தமிழகத்தில் புதிதாக ரூ.1,000 கோடி முதலீடு செய்யும் ராயல் என்ஃபீல்டு: நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு!

நடுத்தர வகை மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் கோலோய்ச்சி வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அடுத்த கட்டமாக மின்சார இருசக்கர வாகனத் துறையிலும் தனது வர்த்தகத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக, ரூ.1,000 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் ஆலை அமைத்து பல தசாப்தங்களாக மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த புதிய முதலீடு மூலமாக மின்சார வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள், உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

RE Flying Flea FF C6

இந்த புதிய முதலீடு மூலமாக தமிழகத்தில் 500 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மின்சார வாகனத் தயாரிப்புக்கு தேவையான தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள் மற்றும் உற்பத்திப் பணியாளர்கள் என பல்வேறு பிரிவுகளில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதனால் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இந்த புதிய முதலீடு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

Also Read

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மின்சார இருசக்கர வாகனங்களை Flying Flea என்ற தனி பிராண்டின் கீழ் விற்பனை செய்து வருகிறது. மேலும், அந்த மின்சார வாகன விற்பனைக்காக தனி ஷோரூம்களையும் அமைத்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எனவே, எதிர்காலத்தில் ராயல் என்ஃபீல்டு வர்த்தகத்தில் மின்சார வாகனங்களும் மிக முக்கிய பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

RE Flying Flea FF C6

மேலும், ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் விற்பனை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருந்து வருகிறது. இதனை கருத்தில்கொண்டு உற்பத்தியையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, செய்யாறு உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.958 கோடியை முதலீடு செய்வதாக அந்நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த விரிவாக்கத்தின் மூலம் ஆண்டுக்கு 20 லட்சம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்யும் திறனை அடைய ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.

Also Read

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1,000 கோடி மின்சார வாகன தயாரிப்புக்கான முதலீடும், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்திற்கான முதலீடும் சேர்ந்து ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் எதிர்கால வர்த்தகத் தேவைகளை எளிதாக சமாளிக்கும் வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான போட்டி அதிகரித்து வரும் நிலையில், ராயல் என்ஃபீல்டு இப்போதே தனது எதிர்கால திட்டங்களுக்கு பெரிய அளவில் முதலீடு செய்வதுடன் தமிழகத்தின் பொருளாதார மற்றும் வேலைவாய்ப்புத் துறைக்கும் மிக முக்கியமானதாக இருக்கிறது.

Article Published On: Saturday, November 28, 2026, 17:03 [IST]
English summary
Royal enfield 1000 crore investment tamil nadu ev expansion
மேலும்... #royal enfield
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out