மதுரையில் பிஎம்டபிள்யூவின் தற்காலிக கார் ஷோரூம்: டெஸ்ட் டிரைவ் வாய்ப்பு
மதுரையில் பிஎம்டபிள்யூ தற்காலிக ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. வரும் 12ந் தேதி வரை இந்த ஷோரூமில் சாதாரண ஷோரூமில் கிடைக்கும் அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். கார் விற்பனையை அதிகரிக்கவும், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நாடு முழுவதும் தற்காலிகமாக இயங்கும் ஷோரூம்களை பிஎம்டபிள்யூ திறந்து வருகிறது.
வட இந்திய நகரங்களை தொடர்ந்து தற்போது 8வது நகரமாக மதுரையில் பிஎம்டபிள்யூவின் தற்காலிக ஷோரூம் திறக்கப்பட்டிருக்கிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சென்னை டீலராக செயல்படும் குன் நிறுவனம் இந்த ஷோரூமை திறந்துள்ளது. கார் ஷோரூம் முகவரி, சேவைகள், டெஸ்ட் டிரைவ் கார்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

முகவரி
பிகேஎம் கோ கார்ட், சிவகங்கை மெயின் ரோடு என்ற முகவரியில் விக்ரம் மருத்துவமனை அருகில் இந்த தற்காலிக ஷோரூம் செயல்படுகிறது.

சேவைகள் விபரம்
இந்த ஷோரூமில் கார் முன்பதிவு, டெஸ்ட் டிரைவ் மற்றும் நிதி உதவிகள் குறித்த அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

கார்கள் டிஸ்ப்ளே
இந்த ஷோரூமில் 4 கார்கள் பார்வைக்கு நிறுத்தப்பட்டுள்ளன.

டெஸ்ட் டிரைவ் வாய்ப்பு
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், 5 சீரிஸ், 6 சீரிஸ் கிரான் கூபே மற்றும் எக்ஸ்1 ஆகிய கார்களை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கலாம்

பிஎம்டபிள்யூ எக்ஸ் 1
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரின் விபரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் கூபே
பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் கூபே காரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








