கவாஸாகி நிஞ்சா பைக்கிற்கு யாரும் எதிர்பார்க்காத சலுகை! பல ஆயிரம் ரூபாயை மிச்சப்படுத்தலாம்!

கவாஸாகி இந்தியா நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் நிஞ்சா பைக்குகளுள் ஒன்றான நிஞ்சா 650 பைக்கிற்கு ஜூலை மாதத்திற்கான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜூலை மாதத்தை முன்னிட்டு ஏற்கனவே சில கவாஸாகி நிஞ்சா பைக்குகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வரிசையில் இணைந்துள்ள நிஞ்சா 650 பைக்கை பற்றியும், அதற்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையை பற்றியும் இனி இந்த தொகுப்பில் காணலாம்.

கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் அதன் பைக்குகளுக்கு அவ்வப்போது சலுகைகளை அறிவிப்பதை வாடிக்கையாகக் கொண்டு செயல்படுகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதத்திலும் மற்றும் இந்த ஜூலை மாதத்தை முன்னிட்டும் மூன்று விலைமிக்க நிஞ்சா பைக்குகளுக்கு சலுகைகளை அறிவித்தது. அதனை தொடர்ந்து கவாஸாகியின் விலை குறைவான அட்வென்ச்சர் வகை மோட்டார்சைக்கிளான வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கிற்கும் இலவச ஆக்ஸஸரீகள் அறிவிக்கப்பட்டதை பற்றி நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம்.

kawasaki ninja 650 july offer

இந்த நிலையில் தற்போது 2025ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மை25 நிஞ்சா 650 பைக்கிற்கு ஜூலை மாதத்திற்கான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கவாஸாகியின் மிடில்வெயிட் ஸ்போர்ட்-டூரர் மோட்டார்சைக்கிளான நிஞ்சா 650-ஐ இந்த ஜூலை மாதத்தில் வாங்குவோருக்கு பெரிய அளவிலான விண்ட்ஸ்கிரீன் இலவசமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை ஆனது குறுகிய கால சலுகையாக ஜூலை 31ஆம் தேதி வரையில் மட்டுமே வழங்கப்பட உள்ளது.

இந்த பெரிய அளவிலான விண்ட்ஸ்க்ரீன் ஆனது எதிர்காற்றை தடுத்து ரைடரை தூசி, துகள்களில் இருந்து பாதுகாப்பது மட்டுமின்றி, பைக்கின் ஏரோடைனமிக்ஸ் பண்பையும் மேம்படுத்தக் கூடியதாக உள்ளது. வேகமாக செல்லும்போது, பைக்கை ஓட்டுபவரின் ஹெல்மெட் மற்றும் மார்பு பகுதிகளில் வந்து மோதும் காற்றை இது தடுக்கும்.

kawasaki ninja 650 july offer

இதனால், வழக்கமான விண்ட்ஸ்கிரீனை காட்டிலும் இந்த அளவில் பெரியதான விண்ட்ஸ்க்ரீன் ஆனது தொலைதூர நெடுஞ்சாலை பயணங்களின் போது சவுகரியமாக இருக்கும். இந்த நீளமான விண்ட்ஸ்க்ரீனை தவிர்த்து இந்த ஜூலை மாத சலுகையாக வேறு எதுவும் நிஞ்சா 650 பைக்கிற்கு அறிவிக்கப்படவில்லை. இந்த நிஞ்சா பைக்கில் 649சிசி, லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஒன்றுக்கு ஒன்று இணையான இரு சிலிண்டர்களை கொண்ட இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 67 பிஎச்பி மற்றும் 64 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் சிஸ்டத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச் இணைக்கப்படுகிறது.

ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃபிரேமில் உருவாக்கப்படும் இந்த பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ப்ரீலோடு அட்ஜெஸ்மெண்ட் கொண்ட மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங் பணியை கவனிக்க முன் சக்கரத்தில் டபுள் டிஸ்க் பிரேக்குகளும், பின் சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன், ட்யூயல்-சேனல் ABS-உம் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கவாஸாகி நிஞ்சா 650 ஆனது ஆக்ரோஷமான பெர்ஃபார்மன்ஸை வழங்கினாலும், அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கும் ஏற்ற பைக் ஆகும். அதேநேரம் தொலைத்தூர பயணங்களுக்கும் ஏற்றதாக இருக்கும். இப்படிப்பட்ட இந்த பைக்கிற்கு நீளமான விண்ட்ஸ்கிரீன் அறிவிக்கப்பட்டு இருப்பது இந்த பைக்கை நோக்கி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்பது உறுதி.

அடிக்கடி தொலைத்தூர நெடுஞ்சாலை பயணங்களை மேற்கொள்பவர்கள் நிஞ்சா 650 பைக்கை இந்த ஜூலை மாதத்தில் இந்த நீளமான விண்ட்ஸ்க்ரீன் உடன் வாங்கலாம். இந்த குறுகிய கால சலுகை ஆனது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கவாஸாகி டீலர்ஷிப் ஷோரூம்களிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால், இந்த சலுகை குறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள கவாஸாகி ஷோரூமை தொடர்புக் கொள்ளவும்.

Article Published On: Thursday, July 16, 2026, 23:39 [IST]
English summary
Kawasaki india announced july month offer for ninja 650 motorcycle
மேலும்... #kawasaki #ninja 650 #special offer #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out