ரூ.1.97 லட்சத்தை குறைச்சிட்டா காரின் விலையில் ஒண்ணுமே இல்லயே! ஹோண்டா கார் கனவை நிஜமாக்கும் நேரம் இதுதான்!

ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India), நடப்பு 2026 மார்ச் மாதத்திற்கான சலுகைகளை அதன் கார்களுக்கு அறிவித்துள்ளது. கார்கள் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகள் என்னென்ன? இதன் மூலம் எந்த அளவிற்கான பணத்தை இந்த மார்ச் மாதத்தில் ஹோண்டா கார்களை வாங்குவதன் மூலம் மிச்சப்படுத்தலாம் என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா கார்ஸ் நிறுவனம் கடந்த பல வருடங்களாகவே இந்திய கார் மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகிறது. அந்த அளவிற்கு, சிட்டி (City) மற்றும் அமேஸ் (Amaze) கார்களை தவிர்த்து, மற்ற ஹோண்டா கார்கள் எதுவும் பெரியதாக கவனத்தை ஈர்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

honda cars india march month offers

இதனாலேயே இந்தியாவில் தனது கார் மாடல்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துக் கொண்ட ஹோண்டா நிறுவனம் தற்சமயம் அமேஸ், எலிவேட் (Elevate) மற்றும் சிட்டி என்கிற மூன்று கார் மாடல்களை மட்டுமே விற்பனை செய்கிறது. இருப்பினும், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக அவ்வப்போது சலுகைகளையும், தள்ளுபடிகளையும் ஹோண்டா அறிவித்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தை முன்னிட்டு இந்தியாவில் விற்பனை செய்யும் அதன் மூன்று கார்களுக்கும் ஹோண்டா சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் அதிகப்பட்சமாக சிட்டி இ:எச்இவி (e:HEV) ஹைப்ரீட் காருக்கு ரூ.1.97 லட்சம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.20 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த ஹோண்டா ஹைப்ரீட் காரில் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரீட் என்ஜின் பொருத்தப்படுகிறது.

honda cars india march month offers

அதுவே ஹைப்ரீட் அல்லாத சிட்டி பெட்ரோல் காருக்கு ரூ.1.56 லட்சம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.11.95 லட்சம் - ரூ.16.15 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படும் சிட்டி காரிலும் அதே 1.5 லிட்டர் என்ஜின் தான் எலெக்ட்ரிக் மோட்டார் இல்லாமல் வழங்கப்படுகிறது.

சிட்டி காருக்கு இணையான விலையில் விற்பனை செய்யப்படும் எலிவேட் காருக்கு ரூ.1.81 லட்சம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிட்டி கார்களில் பொருத்தப்படும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் ரூ.11.6 லட்சம்- ரூ.16.25 லட்சம் வரையிலான விலைகளில் எலிவேட் விற்பனை செய்யப்படுகிறது. ஹோண்டாவின் விலை குறைவான கார் மாடலான அமேஸ்-க்கு ரூ.68,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால், இது பழைய ஜென்ரேஷன் அமேஸ் காருக்கு அறிவிக்கப்பட்டது ஆகும். அதுவே, தற்போதைய தலைமுறை அமேஸ் காருக்கு ரூ.57,000 வரையிலான சலுகைகளே அறிவிக்கப்பட்டுள்ளன. ஜென்ரேஷன் மாறினாலும், இரண்டிலும் ஒரே மாதிரியான என்ஜினே வழங்கப்படுகிறது. இந்த வகையில் அமேஸ் காரில் பொருத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 90 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. தற்போதைய அமேஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.47 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையிலும், பழைய அமேஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.98 லட்சம்- ரூ.7.8 லட்சம் வரையிலும் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா கார்களை வாங்குவதற்கு நம்மில் நிறைய பேர் விரும்புகிறோம். அதனை நிஜமாக்க இதுதான் சரியான நேரம். குறிப்பாக, ஹோண்டாவின் ஹைப்ரீட் காரான சிட்டி இ:எச்இவி காருக்கு சுமார் ரூ.1.97 லட்சம் வரையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருப்பது அதன் விற்பனையை அதிகரிக்கும் என்பது உறுதி. இந்த புதிய சலுகைகள் அனைத்தும் மார்ச் 31 வரையில் மட்டுமே வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, March 6, 2026, 12:59 [IST]
English summary
Honda cars india announced march month offers for its cars check all details here
மேலும்... #honda #honda cars #honda amaze #offers #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+