அம்பாஸிடரின் வாரிசு! வெறும் ஆறு லட்சத்துக்கு 34 கிமீ மைலேஜ் தரும் கார்! இந்தியாவை மிரள விடும் முன்னணி நிறுவனம்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire). மாருதி சுஸுகி டிசையர் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 18 வருடங்கள் கடந்துள்ளன. இது கடந்த 2008ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் ஆகும்.

ஆனால் அதற்குள்ளாகவே மிகவும் பிரம்மாண்டமான விற்பனை மைல்கல் (Sales Milestone) ஒன்றை மாருதி சுஸுகி டிசையர் கார் கடந்துள்ளது. 3 மில்லியன் யூனிட்கள் (30 லட்சம்) விற்பனை என்பதுதான் அந்த மைல்கல் ஆகும். வெறும் 18 வருடங்களில், 30 லட்சம் கார்கள் விற்பனை என்பது சாதாரணமான விஷயம் அல்ல.

Maruti Suzuki Dzire Side Design

அதுவும் சமீப காலமாகவே செடான் ரக கார்களின் (Sedan Cars) விற்பனை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் அந்த செடான் ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி டிசையர் கார் மட்டும் விற்பனையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் கடந்த 2025ம் ஆண்டில் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட காரே மாருதி சுஸுகி டிசையர்தான்.

கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக 2,14,488 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. மாருதி சுஸுகி டிசையர் தவிர, செடான் ரகத்தை சேர்ந்த வேறு எந்தவொரு காரும் இந்த அளவிற்கு விற்பனையாவதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Maruti Suzuki Dzire

மாருதி சுஸுகி டிசையர் காரில், சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், சுஸுகி கனெக்ட் கனெக்டட் கார் தொழில்நுட்பம், 6 ஏர்பேக்குகள், கீலெஸ் எண்ட்ரி மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் என ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்படுகின்றன.

அத்துடன் குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) பெற்ற மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் காரும் டிசையர்தான். அதிநவீன வசதிகள் மற்றும் சிறப்பான பாதுகாப்பு ஆகிய சிறப்பம்சங்கள் உடன், நல்ல மைலேஜ் (Mileage) வழங்க கூடிய காராகவும் மாருதி சுஸுகி டிசையர் திகழ்கிறது.

டிசையர் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக மாருதி சுஸுகி நிறுவனம் கூறுகிறது. ஆனால் மாருதி சுஸுகி டிசையர் மிகவும் விலை குறைவானதாக உள்ளது. மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 6.26 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி டிசையர் காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 9.31 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை சிறப்பாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador) காருக்கு பிறகு, இந்திய சந்தையின் மிகவும் வெற்றிகரமான செடான் ரக காராக மாருதி சுஸுகி டிசையர் கருதப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், வரும் காலங்களில் மாருதி சுஸுகி டிசையர் விற்பனையில் இன்னும் பல்வேறு சாதனைகளை படைக்கும் என டிரைவ்ஸபார்க் தமிழ் தளம் உறுதியாக நம்புகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 13, 2026, 16:30 [IST]
English summary
Maruti suzuki dzire 30 lakh units sales milestone check all details here
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+