இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற டூவீலர்கள் இவை தான்

By Balasubramanian

இந்திய டூவீலர் மார்கெட் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. புதிது புதிதாக பல மாடல் பைக்குள் விற்பனைக்கு வந்தாலும் பல காலமாக தொடர்ந்து நல்ல விற்பனையில் இருந்து வரும் பைக்குகளின் எண்ணிக்கை ஏராளம். இந்தியர்களுக்கு ஒரு பைக் மனதிற்கு நெருக்கமாகிவிட்டால் அவர்களையும் அந்த பைக்கையும் பிரிக்கவே முடியாது. இப்படியாக தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல விற்பனையில் உள்ள பைக்குளை பற்றி கீழே பார்ப்போம்.

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற டூவீலர்கள் இவை தான்

பஜாஜ் பல்சர் 150,180

பஜாஜ் நிறுவனம் பல்சர் பைக்கை கடந்த 2001ம் ஆண்டு அறிமுகமாகியது. அறிமுகமானது முதல் நல்ல விற்பனையை பெற்று வருகிறது. அவ்வப்போது சில அப்டேட்களையும் பெற்று விற்பனையை தக்க வைத்து வருகிறது. முதலில் வந்த பல்சர் பைக்கிற்கும் இன்று விற்பனையாகும் பல்சர் பைக்கிற்கும் எக்கசக்க வித்தியாசங்கள் இருந்தாலும் அடிப்படை டிசைன்கள் ஒரே மாதிரியாக தான் இருக்கின்றன.

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற டூவீலர்கள் இவை தான்

ராயல் என்பீல்டு புல்லட்

கடந்த 1948ம் ஆண்டு அறிமுகமாகிய பைக் தான் ராயல் என்பீல்டு புல்லட், இது தான் உலகிலேயே நீண்ட நாட்கள் விற்பனையில் உள்ள பைக். தற்போது விற்பனையாகும் புல்லட் சில அப்டேட்களை பெற்றாலும் பழைய புல்லட்டின்லுக்கை இழக்கவில்லை. தற்போதும் இதன் டிசைன் இந்த காலத்திற்கு ஏற்ப சிறப்பாக இருக்கிறது. இன்றும் இந்த பைக் பல இளைஞர்களுக்கு கனவு பைக்காக உள்ளது.

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற டூவீலர்கள் இவை தான்

டிவிஎஸ் அப்பாச்சி

பஜாஜ் நிறுவனத்தின் பல்சருக்கு போட்டியாக டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி பைக்கை வெளியிட்டது. இந்த அப்பாச்சி பைக் சுஸூகி ஃபியரோ 150 பைக்கை ஒத்து உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அப்பாச்சியில் புதிய மாடல் பைக்காக ஆப்பாச்சி ஆர்ஆர்310 பைக் வெளியிடப்பட்டுள்ளது. இது நேரடியாக பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்குடன் போட்டி போடுகிறது. இந்த பைக் பல்வேறு அப்டேட்களை பெற்றாலும் ஃபியரோ பைக்கின் லுக் இன்றும் தெரிகிறது.

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற டூவீலர்கள் இவை தான்

ஹோண்டா ஆக்டிவா

2001ம் ஆண்டு அறிமுகமாகி இன்றும் தொடர்ந்து விற்பனையில் இருந்து வருகிறது ஹோண்டா ஆக்டிவா, இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் ஸ்கூட்டர் இது தான். இந்த ஸ்கூட்டரும் பல அப்டேட்களை பெற்றுவிட்டாலும் தொடர்ந்து முதல் பைக்கின் லுக்கை ஒத்த லுக் இன்றும் இருக்கிறது.

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற டூவீலர்கள் இவை தான்

ஹோண்டா யுனிகார்ன்

நீண்ட காலமாக நல்ல விற்பனையில் இருக்கும் அடுத்த பைக் ஹோண்டா யூனிகார்ன் தான் இந்த பைக் பெரிய அட்டேட்களை ஒன்றும் பெறவில்லை. இந்த பைக்கின் மைலேஜ், நீடித்த உழைப்பு, சொகுசான வசதி ஆகியன இதன் பாப்புலாராட்டியை குறைய விடாமல் பாதுகாக்கிறது. இந்த பைக் பல ஆண்டுகளாக இளைஞர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. ஹோண்டா நிறுவனம் இதில் அப்டேட்களை விட்டால் மேலும் பல ஆண்டுகள் விற்பனையில் நீடித்து நிற்கும்.

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற டூவீலர்கள் இவை தான்

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒரே க்ரூஸர் பைக் இது தான். இதுவும் அறிமுகமாக பல ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து நீடித்து உழைக்கிறது. மற்ற பைக்குகளை போல தண்டர்பேர்டிலும் அவ்வப்போது அப்டேட்கள் வந்து கொண்டே தான் இருக்கிறத. இந்த பைக்கின் டிசைன் மற்றும் ஆர்க்கி டெக்ஸர் ஒரே மாதிரி தான் இருக்கிறது.

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற டூவீலர்கள் இவை தான்

ஹீரோ ஸ்பெளண்டர்

ஹீரோ ஸ்பெளண்டர் பைக்கை பொருத்தவரை 1994ல் முதன் முதலில் அறிமுகமானது. அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியான லுக்கை தான் பெற்றுள்ளது. சில காஸ்மெட்டிக் அப்டேட்களை மட்டும் தான் பெற்றுள்ளது. இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் பைக் இது தான். அதிக மைலேஜ் மற்றும் நீடித்த உழைப்பு தான் இந்த பைக்கின் வெற்றிக்கு முக்கியமானது. இந்த பைக்கில் பல முக்கிய அப்டேட்களுடன் ப்ரஷ் லுக்காக வெளியிட்டால் விற்பனை இன்னும் அதிகரிக்கலாம்.

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற டூவீலர்கள் இவை தான்

ஹீரோ பேஷன்

ஹீரோ நிறுவனத்தின் அடுத்த வாகனம் தான் இந்த பேஷன் இந்த பைக்கும் 2001ல் வெளியானது. இன்று வரை பல அப்டேட்களை இந்த பைக் பெற்றுவிட்டது. தொடர்ந்து நல்ல விற்பனையில் இருக்கும் இந்த பைக்கிற்கான தேவை இன்னும் சில ஆண்டுகளுக்கு இருக்கும்.

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற டூவீலர்கள் இவை தான்

பஜாஜ் டிஸ்கவர்

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் போல டிஸ்கவர் பைக்கும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நல்ல விற்பனையில் இருந்து வருகிறுது. முதலில் அறிமுகமான டிஸ்கவரும் இரண்டாம் தலைமுறை டிஸ்கவர் பைக்கும் தொடர்ந்து விற்பனையில் இருந்து தான் வருகிறது. அதாவது 110 மற்றும் 125 சிசி பைகஅகள் விற்பனையாகிறது. பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கில் தொடர்ந்து சில அப்டேட்களை செய்து கொண்டே தான் வருகிறது. மக்கள் மத்தியில் அடுத்த தலைமுறை டிஸ்கவருக்கான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற டூவீலர்கள் இவை தான்

பஜாஜ் அவெஞ்சர்

பஜாஜ் அவெஞ்சர் பைக் பஜாஜ் எலிமினேட்டர் பைக்கை ஒத்து டிசைன் செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் உள்ள ஒரே க்ரூஸியர் பைக் இது தான். இந்த பைக்கும் அறிமுகமாகி 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. பல்சர், டிஸ்கவர் போல அவெஞ்சரும் பஜாஜ் நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை ஈட்டி தரும் பைக்காக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. ஹோண்டா நிறுவன கார்களின் விலை ஆக.,முதல் உயர்வு
  2. எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் இறங்கியது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்!!
  3. முதல்முறையாக கேமரா கண்ணில் சிக்கிய ஹூண்டாய் மினி எஸ்யூவி!!
  4. சீட்டாக் ஸ்கூட்டர் ரீ லான்ச் விவகாரத்தில் தமிழ் பட சிவா பாணியை பின்பற்றும் பஜாஜ்..
  5. மல்லையாவின் ஃபோர்ஸ் இந்தியா ஃபார்முலா -1 அணி விற்பனை!!

More from DriveSpark

Article Published On: Thursday, July 26, 2018, 12:06 [IST]
English summary
List of bikes in sales for more than 15 years. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+