மாருதி பிரெஸ்ஸாவை விட ரெண்டரை லட்சம் குறைவான விலையில் எஸ்யூவி கார்! கொரியாகாரன் மார்க்கெட்டையே மிரள விட போறான்

இந்திய சந்தையில் கடந்த சில ஆண்டுகளாகவே எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களுக்கு (SUV Cars), வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஹேட்ச்பேக் (Hatchback) மற்றும் செடான் (Sedan) போன்ற மற்ற ரகத்தை சேர்ந்த கார்களை வாங்குவதை காட்டிலும், எஸ்யூவி ரக கார்களுக்குதான் வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர்.

ஆனால் எஸ்யூவி ரக கார்களின் விலை சற்று அதிகம். இதன் காரணமாக எஸ்யூவி கார்களை வாங்கும் முடிவை நீங்கள் தள்ளி போட்டு கொண்டிருந்தால், ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) உங்களுக்கு மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் (Most Affordable SUV Cars In India) ஒன்றாகும்.

Hyundai Exter Side Design

ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை தற்போதைய நிலையில் வெறும் 5.74 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) போன்ற மற்ற காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் விலையுடன் ஒப்பிடும்போது, மிகவும் குறைவு ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.26 லட்ச ரூபாயாக உள்ளது. மறுபக்கம் டாடா நெக்ஸான் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.31 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

Hyundai Exter Interior

எனவே மிகவும் குறைவான விலையில் ஒரு எஸ்யூவி ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ஹூண்டாய் எக்ஸ்டர் மிகவும் ஏற்றதாக இருக்கும். மிகவும் விலை குறைவானது என்றாலும் கூட, ஹூண்டாய் எக்ஸ்டர் காரில், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சம் இல்லை.

இதில், ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், ட்யூயல் கேமரா உடன் டேஷ்கேம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

அத்துடன் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ், பார்க்கிங் சென்சார்கள், அனைத்து இருக்கைகளுக்கும் 3 பாயிண்ட் சீட்பெல்ட் மற்றும் சீட்பெல்ட் ரிமைண்டர், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features) ஹூண்டாய் எக்ஸ்டர் கொண்டுள்ளது.

எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது. இருப்பினும் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாத விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் சரிவை சந்தித்துள்ளது. காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4,200 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5,361 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 1,161 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் விற்பனையில் 22 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. பொதுவாக புதிய மாடல் வரப்போகிறது என்றால், ஏற்கனவே விற்பனையில் உள்ள பழைய மாடலின் விற்பனை குறையும். இதன் காரணமாக ஹூண்டாய் எக்ஸ்டர் விற்பனையில் சரிவை சந்தித்திருக்கலாம். புதிய மாடலின் வருகைக்கு பின்னர், இந்திய சந்தையில் அதன் விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயரும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, March 13, 2026, 9:31 [IST]
English summary
Hyundai exter sales report february 2026 22 per cent down
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+