புதிய 6 சீரிஸ் கிரான் கூபே சொகுசு காரை அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ

ரூ.86.4 லட்சம் விலையில் 6 சீரிஸ் வரிசையில் புதிய கிரான் கூபே சொகுசு காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மும்பையில் நடந்த வண்ணமிகு விழாவி்ல் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 6 சீரிஸ் கிரான் கூபே டீசல் மாடலில் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். கூடுதல் தகவல்கள் படங்களுடன் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

டாப் என்ட் வேரியண்ட்

டாப் என்ட் வேரியண்ட்

6 சீரிஸ் வரிசையில் கடந்த ஆண்டு கூபே மற்றும் கன்வெர்ட்டிபிள் மாடல்களை பிஎம்டபிள்யூ விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டது. இந்த வரிசையில் கூடுதல் அம்சங்கள் கொண்ட வேரியண்ட்டாக 6 சீரிஸ் கிரான் கூபே வந்துள்ளது. படத்தில் புதிய 6 சீரிஸ் காருடன் பிஎம்டபிள்யூ தலைவர் பிலிப் வான் சார்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

புதிய 6 சீரிஸ் கார் அல்பைன் ஒயிட், பிளாக் சஃபையர், டீப் சீ புளூ, ஹவன்னா, ஓரியான் சில்வர், ஸ்பேஸ் கிரே, மினரல் ஒயிட், டைட்டானியம் சில்வர், வெர்மில்லியன் ரெட் ஆகிய வண்ணங்களில் வந்துள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

313 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜர் கொண்ட டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 18.18 கிமீ மைலேஜ் தரும் என பிஎம்டபிள்யூ தெரிவிக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

ஆடம்பரமான இன்டிரியர் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை கொண்ட டிரைவர் காக்பிட்.

அதிகபட்ச வேகம்

அதிகபட்ச வேகம்

இந்த கார் மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் படைத்தது.

Most Read Articles
English summary
BMW has launched the latest generation 6-series Gran Coupe priced at Rs.86.4 lakhs (ex-showroom Delhi) yesterday. The new model launch increases the already raging competition between German rivals BMW, Mercedes-Benz and Audi.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X