பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் சிறப்பம்சங்கள்- ஒரு பார்வை

எஞ்சின்:
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இதில், பெட்ரோல் மாடலில் 180 கேவி பவரை வெளிப்படுத்தும் 1997 சிசி ட்வின்பவர் டர்போ 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
இதேபோன்று, டீசல் மாடலில் 135 கேவி திறனை வெளிப்படுத்தும் 1995சிசி ட்வின் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு எஞ்சின்களுமே அதிக மைலேஜ் வழங்கும் தொழில்நுட்பம் கொண்டது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களும் 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது. எஞ்சின் அடிப்படையில் 4 டீசல் வேரியண்ட்களிலும், ஒரே ஒரு பெட்ரோல் வேரியண்ட்டிலும் கிடைக்கிறது.
வெளிப்புறம்:
முன்பக்கம் சிறுநீரக வடிவம் கொண்ட கிரில்கள் மாற்றம் கண்டிருக்கிறது. ஹெட்லைட் வடிவமைப்பில் கைவைத்து முந்தைய மாடலைவிட அதிக பொலிவு கொண்டதாக மாற்றியுள்ளது பிஎம்டபிள்யூ. பானட்டிலும் கைவைத்து மாற்றியுள்ளது பிஎம்டபிள்யூ. மேலும், அனைத்து பகுதிகளிலும் அலுமினிய பினிஷிங் பளிச்சிடுவது கூடுதல் கவர்ச்சி.
பின்புறம் எல் வடிவ டேஞ்சர் லைட்டுகளும் கண்ணை கவர்கிறது. புகை போக்கி குழாய் குரோம் பினிஷ் கொண்டிருப்பதும் கண்களை கவர்கிறது. இலகு எடை கொண்ட ஸ்டீல் மற்றும் அலாய் பயன்படுத்தப்பட்டிருப்பதால், முந்தைய மாடலைவிட 45 கிலோ எடை குறைந்திருக்கிறது. அதேவேளை, பூட் ரூம் இடவசதி 20 லிட்டர் கூடுதலாகி தற்போது 480 லிட்டராக மாறியிருக்கிறது.
உட்புறம்
லெதர் சூழப்பட்ட ஸ்டீயரிங் வீல், டகோட்டா லெதர் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை 3 சீரிஸ் காரின் உட்புறத்தை அற்புதமான சொகுசாக காராக காட்டுகிறது. டேஷ்போர்டில் ஆங்காங்கே வுட் பினிஷிங் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஸ்விட்சுகளில் பிரத்யேக வண்ணங்களுடன் கூடிய விளக்குகள் ஒளிர்வது மனதை மயக்குகிறது. கிளைமேட் கன்ட்ரோல், ரேடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள் குரோம் பூச்சுடன் மிளிர்கிறது. இன்போடெயின்மென்ட் சிஸ்டம் சென்ட்ரல் கன்சோலின் மேலே நடுநாயகமாக அமர்ந்து பயணத்தை இனிதாக்க நான் தயார் என்கிறது. எலக்ட்ரிக் கன்ட்ரோல் கண்ணாடி கூரையும் முக்கிய அம்சம். முன்பை விட நீள, அகலத்தில் கூடுதலாகி இருப்பதால் உட்புற இடவசதி இன்னும் மேம்பட்டிருக்கிறது.
எரிபொருள் சிக்கனம்:
3 சீரிஸ் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 14.79 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 18.88 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவித்துள்ளது பிஎம்டபிள்யூ. ட்வின் டர்போ தொழில்நுட்பம் கொண்டுள்ளதால், அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் எனலாம்.
தவிர, ஈக்கோப்ரோ கியர் மோடில் வைத்து செல்லும்போது 20 சதவீதம் கூடுதல் மைலேஜை பெற முடியும். கம்போர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட்+ ஆகிய மோடுகளை டிரைவிங் ஸ்டைலுக்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்ளலாம். ஆட்டோ ஸ்டாப் ஸ்டார்ட் தொழில்நுட்பம் இருப்பதால், சிக்னல்களில் நிற்கும்போது தானாக எஞ்சின் அணைந்துவிடும். பின்னர், ஆக்சிலேட்டரில் லேசாக காலை வைத்து அழுத்தும்போது எஞ்சின் ஸ்டார்ட் ஆகிவிடும். இதன்மூலம், கூடுதல் எரிபொருள் சிக்கனம் பெறலாம்.
பாதுகாப்பு:
அனைத்து பகுதிகளிலும் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக், டிராக்ஷன் கன்ட்ரோல், பஞ்சர் இன்டிகேட்டர், சேஃப்டி பாடி ஷெல், தாமாகவே அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட சீட் பெல்ட் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன.
விலை விபரம்:
320டி : ரூ.28.90 லட்சம்
320டி ஸ்போர்ட்லைன்: ரூ.31.50 லட்சம்
320டி லக்ஸுரி லைன்: ரூ.31.50 லட்சம்
320டி லக்ஸுரி ப்ளஸ்: ரூ.36.90 லட்சும்
328ஐ ஸ்போர்ட் லைன்: ரூ.37.90 லட்சம்


Click it and Unblock the Notifications








