சேதக் ஸ்கூட்டர் ரீ லான்ச் விவகாரத்தில் தமிழ் பட சிவா பாணியை பின்பற்றும் பஜாஜ்..

இந்திய மக்களிடையே பிரபலமாக விளங்கிய பஜாஜ் சேதக் ஸ்கூட்டர் மறு அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதை பஜாஜ் நிறுவனம் மறுத்துள்ளது.

By Arun

இந்திய மக்களிடையே பிரபலமாக விளங்கிய பஜாஜ் சேதக் ஸ்கூட்டர் மறு அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதனால் போட்டியாளர்கள் கலக்கம் அடைந்திருந்த நிலையில், ஸ்கூட்டர் செக்மெண்ட் விவகாரத்தில் பஜாஜ் நிறுவனத்தின் உறுதியான நிலைப்பாட்டை அதன் நிர்வாக இயக்குனர் ராஜிவ் பஜாஜ் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போட்டியாளர்களை நடுங்க செய்த சீட்டாக் ஸ்கூட்டர் வருமா? வராதா? பஜாஜ் நிலைப்பாடு இதுதான்..

ஒரு காலத்தில் 50 சதவீத மார்க்கெட் ஷேர் உடன், இந்திய ஸ்கூட்டர் செக்மெண்டில் கோலோச்சி கொண்டிருந்த நிறுவனம் பஜாஜ். இதற்கு சேதக் ஸ்கூட்டரும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல. கடந்த 1972ம் ஆண்டு முதல், சேதக் ஸ்கூட்டரை பஜாஜ் நிறுவனம் உற்பத்தி செய்து வந்தது.

போட்டியாளர்களை நடுங்க செய்த சீட்டாக் ஸ்கூட்டர் வருமா? வராதா? பஜாஜ் நிலைப்பாடு இதுதான்..

மிகவும் மலிவான விலையில் கிடைத்த தரமான ஸ்கூட்டர் என்பதால், நாடு முழுவதும் வெகு விரைவிலேயே சேதக் பிரபலமானது. பொதுமக்கள் இதனை ஹமாரா பஜாஜ் (நம்ம பஜாஜ்) என அன்போடு அழைத்தனர். அந்த கால கட்டத்தில், நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் சேதக் ஸ்கூட்டர்கள் நிரம்பியிருந்தன.

போட்டியாளர்களை நடுங்க செய்த சீட்டாக் ஸ்கூட்டர் வருமா? வராதா? பஜாஜ் நிலைப்பாடு இதுதான்..

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பஜாஜ் சேதக் ஸ்கூட்டர், ஏறத்தாழ 34 ஆண்டுகளாக உற்பத்தியில் இருந்து வந்தது. கடைசியாக கடந்த 2006ம் ஆண்டில்தான் சேதக் ஸ்கூட்டரின் உற்பத்தியை பஜாஜ் நிறுவனம் நிறுத்தியது.

போட்டியாளர்களை நடுங்க செய்த சீட்டாக் ஸ்கூட்டர் வருமா? வராதா? பஜாஜ் நிலைப்பாடு இதுதான்..

ஆனால் இன்று இந்திய ஸ்கூட்டர் செக்மெண்டின் நிலையே வேறு விதமாக உள்ளது. அன்று 50 சதவீதமாக இருந்த பஜாஜ் நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர், இன்று வெறும் 15 சதவீதமாக குறைந்து விட்டது. இடைப்பட்ட நாட்களில் ஸ்கூட்டர் செக்மெண்டில், பஜாஜ் நிறுவனம் பெரும் சரிவை சந்தித்து விட்டது.

போட்டியாளர்களை நடுங்க செய்த சீட்டாக் ஸ்கூட்டர் வருமா? வராதா? பஜாஜ் நிலைப்பாடு இதுதான்..

இந்திய ஸ்கூட்டர் செக்மெண்டில், ஹோண்டா நிறுவனம்தான் தற்போது ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது. இந்திய மார்க்கெட்டில் இன்று அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் என்றால், அது ஹோண்டா ஆக்டிவாதான். விற்பனை எண்ணிக்கையில் வேறு எந்த ஸ்கூட்டராலும், ஆக்டிவாவின் நிழலை கூட சீண்ட முடிவதில்லை.

போட்டியாளர்களை நடுங்க செய்த சீட்டாக் ஸ்கூட்டர் வருமா? வராதா? பஜாஜ் நிலைப்பாடு இதுதான்..

இந்த சூழலில், ஸ்கூட்டர் செக்மெண்டில் இழந்த இடத்தை பிடிக்க பஜாஜ் முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமாக விளங்கிய சேதக் ஸ்கூட்டரை மீண்டும் மார்க்கெட்டிற்கு கொண்டு வர பஜாஜ் முடிவு செய்திருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

போட்டியாளர்களை நடுங்க செய்த சீட்டாக் ஸ்கூட்டர் வருமா? வராதா? பஜாஜ் நிலைப்பாடு இதுதான்..

மறு அவதாரம் எடுக்கும் சேதக், பிரீமியம் ஸ்கூட்டர் செக்மெண்டில் நிலை நிறுத்தப்படும் என வெளியாகும் தகவல்களால் போட்டியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 2019ம் ஆண்டில் லான்ச் செய்யப்படலாம் என கூறப்படும் அடுத்த தலைமுறை சேதக் ஸ்கூட்டரின் விலை ரூ.70,000 இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

போட்டியாளர்களை நடுங்க செய்த சீட்டாக் ஸ்கூட்டர் வருமா? வராதா? பஜாஜ் நிலைப்பாடு இதுதான்..

சேதக் ஸ்கூட்டரின் மறு அவதாரம் குறித்த தகவல்கள், கடந்த வாரம் முதல் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இதனால் அதிகம் கலக்கம் அடைந்திருப்பது ஹோண்டாதான். ஏனெனில் இன்று இந்தியாவின் நம்பர்-1 ஸ்கூட்டராக உள்ள ஹோண்டா ஆக்டிவா உடன்தான், பஜாஜ் சேதக் நேரடியாக போட்டியிடும்.

போட்டியாளர்களை நடுங்க செய்த சீட்டாக் ஸ்கூட்டர் வருமா? வராதா? பஜாஜ் நிலைப்பாடு இதுதான்..

இதுதவிர பியாஜியோ வெஸ்பா மற்றும் ஆப்ரிலா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர்களின் டாப் வேரியண்ட்கள் உடனும், பஜாஜ் சேதக் நேருக்கு நேராக போட்டியிடும் சூழல் உருவானது. சேதக் ஸ்கூட்டருக்கு ஏற்கனவே இருந்த மாஸ் மார்க்கெட் காரணமாக, சம்பந்தப்பட்ட போட்டியாளர்கள் நடுங்கி போயினர்.

போட்டியாளர்களை நடுங்க செய்த சீட்டாக் ஸ்கூட்டர் வருமா? வராதா? பஜாஜ் நிலைப்பாடு இதுதான்..

எனினும் ஆட்டோமொபைல் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த செய்தி குறித்து, உறுதியான பதில் எதையும் பஜாஜ் வழங்கவில்லை. சேதக் ஸ்கூட்டர் வருமா? வராதா? என்பது தொடர்பான பஜாஜ் நிறுவனத்தின் பதிலை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

போட்டியாளர்களை நடுங்க செய்த சீட்டாக் ஸ்கூட்டர் வருமா? வராதா? பஜாஜ் நிலைப்பாடு இதுதான்..

சேதக் ஸ்கூட்டர் தற்போதைக்கு வரப்போவதில்லை. பஜாஜ் நிறுவனம் தற்போது, எந்தவிதமான ஸ்கூட்டர்களையும் தயாரிக்கும் பணியில் ஈடுபடவில்லை. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜிவ் பஜாஜ் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

போட்டியாளர்களை நடுங்க செய்த சீட்டாக் ஸ்கூட்டர் வருமா? வராதா? பஜாஜ் நிலைப்பாடு இதுதான்..

இதுகுறித்து ராஜிவ் பஜாஜ் வெளியிட்ட அறிக்கையில், ''ஸ்கூட்டர்களுடன் இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பது அல்லது ரிஸ்க் எடுத்து சர்வதேச மார்க்கெட்டிற்கு மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்வது என்ற இரு விஷயங்களில் ஒன்றைதான் தேர்ந்தெடுக்க முடியும். இதில், ரிஸ்க் எடுப்பது என நாங்கள் முடிவெடுத்துள்ளோம்'' என கூறப்பட்டுள்ளது.

போட்டியாளர்களை நடுங்க செய்த சீட்டாக் ஸ்கூட்டர் வருமா? வராதா? பஜாஜ் நிலைப்பாடு இதுதான்..

ரிஸ்க் எடுத்து சர்வதேச மார்க்கெட்டிற்கு மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்வது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளதன் மூலம், ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்வதில் பஜாஜ் நிறுவனத்திற்கு தற்போதைக்கு நாட்டம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

போட்டியாளர்களை நடுங்க செய்த சீட்டாக் ஸ்கூட்டர் வருமா? வராதா? பஜாஜ் நிலைப்பாடு இதுதான்..

அத்துடன் சேதக் ஸ்கூட்டரின் மறு அவதாரம் என கடந்த ஒரு வாரமாக வெளிவந்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர், குறைந்தபட்சம் தற்போதைக்கு சேதக்கின் போட்டியை எதிர்கொள்ள வேண்டியதில்லை.

போட்டியாளர்களை நடுங்க செய்த சீட்டாக் ஸ்கூட்டர் வருமா? வராதா? பஜாஜ் நிலைப்பாடு இதுதான்..

ஸ்கூட்டர் செக்மெண்டிற்குள் மீண்டும் நுழையும் எண்ணம் பஜாஜ் நிறுவனத்திற்கு தற்போதைக்கு இல்லை என்பதால், போட்டி நிறுவனங்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டுள்ளன. பஜாஜ் நிறுவனம் கடைசியாக லான்ச் செய்த ஆட்டோமெட்டிக் ஸ்கூட்டர் கிரிஸ்டல். இது எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியாளர்களை நடுங்க செய்த சீட்டாக் ஸ்கூட்டர் வருமா? வராதா? பஜாஜ் நிலைப்பாடு இதுதான்..

போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு, வாகனம் ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், ஸ்கூட்டர்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. ஆனால் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்வதில், பஜாஜ் நிறுவனத்திற்கு நாட்டமில்லை.

போட்டியாளர்களை நடுங்க செய்த சீட்டாக் ஸ்கூட்டர் வருமா? வராதா? பஜாஜ் நிலைப்பாடு இதுதான்..

ஆனால் பெட்ரோலில் இயங்கும் வழக்கமான ஸ்கூட்டர்களை உருவாக்குவதில்தான் பஜாஜ் நிறுவனத்திற்கு ஆர்வம் இல்லையே தவிர, எலக்ட்ரிக் டூவீலர்களில் அப்படி சொல்லி விட முடியாது. வரும் நாட்களில் எலக்ட்ரிக் டூவீலர்களை லான்ச் செய்ய பஜாஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

போட்டியாளர்களை நடுங்க செய்த சீட்டாக் ஸ்கூட்டர் வருமா? வராதா? பஜாஜ் நிலைப்பாடு இதுதான்..

2020ம் ஆண்டிற்கு முன்னதாக எலக்ட்ரிக் டூவீலர்களை லான்ச் செய்து விட பஜாஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் லான்ச் செய்யப்படுமா? என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

போட்டியாளர்களை நடுங்க வைத்த சீட்டாக் ஸ்கூட்டர் வருமா? வராதா? பஜாஜ் நிலைப்பாடு இதுதான்..

ஒரு சில வாகனங்கள் மீண்டும் ரீ லான்ச் செய்யப்பட வேண்டும் என வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு வாகனமாகதான் சேதக் ஸ்கூட்டரும் உள்ளது. சேதக் ரீ லான்ச் செய்யப்பட உள்ளதாக வெளியான தகவல்களால், அந்த ஸ்கூட்டர் ஆர்வலர்கள் உற்சாகமடைந்தனர்.

போட்டியாளர்களை நடுங்க வைத்த சீட்டாக் ஸ்கூட்டர் வருமா? வராதா? பஜாஜ் நிலைப்பாடு இதுதான்..

ஆனால் தமிழ் பட சிவா பாணியில் ப்ளீஸ் என்ன விட்றுங்க.. எனக்கூறி பஜாஜ் நிறுவனம் பின்வாங்கியுள்ளது. இதனால் சேதக் ஸ்கூட்டரை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.

English summary
Bajaj says ‘no' to scooters. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X