கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய பஜாஜ் பல்சர் RS200 பைக் அறிமுகம்!

இந்தியாவில் ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட பைக்குகளுக்கு இளைஞர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில், பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 தனது தனித்துவமான வடிவமைப்பால் நீண்ட காலமாக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. தற்போது மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இந்த பைக் 2026 மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் வெளிப்புற வடிவமைப்பை பெரிய அளவில் மாற்றாமல், ஓட்டுனர் அனுபவம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதில் பஜாஜ் கவனம் செலுத்தியுள்ளது. புதிய டிஜிட்டல் திரை, ரைடிங் மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் போன்ற வசதிகள் இந்த பைக்கின் முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன.

Bajaj Pulsar RS200

2026 மாடலாக வந்துள்ள இந்த பல்சர் ஆர்எஸ்200 பைக்கிற்கு ரூ.1,98,441 என்ற எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.17,000 வரை விலை அதிகரித்துள்ள நிலையில், கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் ஹார்டுவேர் அப்டேட்டுகள் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

இந்த பைக்கில் அதே 199.5 சிசி, ஒற்றை சிலிண்டர், லிக்யூடு கூல்டு எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எலக்ட்ரானிக் த்ராட்டில் பாடி (ETB) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், எஞ்சின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அதிகபட்சமாக 25.5 எச்பி சக்தியை வெளிப்படுத்துகிறது. முந்தைய மாடலில் பவர் அவுட்புட் 24.5 எச்பி என்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிகபட்ச டார்க் திறன் 18.7 என்எம் என்ற அளவில் தொடர்ந்து இருக்கிறது. இந்த எஞ்சின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Bajaj Pulsar RS200

புதிய ஆர்எஸ்200 பைக்கின் முக்கியமான அப்டேட்டாக ரைடிங் மோடுகள் அமைந்துள்ளன. ஸ்போர்ட், ரோடு, ரெயின், ஆஃப்-ரோடு மற்றும் டூர் என ஐந்து மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. சாலை நிலை மற்றும் ஓட்டுனரின் தேவைக்கு ஏற்ப எஞ்சின் செயல்பாட்டை மாற்றிக்கொள்ள இந்த வசதி உதவும். இதனால் நகரப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்ற வகையில் பைக்கை பயன்படுத்தலாம்.

இதனுடன் டிராக்ஷன் கன்ட்ரோல் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரமான சாலைகள் அல்லது குறைவான பிடிப்புள்ள தரைகளில் பின்புற சக்கரம் வழுக்குவதை கட்டுப்படுத்த இந்த அமைப்பு உதவும். மேலும் ஸ்போர்ட்ஸ் ஷிஃப்டர் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கியர் மாற்றும்போது கிளட்ச் பயன்பாட்டை குறைத்து வேகமாக கியர் மாற்ற முடியும்.

Also Read

சஸ்பென்ஷன் அமைப்பிலும் முக்கியமான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான டெலஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகளுக்கு பதிலாக 37 மிமீ யுஎஸ்டி (USD) ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம் முன்புற சஸ்பென்ஷனின் உறுதித்தன்மையை அதிகரித்து, பிரேக்கிங் மற்றும் வளைவுகளில் பைக்கை சிறப்பாக கையாள உதவும்.

பின்புற டயரிலும் புதிய மாற்றம் இடம்பெற்றுள்ளது. 140/70-R17 அளவிலான ரேடியல் டயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. டயர் அளவு மாறாமல் இருந்தாலும், ரேடியல் கட்டமைப்பு காரணமாக சாலை பிடிப்பு மற்றும் நிலைத்தன்மையில் முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வேகமான பயணங்களில் இந்த மாற்றங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

Also Read

பழைய கலர் எல்சிடி திரைக்கு பதிலாக புதிய 5 இன்ச் கலர் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் திரை வழங்கப்பட்டுள்ளது. இதில் கூகுள் மேப்ஸ் வழிகாட்டுதல்களை திரையில் காணும் வசதி இடம்பெற்றுள்ளது. இதனால் தனியாக மொபைல் போனைப் பார்த்துக்கொண்டே பயணிக்க வேண்டிய தேவை குறையும்.

மேலும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பிரேக் மற்றும் கிளட்ச் லீவர்கள், யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் வசதி, ஹசார்டு லைட் ஸ்விட்ச் ஆகியவை இடம்பெற்றுள்ளன. திடீரென பிரேக் பிடிக்கும்போது ஹசார்டு விளக்குகளை இயக்க உதவும் பானிக் பிரேக் அலர்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பின்புறம் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை கிடைக்க உதவுகிறது.

Article Published On: Sunday, November 22, 2026, 8:28 [IST]
English summary
2026 bajaj pulsar rs200 launched price features updates
மேலும்... #bajaj auto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out