாம். பின்புற கதவு பக்கவாட்டில் திறக்கும்.

ஓட்டுதல் சுகம்

ஓட்டுதல் சுகம்

டஸ்ட்டர், டெரானோவைவிட ஓட்டுனருக்கு அதிக சுகத்தை வழங்குகிறது ஈக்கோஸ்போர்ட். கட்டுப்பாட்டு சுவிட்சுகளையும், மியூசிக் சிஸ்டத்தையும் எளிதாக இயக்கும் வகையில் ஈக்கோஸ்போர்ட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

 கையாளுமை

கையாளுமை

நெடுஞ்சாலையில் குரூஸ் செய்கையில் கையாளுமையில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டைவிட ரெனோ டஸ்ட்டர் சிறப்பாக தெரிகிறது. ஏனெனில், ஈக்கோஸ்போர்ட்டின் சஸ்பென்ஷனை ஃபோர்டு அவ்வாறு ட்யூனிங் செய்துள்ளது. டஸ்ட்டர் போன்றே டெரானோவும் சிறந்த சஸ்பென்ஷன் அமைப்புடன் கையாளுமையில் நன்றாக இருக்கிறது. ஆனால், ஈக்கோஸ்போர்ட்டைவிட டஸ்ட்டர் மற்றும் டெரானோ கேபினில் அதிர்வுகள் அதிகம் தெரிகிறது.

 டஸ்ட்டர் இடவசதி

டஸ்ட்டர் இடவசதி

டஸ்ட்டரின் பின் இருக்கையில் 3 பேர் மிக சவுகரியமாக அமர்ந்து செல்லலாம். ஏறி இறங்குவதற்கும் எளிதாக கதவு அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 டெரானோ இடவசதி

டெரானோ இடவசதி

டஸ்ட்டர் ரீபேட்ஜ் மாடல் என்பதால் டெரானோவிலும் இடவசதிக்கு குறைவில்லை. 5 பேருக்கான எஸ்யூவியாக கூறலாம்.

ஈக்கோஸ்போர்ட் இடவசதி

ஈக்கோஸ்போர்ட் இடவசதி

ஈக்கோஸ்போர்ட் பல விதங்களிலும் முன்னிலை வகித்தாலும், பின் இருக்கையில் 2 பேர் மட்டுமே சவுகரியமாக அமர்ந்து செல்ல முடியும். மூன்றாவது நபர் அமர்ந்தால் நெருக்கடியாக இருக்கிறது. இது ஒரு 4 சீட்டர் காராகவே பார்க்க முடியும்.

டஸ்ட்டர் மைலேஜ்

டஸ்ட்டர் மைலேஜ்

பெட்ரோல் மாடல் 11 கிமீ மைலேஜையும், 85 பிஎஸ் டீசல் மாடல் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜையும், 110 பிஎஸ் டீசல் மாடல் லிட்டருக்கு 16 கிமீ மைலேஜையும் தருகிறது.

 டெரானோ மைலேஜ்

டெரானோ மைலேஜ்

டஸ்ட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின்கள்தான் டெரானோவிலும் செயல்புரிகின்றன என்பதால் டெரானோவிலும் டஸ்ட்டரின் மைலேஜை எதிர்பார்க்கலாம்.

ஈக்கோஸ்போரட் மைலேஜ்

ஈக்கோஸ்போரட் மைலேஜ்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 12 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 19.2 கிமீ மைலேஜையும் தரும். ஈக்கோபூஸ்ட் எஞ்சின் லிட்டருக்கு 14.8 கிமீ மைலேஜ் தரும். மொத்தத்தில் டஸ்ட்டர், டெரானோவைவிட ஈக்கோஸ்போர்ட் மைலேஜில் விஞ்சி நிற்கிறது.

 டஸ்ட்டர் இன்டிரியர்

டஸ்ட்டர் இன்டிரியர்

வெளியில் தெரியும் பிரம்மாண்டம் டஸ்ட்டரின் உள்ளே இல்லை. மேலும், பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களின் தரமும் எதிர்பார்த்த அளவு இருக்காது. பேஸிக் டிசைன் கொண்ட சென்ட்ரல் கன்சோல், ஸ்டீயரிங் ஆகியவை போரடிக்கும். ஆனால், கைப்பிடிகளில் மரவேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டெரானோ இன்டிரியர்

டெரானோ இன்டிரியர்

டஸ்ட்டரின் இன்டிரியரில் இருக்கும் குறைகளை சற்று களைந்துள்ளது நிசான். மரவேலைப்பாடுகள், குரோம் பினிஷிங் கொண்ட சென்ட்ரல் கன்சோல், செவ்வக வடிவ நடு ஏசி வென்ட்டுகள், கவர்ச்சியான அமைப்புடன் ஸ்டீயரிங் வீல் ஆகியவை டெரானோவுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

ஈக்கோஸ்போர்ட் இன்டிரியர்

ஈக்கோஸ்போர்ட் இன்டிரியர்

டஸ்ட்டரையும், டெரானோவையும் பார்த்துவிட்டு ஈக்கோஸ்போர்ட்டுக்குள் நுழைந்தால் மிக மிக கவர்ச்சியாக டிசைன் செய்யப்பட்டுள்ளது இன்டிரியர். வாடிக்கையாளர்கள் பல மாதங்கள் காத்துக் கிடந்து வாங்குவதற்கு ஈக்கோஸ்போர்ட் இன்டிரியரும் ஒரு காரணமாக கூறலாம். சென்ட்ரல் கன்சோல், இருக்கைகள், அப்ஹோல்ஸ்டரி, ஸ்டீயரிங் வீல் என அனைத்துமே மிக கவர்ச்சியான வேலைப்பாடுகளை கொண்டிருக்கிறது.

டஸ்ட்டர் அம்சங்கள்

டஸ்ட்டர் அம்சங்கள்

டஸ்ட்டரில் பேஸி மியூசிக் சிஸ்டம், மேனுவல் ஏசி கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் வீலுக்கு கீழே கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

டெரானோ அம்சங்கள்

டெரானோ அம்சங்கள்

டஸ்ட்டரில் இருக்கும் பேஸி மியூசிக் சிஸ்டத்துக்கு பதிலாக புதிய ஆடியோ இன்டர்பேஸ் மியூசிக் சிஸ்டம், ஃபாக்ஸ்வுட் மரவேலைப்பாடுகள் கொண்டதாக இருக்கிறது. டஸ்ட்டரில் இருக்கும் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் கூட டெரானோவில் இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

 ஈக்கோஸ்போர்ட் அம்சங்கள்

ஈக்கோஸ்போர்ட் அம்சங்கள்

டேஷ்போர்டில் 3.5 இஞ்ச் திரை கொடுக்கப்பட்டுள்ளது. அதில், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம், சராசரி மைலேஜ், சராசரி வேகம், வெளிப்புற வெப்பநிலை உள்ளிட்ட தகவல்களை பெறலாம். மேலும், டாப் வேரியண்ட்டுகளில் ஸ்டார்ட் ஸ்டார்ப் வசதி உண்டு. ஈக்கோஸ்போர்ட்டில் ஸ்டோரேஜ் வசதிகளும் அதிகம். மேலும், விபத்து மற்றும் அவசர சமயங்களில் 108 ஆம்புலன்ஸுக்கு தானியங்கி முறையில் தகவல் அனுப்பும் வசதியும் உண்டு.

டஸ்ட்டர் விலை

டஸ்ட்டர் விலை

பேஸ் பெட்ரோல் மாடல் ரூ. 7.99 லட்சம் விலையிலும், பேஸ் டீசல் மாடல் ரூ.8.73 லட்சத்திலும் விற்கப்படுகிறது. டாப் வேரியண்ட் ரூ.12.18 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

டெரானோ விலை

டெரானோ விலை

டஸ்ட்டரைவிட ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை கூடுதலான விலையில் இந்த புதிய டெரானோ எஸ்யூவி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈக்கோஸ்போர்ட் விலை

ஈக்கோஸ்போர்ட் விலை

பேஸ் பெட்ரோல் மாடல் ரூ.5.82 லட்சம் விலையிலும், பேஸ் டீசல் மாடல் ரூ.7.01 லட்சம் விலையில் கிடைக்கிறது. வசதிகள் நிரம்ப பெற்ற 1.0 லிட்டர் ஈக்கோஸ்பூஸ்ட் எஞ்சின் கொண்ட மாடல் ரூ.8.28 லட்சத்தில் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

விலை, வசதிகள், தோற்றம் என பெரும்பான்மையான அம்சங்களில் டஸ்ட்டர், டெரானோவைவிட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்தான் பெஸ்ட். அனைத்து வசதிகளும் கொண்ட ஈக்கோஸ்போர்ட் டாப் வேரியண்ட்டுக்கும், டஸ்ட்டர் டாப் வேரியண்ட்டுக்கும் ரூ.3 லட்சம் வரை விலை வித்தியாசம் இருக்கிறது. மேலும், டஸ்ட்டரைவிட டெரானோ இன்னும் விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். எனவே, சில மாதங்கள் வரை காத்துக் கிடந்தாலும் பரவாயில்லை. ஓர் சிறந்த கார் வேண்டும் என்பவர்களுக்கு ஈக்கோஸ்போர்ட் பெஸ்ட் சாய்ஸ்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 8, 2013, 13:47 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+