ரூ.25.40 லட்சத்தில் பிஎம்டபிள்யூ ஆர் 12 G/S பைக் இந்தியாவில் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் தனது புதிய BMW R 12 G/S அட்வென்ச்சர் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பழமையான மோட்டார்சைக்கிள் வடிவமைப்பையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த பைக் நீண்டதூர சாலை பயணங்கள் மட்டுமின்றி ஆஃப்-ரோடு சாகசங்களுக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பைக்கிற்கு ரூ.25.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பைக் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புகழ்பெற்ற R 80 G/S மாடலை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 1980ம் ஆண்டு அறிமுகமான அந்த மோட்டார்சைக்கிள், அட்வென்ச்சர் பைக் பிரிவில் புதிய அடையாளத்தை உருவாக்கியது. அதன் பாரம்பரிய வடிவமைப்பை நினைவுபடுத்தும் வகையில் புதிய R 12 G/S மாடலில் உயரமான முன்பக்க மட்கார்டு, குறுகிய முன்பக்க கண்ணாடி அமைப்பு, தட்டையான இருக்கை மற்றும் பாக்ஸர் எஞ்சின் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

BMW R12 GS

BMW R 12 G/S பைக்கில் இரண்டை சிலிண்டர் கொண்ட 1,170 சிசி திறன் கொண்ட ஏர் மற்றும் ஆயில் கூல்டு பாக்ஸர் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 109 எச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. ஷாஃப்ட் டிரைவ் வசதி மூலம் பின்பக்க சக்கரத்திற்கு சக்தி கடத்தப்படுகிறது. இதன் எஞ்சின் அமைப்பு சீரான சக்தி வெளிப்பாட்டிற்கும் நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குறைந்த வேகத்தில் ஆஃப்-ரோடு பயணிக்கும்போது கிடைக்கும் டார்க், மலைப்பாதைகள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புகளில் ஓட்டுவதற்கு உதவியாக இருக்கும். அதிக டார்க் திறன் காரணமாக சவாலான பாதைகளிலும் மோட்டார்சைக்கிளை கட்டுப்படுத்தி இயக்க முடியும். இதன் உயரமான சைலென்சர் அமைப்பு மற்றும் பாக்ஸர் எஞ்சின் வடிவமைப்பு ஆகியவை பாரம்பரிய எண்டுரோ பைக் தோற்றத்தை மேலும் வலுப்படுத்துகின்றன.

Also Read

இந்த பைக்கின் முன்பக்கத்தில் 21 இன்ச் கிராஸ்-ஸ்போக் சக்கரம் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் 18 இன்ச் சக்கரம் இடம்பெறுகிறது. முன்பக்கத்தில் 45 மிமீ முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய USD ஃபோர்க்குகள் 210 மிமீ டிராவல் கொண்டதாக வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் 200 மிமீ பயண அளவு கொண்ட அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளது.

இந்தியாவில் எண்டுரோ பேக்கேஜ் மற்றும் கம்ஃபோர்ட் பேக்கேஜ் ஆகியவை வழங்கப்படுகின்றன. எண்டுரோ ஃபுட்பெக்ஸ், எஞ்சினை பாதுகாக்கும் கார்டு, ஹேண்டில் பார் ரைசர், ஆஃப்-ரோடு டயர்கள் உள்ளிட்டவை சாகச பயணத்திற்கு உதவுகின்றன. ஹேண்டில் பார் 20 மிமீ உயர்த்தப்பட்டுள்ளதால், நின்று கொண்டு பைக் ஓட்டும்போதும் வசதியாக இருக்கும்.

Also Read

இந்த பைக்கில் ரெயின், ரோடு, எண்டுரோ என மூன்று ரைடிங் மோடுகள் உள்ளன. எண்டுரோ பேக்கேஜ் மூலம் எண்டுரோ ப்ரோ மோடும் கிடைக்கிறது. Dynamic Traction Control, Engine Drag Torque Control மற்றும் BMW Motorrad ABS Pro ஆகிய பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், க்ளட்ச் பயன்படுத்தாமல் கியர் மாற்றும் Shift Assistant Pro, ஹீட்டட் கிரிப்ஸ், க்ரூஸ் கண்ட்ரோல், Hill Start Control மற்றும் அடாப்டிவ் ஹெட்லைட் வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த பைக்கானது ஒரே Pro வேரியண்ட்டில் Light White நிறத்தில் விற்பனை செய்யப்படுகிறது. சிவப்பு நிற இருக்கை மற்றும் பாரம்பரிய கிராஃபிக்ஸ் இதன் தோற்றத்தை மேலும் தனித்துவமாக்குகின்றன. இதன் எடை 229 கிலோவாகவும், இருக்கை உயரம் 875 மிமீ மற்றும் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 15.5 லிட்டராகவும் உள்ளது. இந்த பைக் CBU முறையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

BMW R 12 G/S பைக்கிற்கு ரூ.25.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு 3 ஆண்டுகள், வரம்பற்ற கிலோமீட்டர் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. கூடுதலாக நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டுகளுக்கு உத்தரவாதத்தை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. சாலை உதவி சேவையும் வழங்கப்படுகிறது. இந்த பைக்கின் விற்பனை தொடங்கியுள்ள நிலையில், டெலிவரிகளும் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Article Published On: Friday, November 20, 2026, 16:46 [IST]
English summary
Bmw r 12 g s launched india bmw r 12 g s price 1170cc adventure bike
மேலும்... #bmw motorrad
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out