கட்டுமான தரத்தால் பயணிகளை காத்த டொயோட்டா ஃபார்ச்சூனர்!

டேராடூன் நகரில் நடந்த பயங்கர விபத்தில் பஸ், டிரக்கிற்கு இடையில் சிக்கி டொயோட்டா ஃபார்ச்சூனர் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

By Saravana Rajan

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் பழைய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி ஒன்று மிக பயங்கரமான விபத்தில் சிக்கியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பிய அதிசயம் நடந்துள்ளது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

டொயோட்டா ஃபார்ச்சூனரின் சிறந்த கட்டுமானத்தால் 4 பேர் உயிர் தப்பிய அதிசயம்!

டேராடூன் நகரில் அரசு பஸ் ஒன்றை பின்தொடர்ந்து டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி சென்றுள்ளது. அப்போது, திடீரென அரசு பஸ் ஓட்டுனர் பிரேக் போட்டுள்ளார்.

பின்தொடர்ந்து சென்ற டொயோட்டா ஃபார்ச்சூனர் ஓட்டுனர் காரை நிறுத்த சடன் பிரேக் போட்டுள்ளார். ஆனால், டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு பின்னால் வந்த டிரக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து டொயோட்டா ஃபார்ச்சூனர் மீது மோதியது.

டொயோட்டா ஃபார்ச்சூனரின் சிறந்த கட்டுமானத்தால் 4 பேர் உயிர் தப்பிய அதிசயம்!

இதில், பஸ்சிற்கும், டிரக்கிற்கும் இடையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் சிக்கி சின்னாபின்னமானது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 4 பயணிகள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய அதிசயமும் நிகழ்ந்தது.

டொயோட்டா ஃபார்ச்சூனரின் சிறந்த கட்டுமானத்தால் 4 பேர் உயிர் தப்பிய அதிசயம்!

கவச வாகனம் போன்ற கட்டமைப்புடன் பயணிகளை காத்துள்ளது டொயோட்டா ஃபார்ச்சூனர். இந்த எஸ்யூவி லேடர் ஆன் சேஸீ ஃப்ரேமில் கட்டமைக்கப்படுவதும் இந்த மோதலை லாவகமாக தாங்கி பயணிகளை காத்துள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனரின் சிறந்த கட்டுமானத்தால் 4 பேர் உயிர் தப்பிய அதிசயம்!

படங்களை பார்க்கும்போது மிக மோசமாக டொயோட்டா ஃபார்ச்சூனர் சேதமடைந்து உருக்குலைந்து போய்விட்டது. மீண்டும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாகவும் இல்லை.

டொயோட்டா ஃபார்ச்சூனரின் சிறந்த கட்டுமானத்தால் 4 பேர் உயிர் தப்பிய அதிசயம்!

ஆனால், பயணிகள் தப்பியது அதிசயம்தான். இதுபோன்ற விபத்துக்களை தவிர்ப்பதற்கு கார் ஓட்டுனர்கள் முன் யோசனையுடன் ஓட்டுவது அவசியம்.

டொயோட்டா ஃபார்ச்சூனரின் சிறந்த கட்டுமானத்தால் 4 பேர் உயிர் தப்பிய அதிசயம்!

கனரக வாகனங்களுக்கு இடையில் செல்வதை தவிர்ப்பதுடன், சரியான இடைவெளியில் செல்வதும் பயன் தரும். கனரக வாகனங்கள் திடீர் பிரேக் பிடிக்கும்போது, அவற்றின் கட்டுப்பாடு கார் போன்று இருக்காது.

டொயோட்டா ஃபார்ச்சூனரின் சிறந்த கட்டுமானத்தால் 4 பேர் உயிர் தப்பிய அதிசயம்!

அதேபோன்று, கனரக வாகனங்களை விரைவாக முந்துவதற்கு முற்பட வேண்டும். பக்கவாட்டில் தொடர்ந்து செல்வதும் ஆபத்தை விளைவிக்கும். முடிந்தவரை இரண்டு கனரக வாகனங்களுக்கு இடையில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

Via- Rushlane

More from DriveSpark

Article Published On: Tuesday, October 17, 2017, 12:16 [IST]
English summary
Toyota Fortuner Accident in Dehradun.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+