ரசிகர்களின் பாச மழையால் மீண்டும் விற்பனைக்கு வந்த மஹிந்திரா கார்! புக்கிங் தொடங்கியதால் உற்சாகம்!
மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் (Mahindra BE 6 Batman Edition) மாடலை மஹிந்திரா நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஏற்கனவே விற்பனையில் உள்ள மஹிந்திரா பிஇ 6 எலெக்ட்ரிக் காரின் லிமிடெட் எடிசன் (Limited Edition) மாடல்தான் இது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
லிமிடெட் எடிசன் என்பதால், 999 பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என, மஹிந்திரா நிறுவனம் அறிவித்தது. 999 பேருக்கு மட்டுமே கிடைக்கும் என்பதால், மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடலுக்கு மிகப்பெரிய 'டிமாண்ட்' உருவானது. இதன் காரணமாக வெறும் 135 வினாடிகளிலேயே (2 நிமிடங்கள் மற்றும் 15 வினாடிகள்), 999 மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்களும் விற்று தீர்ந்தன.

இது இந்த காரை வாங்கலாம் என நினைத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே மஹிந்திரா நிறுவனம் பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடலை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என அவர்கள் சமூக வலை தளங்களில் கோரிக்கை விடுத்தனர்.
இதை பரிசீலனை செய்த மஹிந்திரா நிறுவனம், வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று, பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடலை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது, அதன் விலை 27.79 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இம்முறை 28.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 70 ஆயிரம் ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் மார்ச் 10ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு தொடங்கும் என மஹிந்திரா நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்ட்டிருந்தது.
அதன்படி இன்று காலை சரியாக 11 மணிக்கு, மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடலுக்கு, முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கின. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில், பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இம்முறை ஒரு நாள் முழுவதும் 'புக்கிங் விண்டோ' திறந்திருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதே நேரத்தில் மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசனை, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகள், சரியாக ஒரு மாதம் கழித்து, அதாவது வரும் ஏப்ரல் 10ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளன.
மஹிந்திரா பிஇ 6 எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டான பேக் த்ரீ (Pack Three Variant) அடிப்படையில், பேட்மேன் எடிசன் மாடலை மஹிந்திரா நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதில், 79 kWh பேட்டரி தொகுப்பு (Battery Pack) வழங்கப்பட்டுள்ளது. இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 683 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் உடன், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு மற்றும் 7 ஏர்பேக்குகள் போன்ற ஏராளமான அதிநவீன பாதுகாப்பு வசதிகளும், மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடலில் வழங்கப்பட்டுள்ளன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா நிறுவனம் அதன் மற்ற எலெக்ட்ரிக் கார்களான மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e) மற்றும் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9S) போன்ற எலெக்ட்ரிக் கார்களிலும், பேட்மேன் எடிசனை விற்பனைக்கு அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








