இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் நிறுவனத்தின் சொகுசு கார் மாடல்களில் உயரிய வகை சொகுசு செடான் கார் மாடலாக எக்ஸ்ஜே எல் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது, வடிவமைப்பு, தொழில்நுட்ப அளவில் பின்தங்கி இருந்தாலும், தனது பிராண்டு மதிப்பை வைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. ஆனால், காலம் கடந்த இதன் அசத்தலான டிசைன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.