2014ம் ஆண்டின் சிறந்த மோட்டார்சைக்கிளுக்கான விருதை வென்றது ஜிடி!!
2014ம் ஆண்டின் காருக்கான விருதை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 வென்ற நிலையில், சிறந்த மோட்டார்சைக்கிளுக்கான விருதை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கான்டினென்டல் ஜிடி பெற்றுள்ள்ளது.
புதுமையான தொழில்நுட்பம், தரமான தயாரிப்புகளை மார்க்கெட்டிற்கு கொண்டு வருவதை ஊக்கப்படுத்தும் விதத்தில் சிறந்த கார் மற்றும் மோட்டார்சைக்கிளுக்கான விருது வழங்கப்படுகிறது.
ஜேகே டயர்ஸ் நிறுவனம் வழங்கிய 2014ம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன. கடுமையான போட்டிக்கு மத்தியில் 2014ம் ஆண்டின் சிறந்த மோட்டார்சைக்கிள் விருதை ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி பெற்றுள்ளது.

நடுவர் குழு
டாப் கியர் இந்தியா இதழின் கிரிஷ் கார்கெரா, ஸ்ரீராம் நாராயணன், ஓவர் டிரைவ் இதழின் விக்ராந்த் சிங், பெர்ட்ராந்த் டிசோசா மற்றும் சுப்ரப்ராத மார்மர், ஆட்டோ பைல்டு இதழின் யோகேந்திர பிரதாப், ராகுல் கோஷ், மோட்டாரிங் இதழின் பாப்லோ சாட்டர்ஜி, ரோஹின் நாகராணி, கார்த்திக் வாரே, கார், பைக் இண்டியா இதழின் அஸ்பி பதேனா, சார்மத் கதிரி, எவோ இண்டியாவின் சிரிஷ் சந்திரன் மற்றும் ஹிண்டு பிசினஸ் லைன் இதழின் முரளிதரன் சுவாமிநாதன் ஆகிய பிரபல பத்திரிக்கையாளர்கள் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

9 மாடல்கள்
2014ம் ஆண்டு விருதுக்காக மஹிந்திரா செஞ்சூரோ உள்பட 9 மாடல்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், இறுதி சுற்றில் கேடிஎம் டியூக் 390, ஹயோசங் அக்குலா ப்ரோ மற்றும் ராயல் என்ஃபீல்டு ஜிடி ஆகிய மோட்டார்சைக்கிள்கள் இடம்பிடித்தன.

மதிப்பீடு
விலை, எரிபொருள் சிக்கனம், வடிவமைப்பு, சொகுசு, பாதுகாப்பு, செயல்திறன், தொழில்நுட்பம், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு, நடைமுறை பயன்பாடு, இந்திய சாலைகளுக்கு ஏற்ற தகவமைப்புகள், நிலைத் தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விருதுக்கான சிறந்த பைக் தேர்வு செய்யப்பட்டது.

தேர்வு
பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் நீதிபதிகள் வழங்கிய மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து அதிக மதிப்பெண்களை பெற்ற மாடல் சிறந்த பைக் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. மேலும், மொத்தம் 9 நடுவர்களில் 6 பேர் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிளுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கியிருந்தனர்.

நடுவர் கருத்து
நடுவர் குழுவுக்கு தலைமை வகித்த விக்ராந்த் சிங் கூறுகையில்,' இறுதி சுற்றில் 3 மாடல்களும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக இருந்தன. இது நடுவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. அக்குலா ப்ரோ பைக் சொகுசாகவும், அதிக டார்க்கையும் வழங்குகிறது. டியூக் 390 பைக் வேகத்திலும், பெர்ஃபார்மென்சிலும் சிறப்பாக இருந்தது. செஞ்சூரோவில் ஏகப்பட்ட சிறப்பு வசதிகள் உள்ளன. அதேவேளை, தோற்றம், ஓட்டுதல் தரம் உள்ளிட்டவற்றில் ராயல் என்ஃபீல்டு மிகச்சிறப்பாக இருந்ததே விருதுக்கு தேர்வாகியது," என்று கூறினார்.

டிரைவ்ஸ்பார்க் மதிப்பீடு
ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்.
ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி.,யின் மறுபக்கம்.


Click it and Unblock the Notifications








