மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் கார்களை வீழ்த்தி கெத்து காட்டும் டாடா ஹாரியர்!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய கார்களை வீழ்த்தி டாடா ஹாரியர் கெத்து காட்டுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் கார்களை வீழ்த்தி கெத்து காட்டும் டாடா ஹாரியர்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த டாடா ஹாரியர் (Tata Harrier) எஸ்யூவி ரக கார், கடந்த ஜனவரி மாத கடைசியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் வழங்கி வரும் அமோக வரவேற்பின் காரணமாக அதன்பின் ஒவ்வொரு மாதமும் டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் விற்பனை சீராக அதிகரித்து கொண்டே வருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் கார்களை வீழ்த்தி கெத்து காட்டும் டாடா ஹாரியர்!

இதன்படி கடந்த ஜனவரி மாதம் 422 ஹாரியர் எஸ்யூவி கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கையானது கடந்த பிப்ரவரி மாதம் 1,449ஆக அதிகரித்தது. இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் விற்பனையான டாடா ஹாரியர் கார்களின் எண்ணிக்கை தற்போது தெரியவந்துள்ளது. இதன்படி கடந்த மார்ச் மாதத்தில் 2,492 ஹாரியர் கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் கார்களை வீழ்த்தி கெத்து காட்டும் டாடா ஹாரியர்!

இதன்மூலம் டாடா ஹாரியர் தனது அதிகபட்ச மாதாந்திர விற்பனையை பதிவு செய்துள்ளது. அத்துடன் விற்பனை அடிப்படையில் தனது போட்டியாளர்களான மஹிந்திரா எக்ஸ்யூவி500 (Mahindra XUV500) மற்றும் ஜீப் காம்பஸ் (Jeep Compass) ஆகிய கார்களையும் வீழ்த்தி கெத்து காட்டியுள்ளது டாடா ஹாரியர். கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார்களின் எண்ணிக்கை 1,916 மட்டுமே. அதே சமயம் 1,441 ஜீப் காம்பஸ் கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. ஆனால் டாடா நிறுவனம் 2,492 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதுகுறித்து Auto Punditz தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் கார்களை வீழ்த்தி கெத்து காட்டும் டாடா ஹாரியர்!

5 சீட்டர் எஸ்யூவி காரான டாடா ஹாரியரில் ஆரம்பத்தில் தரம் தொடர்பான சில பிரச்னைகள் இருந்து வந்தன. ஆனால் தற்போது அந்த குறைகள் அனைத்தும் களையப்பட்டுள்ளது. அத்துடன் உற்பத்தியும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. டாடா ஹாரியர் 5 சீட்டர் எஸ்யூவி ரக கார் ஆகும். OMEGA ARC பிளாட்பார்ம் அடிப்படையில் டாடா ஹாரியர் எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது. டிஸ்கவரி ஸ்போர்ட் (Discovery Sport), எவோக் போன்ற (Evoque) லேண்ட் ரோவர் கார்களும் இந்த பிளாட்பார்மை தழுவிதான் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் கார்களை வீழ்த்தி கெத்து காட்டும் டாடா ஹாரியர்!

டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் இன்டீரியரில் ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் சில வசதிகள் இந்த செக்மெண்ட்டில் முதல் முறையாக டாடா ஹாரியரில்தான் இடம்பெற்றுள்ளது. எனவேதான் டாடா ஹாரியரால் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க முடிகிறது. டாடா ஹாரியர் கார் வாடிக்கையாளர்களை கவர மற்றொரு முக்கியமான காரணம், அதில் இடம்பெற்றிருக்கும் பாதுகாப்பு வசதிகள்தான்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் கார்களை வீழ்த்தி கெத்து காட்டும் டாடா ஹாரியர்!

ஏனெனில் டாடா ஹாரியர் எஸ்யூவி காரில், ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ், இபிடி, 6 ஏர் பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. இது தவிர ட்ராக்ஸன் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், ஹில் டிசெண்ட் கண்ட்ரோல் மற்றும் ஹைட்ராலிக் பிரேக் அஸிஸ்ட் உள்ளிட்ட வசதிகளும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் கார்களை வீழ்த்தி கெத்து காட்டும் டாடா ஹாரியர்!

டாடா ஹாரியர் எஸ்யூவி காரில், 2.0 லிட்டர் Kryotec டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதில், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த சூழலில் டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் ஆட்டோமெட்டிக் மற்றும் பெட்ரோல் வேரியண்ட்கள் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்ற ஆர்வம் வாடிக்கையாளர்களிடம் மேலோங்கியுள்ளது. இது தொடர்பாக டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 4, 2019, 11:35 [IST]
English summary
March 2019 Sales Report: Tata Harrier Beats Mahindra XUV500, Jeep Compass. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+