விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

கார் வாங்கும்போது ஏர்பேக் இருக்கிறதா, ஏபிஎஸ் பிரேக் இருக்கிறதா என்று பாதுகாப்பு அம்சங்களை பார்த்து பார்த்து பலர் வாங்குகின்றனர். இவையெல்லாம் மிக முக்கிய பாதுகாப்பு விஷயங்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், விபத்தை தவிர்ப்பதற்கு அடிப்படையான ஆயுதம் என்ன தெரியுமா? வேறொன்றுமில்லை. காரின் வண்ணம்தான் அது. விபத்துக்கும், காரின் வண்ணத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்பது நியாயம்தான். ஆனால், நிச்சயம் ஒரு முக்கிய தொடர்பு இருக்கிறது.

 விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

ஆம், வெளிர் நிற கார்களைவிட அடர் வண்ண கார்கள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகமிருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம், தூரத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு அடர் வண்ண கார்கள் எளிதில் புலப்படாததுதான் காரணம்.

 விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

குறிப்பாக, இரவு நேரங்களில் ஹெட்லைட் ஒளியில் அடர் வண்ண கார்களைவிட வெள்ளை வண்ணக் கார்கள் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியும். இரவு நேரங்களில் கருப்பு, நீலம், சாம்பல் வண்ண கார்கள் பிற வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரிவதில்லை என்பது பல ஆய்வுகள் மூலமாக நிரூபணமாகியிருக்கிறது.

 விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

இன்ஸ்யூரன்ஸ் இழப்பீடு தொடர்பான ஆய்வுகளில் வெள்ளை, மஞ்சள் போன்ற வெளிர் நிற கார்களைவிட கருப்பு, நீலம், சாம்பல் உள்ளிட்ட வண்ணக் கார்கள் அதிகம் சிக்கியிருப்பதாக தெரிவிக்கின்றன.

 விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியா மாகாணத்தின் கார் விபத்து புள்ளிவிபரங்களை எடுத்து அந்நாட்டை சேர்ந்த மோனாஷ் பல்கலைகழகத்தின் விபத்து ஆராய்ச்சி மையம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அப்போது, வெள்ளை நிற கார்களுடன், இதர வண்ணங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்தது.

 விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

அப்போது, கருப்பு, நீலம், சாம்பல், பச்சை, சிவப்பு மற்றும் சில்வர் ஆகிய வண்ண கார்கள் வெள்ளை வண்ணக் கார்களைவிட அதிகம் விபத்தில் சிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பது தெரிய வந்தது.

 விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

அதாவது, சிறந்தது வெள்ளை நிறம் மட்டுமே என்ற கருத்தை தெரிவித்தனர். வெள்ளையுடன் ஒப்பிடும்போது சில்வர் வண்ணக் கார்கள் 50 சதவீதம் அளவுக்கு விபத்தில் சிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பதாக மற்றொரு பொது கூற்றையும் உடைத்துள்ளனர்.

 விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

இரவு நேரங்களில் சாலை ஓரத்தில் வெள்ளை நிற கார்களை நிறுத்தியிருந்தாலும், பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு தூரத்திலிருந்தே கார் நிற்பது புலனாகும். வெள்ளை நிற கார்களில் மற்றொரு பயனும் இருக்கிறது. சென்னை போன்ற படு ஹாட்டான தட்பவெப்ப நிலை கொண்ட ஊர்களுக்கு வெள்ளை வண்ணக் கார்கள் சிறந்தது.

 விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

ஏனெனில், சூரிய ஒளியை வெள்ளை வண்ணம் பிரதிபலிக்கும் வாய்ப்பு இருப்பதால், ஏசியிலிருந்து வரும் குளிர்ச்சி சிறப்பாக இருக்கும். காருக்கள் அதிக வெப்பம் கடத்தப்படாது. ஏன் இரவு நேரங்களில் தெருவில் நிறுத்தியிருந்தால்கூட, நள்ளிரவில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியும்.

 விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

வெள்ளை நிற கார்களை பலர் தவிர்ப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? அதனை பராமரிப்பது சற்று சிரமம் என்பதாகத்தான் இருக்கும். மேலும், சாம்பல் வண்ண கார்கள் சற்று பிரிமியமாக தோற்றமளிப்பதும் வாடிக்கையாளர்களை தேர்வு செய்ய தூண்டுகிறது.

 விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

ஆனால், இதில் இருக்கும் அடிப்படை பாதுகாப்பு விஷயத்தை புரிந்து கொண்டால் பிரச்னை இருக்காது. பயணங்களும் மகிழ்ச்சியாக அமையும். பாதுகாப்பு கருதி மாருதி உள்ளிட்ட சில நிறுவனங்கள் கருப்பு வண்ணக் கார்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Dark coloured cars are more likely to be involved in a crash, according to definitive new research linking road safety and vehicle colour. Read the complete details in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X