?????? WR-V Facelift கார் 6 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ?????? WR-V Facelift காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ?????? WR-V Facelift காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ?????? WR-V Facelift காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ?????? WR-V Facelift கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
---|---|
எஸ்யூவி | Gearbox
|
₹ 8,69,657 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 9,89,988 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 9,90,018 |
வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
---|---|
எஸ்யூவி | Gearbox
|
₹ 9,99,971 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 11,14,877 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 11,14,880 |
கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
---|---|---|
பெட்ரோல் | 16.5 | |
டீசல் | 23.7 |
இந்தியாவின் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் சிறந்த தேர்வாக கருதும் மாடல்களில் ஒன்றாக ஹோண்டா டபிள்யூஆர்வி இருந்து வருகிறது. இந்த நிலையில், சந்தையில் அதிகரித்து வரும் போட்டியை மனதில் வைத்து புதுப்பொலிவுடன் ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியில் புதிய க்ரில் அமைப்பு இடம்பெற்றுள்ளது. ஹோண்டாவின் தனித்துவமான க்ரோம் பட்டையில் H என்ற சின்னத்துடன் இந்த க்ரில் அமைப்பு வசீகரமாக இருக்கிறது. இதற்கு இருபுறத்திலும் எல்இடி பகல்நேர விளக்குகள் கொண்ட புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. முன்புற பம்பரின் இருபுறத்திலும் பனி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த காரின் பக்கவாட்டில் சட்டென ஈர்க்கும் அம்சமாக, 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் உள்ளன. கருப்பு வண்ண பிளாஸ்டிங் க்ளாடிங்குடன் கூடிய வீல் ஆர்ச்சுகள், கருப்பு வண்ண ரூஃப் ரெயில்கள், பெரிய ஜன்னல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. கருப்பு பூச்சுடன் கூடிய டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள், சிறிய மாற்றங்கள் செய்யப்பட்ட பின்புற பம்பர் ஆகியவற்றுடன் வசீகரிக்கிறது.
ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 88 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை.
புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.5 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 23.7 கிமீ மைலேஜையும் வழங்கும் என அராய் சான்றளித்துள்ளது. இது சோதனை நிலைகளின் அடிப்படையிலான மைலேஜ் விபரமாக இருந்தாலும், நடைமுறையில் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 13 முதல் 15 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20 கிமீ.,க்கு குறையாமல் மைலேஜ் தரும் என்று நம்பலாம். இந்த காரில் 40 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் உள்ளது.
புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், கீ லெஸ் என்ட்ரி, 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், புஷ் பட்டன் ஸ்டார்ட் - ஸ்டாப் வசதிகள் உள்ளன.
இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரியர் வியூ பார்க்கிங் கேமரா, சீட் பெல்ட் வார்னிங் சிஸ்டம், ஹை ஸ்பீடு அலர்ட், சீட் பெல்ட் ப்ரீ டென்ஷனர், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.
புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியின் டிசைன் வாடிக்கையாளர்களை கவர்ந்த விஷயம். அதுபோன்றே, போதுமான அளவு தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் ஹோண்டா நிறுவனத்தின் நம்பகமான எஞ்சின் தேர்வுகளில் கிடைப்பதால், தொடர்ந்து தனி வாடிக்கையாளர் வட்டத்தை தக்க வைத்து வருகிறது. எனினும், இன்னும் செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகள், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவிக்கு மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்கள் போட்டியாக இருக்கின்றன.
ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவி எஸ்வி மற்றும் விஎக்ஸ் என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியில் பிரிமீயம் ஆம்பர் மெட்டாலிக், லூனார் சில்வர் மெட்டாலிக், மாடர்ன் ஸ்டீல் மெட்டாலிக், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், பிளாட்டினம் ஒயிட் பியர்ல் மற்றும் ரேடியண்ட் ரெட் மெட்டாலிக் ஆகிய 6 வண்ணத் தேர்வுகள் உள்ளன.