கிறிஸ் லின் சிக்சருக்கு விளாசிய பந்து எதை தாக்கியது தெரியுமா? சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், கேகேஆர் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் லின் சிக்சர் விளாசிய வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கிறிஸ் லின் சிக்சருக்கு விளாசிய பந்து எதை தாக்கியது தெரியுமா? சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ

இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் தற்போது ஐபிஎல் ஜூரம் தொற்றி கொண்டுள்ளது. ரசிகர்களின் பெரும் ஆரவாரங்களுக்கு மத்தியில் கோலாகலமாக தொடங்கிய நடப்பு 2019ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர், நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் இதனை திருவிழா போல் கொண்டாடி கொண்டிருக்கின்றனர்.

கிறிஸ் லின் சிக்சருக்கு விளாசிய பந்து எதை தாக்கியது தெரியுமா? சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ

இந்த சூழலில் நடப்பு சீசனின் 21வது லீக் போட்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், உள்ளூர் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர் ஸ்ரேயாஸ் கோபால் வீசிய பந்தை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் லின் சிக்சருக்கு விளாசினார்.

கிறிஸ் லின் சிக்சருக்கு விளாசிய பந்து எதை தாக்கியது தெரியுமா? சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ

நேராக பறந்து சென்ற பந்து, பவுண்டரி எல்லை அருகே காட்சிக்கு நிறுத்தப்பட்டிருந்த டாடா ஹாரியர் (Tata Harrier) காரின் முன் பக்க கண்ணாடியை (Windscreen) பலமாக தாக்கியது. ஆனால் ஹாரியர் காரின் கண்ணாடிக்கு எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை. கிரண்குமார் மாசூர் என்பவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

சரி, டாடா ஹாரியர் கார் மைதானத்தில் எதற்காக நிறுத்தப்பட்டுள்ளது? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் அதிகாரப்பூர்வ பார்ட்னராக டாடா மோட்டார்ஸ் இருந்து வருகிறது. எனவே டாடா நிறுவனம் தனது ஹாரியர் காரை காட்சிப்படுத்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவை ஒரு பிளாட்பார்ம் ஆக பயன்படுத்தி வருகிறது.

கிறிஸ் லின் சிக்சருக்கு விளாசிய பந்து எதை தாக்கியது தெரியுமா? சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ

கடந்த முறை நெக்ஸான் சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக காரை டாடா காட்சிக்கு வைத்திருந்தது. அதே பாணியை தற்போது ஹாரியருடன் தொடர்கிறது. டாடா ஹாரியர் எஸ்யூவி ரக கார் ஆகும். தற்போது டாடா லைன் அப்பில் உள்ள மிக பிரபலமான மாடலாக திகழ்ந்து வரும் ஹாரியர், கடந்த ஜனவரி மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கிறிஸ் லின் சிக்சருக்கு விளாசிய பந்து எதை தாக்கியது தெரியுமா? சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ

விற்பனைக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹாரியர் குறித்த பெரும் எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருந்தது. எனவே மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே 'ஹிட்' அடித்து அசத்தியுள்ளது ஹாரியர். டாடா ஹாரியர் காரின் விற்பனை நிலவரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

கிறிஸ் லின் சிக்சருக்கு விளாசிய பந்து எதை தாக்கியது தெரியுமா? சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ

முன்னதாக கடந்த ஐபிஎல் சீசனில் டாடா நிறுவனம் நெக்ஸான் காரை காட்சிப்படுத்தியிருந்தது. குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற முதல் கார் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக டாடா நெக்ஸான் காரின் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. டாடா நெக்ஸான் காரின் விற்பனை நிலவரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

கிறிஸ் லின் சிக்சருக்கு விளாசிய பந்து எதை தாக்கியது தெரியுமா? சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ

நெக்ஸான் கொடுத்த நம்பிக்கையின் காரணமாக, தனது அனைத்து மாடல்களின் கட்டுமான தரத்தையும் (Build Quality) மேம்படுத்தும் பணிகளில் டாடா நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது. இதுதவிர ஹாரியர் காரின் 7 சீட்டர் வெர்ஷனை களமிறக்கும் பணிகளையும் டாடா நிறுவனம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக டாடா ஹாரியரின் 7 சீட்டர் வெர்ஷன் நடப்பாண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Article Published On: Tuesday, April 9, 2019, 12:42 [IST]
English summary
Tata Harrier SUV Windshield Hit By Ball During IPL Match: Video. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+